நாமக்கல்… பத்திரிகையாளர் போனை பிடுங்கி சென்ற மாவட்ட செயலாளர் திமுக அக்கப்போர்…

புதியத்தலைமுறை கேமரா மேன் பொது வெளியில் வீடியோ எடுப்பதை தடுத்து நிறுத்தி…போனை பிடுங்கி சென்ற மாவட்ட செயலாளர் கே ஆர் என் ராஜேஷ்குமார்… பல்வேறு நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர்களை மட்டமாக பேசும் மா..செயலாளர்..சாறு… மோரு..

நாமக்கல் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கட்சி நிகழ்ச்சிகளிலும் நாமக்கல் மாவட்ட பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் எம் ராஜேஷ்குமார் மாவட்டத்தில் இருக்கும் தலைமை பத்திரிகையாளர்களை கேலி கிண்டலாக நினைத்து ஒரு சில கடுஞ்சொற்களை பொதுவெளியில் வெளியிட்டு வருகிறார்..

இந்த நிலையில் இன்று மதியம் சுபாஷ் சந்திர போஸ் நகரில் உள்ள 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு வசிக்கும் பொதுமக்கள் தனது அன்றாட தேவையான மின் இணைப்பு இல்லாமல் அரை நூற்றாண்டுக்கு மேலாக அவதிப்படுவதாக அவர்கள் குடியிருக்கும் பகுதியில் நீர் பிடிப்பு பகுதி என அரசு தரப்பில் தெரிவிக்கும் நிலையில்,

இன்று மதியம் பாராளுமன்றம் மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் ஆர் ராஜேஷ்குமார் சாலையில் செல்லும்போது அவரது வாகனத்தை குறிப்பிட்டு தங்களுடைய கோரிக்கைகளை பேச முன்வந்த போது ராஜேஷ்குமார் நீ எந்த நிருபர் கேமரால ஆப் பண்ணுங்க வீடியோ எடுக்காதீங்க என்று கூறிய நிலையில்..,

சம்பவ இடத்தில் புதிய தலைமுறை கேமராமேன் செல்வம் என்கிறவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும்போது கே ஆர் என் ராஜேஷ் குமார் தானாக முன்வந்து அவருடைய கையில் இருந்து செல்போனை பிடுங்கி வீடியோ எடுக்காத என சத்தமாக சண்டையிட்டு சென்றார்..

இது குறித்து அப்பகுதியில் வாழும் பொதுமக்களை சந்தித்து நியூஸ் தமிழ் 24 27 செய்தி என்ற சேனலில் பேட்டி எடுக்கும்போது பொதுமக்கள் கூறுகையில் நீங்கள் எங்களை பேட்டி எடுத்து போடலாம் உங்கள் உயிருக்கு ஆபத்து வரும் அதனால் நாங்கள் பேட்டி கொடுக்க மாட்டோம் என தெரிவித்தனர்… அவர்கள் அரசியல்வாதிகள் என்ன வேணாலும் செய்யலாம் என்று கூறினார்…

  • கௌரிசங்கர்