கடந்த ஐந்து ஆண்டுகள் தமிழக அறநிலையத்துறை மந்திரியாக இருந்த சேவூர் ராமச்சந்திரன், அதிமுகவில் மாநில அமைப்பு செயலாளராகவும் இருக்கிறார். மந்திரியாக இருந்தபோது நடத்திய கோயில் கும்பாபிஷேகங்கள் தான் மீண்டும் சேவூர் ராமச்சந்திரனை எம்எல்ஏ ஆக்கி அழகு பார்த்திருக்கிறது ஆரணி தொகுதி! எளிமையானவர், அமைதியானவர், அதிர்ந்து பேச மாட்டார் ஐந்து வருடங்கள் மந்திரியாக கோலோச்சிய போது அதிமுக நிர்வாகிகள் குறிப்பாக ஆரணி தெற்கு கஜேந்திரன், வடக்கு பிஆர்ஜி சேகர், மேற்கு ஆரணி வடக்கு கொளத்தூர் திருமால், தெற்கு வழக்கறிஞர் சங்கர் உள்ளிட்ட ஒன்றிய செயலாளர்களும், நகர பேரவை செயலாளர் பாரிபாபுவும், மாவட்ட பொருளாளர் இந்திரா லாரி கோவிந்தராஜ் ஆகியோர் அதிகமாகவே சேவூர் இராமசந்திரனால் ஆதாயம் அடைந்தவர்கள். விளைவு அனைவருக்கும் எம்எல்ஏ சீட் ஆசை வர, கட்சி தலைமையில் பணம் கட்டினர். போராடி சீட் வாங்கிய சேவூர் ராமசந்திரன் ஆதாயமடைந்த நிர்வாகிகளை முழுமையாக நம்பாமல் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, தன்னுடைய மகன்கள் சந்தோஷ்குமார், விஜயகுமார் இருவரையும் களமிறக்கி அவர்கள் மூலம் வாக்காளர்களை வளைத்தார் காமாட்சிஅம்மன் விளக்கு, டோக்கன் என்று வாக்காளர்களை குஷி படுத்தினார் ஆனாலும் தொகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் தேர்தலில் உள்ளடி வேலை செய்து போக்கு காட்டினர் பாமக நிர்வாகிகள் ஒருசிலர் பணத்தை வாங்கிக்கொண்டு பள்ளம் வெட்ட, விஷயத்தை தைலாபுரம் வரை கொண்டு போய் பஞ்சாயத்தை கூட்டி, அன்புமணி இராமதாஸ் வந்து பிரச்சாரம் செய்துவிட்டு போனார் அதன் பிறகே வெற்றியை எட்டிப் பிடித்தார். ஆக போராடித்தான் வென்றார். ஊரில் இருந்தால் தினமும் காலையில் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வச்சிகிட்டு உட்கார்ந்திடுவார், கட்சியினர், தொகுதி மக்கள் வருகையால் களை கட்டும் மதியம் கிளம்பிடுவார் மாலை ஆறு மணிக்கு வந்து இரவு எட்டுமணி வரை அலுவலகத்தில் இருப்பார் தொகுதிக்குள் கட்சியினர் தொகுதி மக்கள் வீட்டு விசேஷங்களுக்கு தவறாமல் கலந்து கொள்வார். அரசு அரசியல் நிகழ்ச்சிகளுக்கு ஆஜராகி விடுவார். மந்திரியாக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களில் முடியாமல் கிடப்பில் உள்ளவற்றை ஆய்வு செய்து விரைவுபடுத்துகிறார். விண்ணமங்கலத்தில் புதியதாக தன் பெயரில் கட்டியுள்ள பள்ளிக்கு அடிக்கடி விசிட் போவார் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசி அதிமுகவினரை மட்டுமல்ல திமுகவினரையும் சந்தோஷப்படுத்தி இருக்கிறார். நூறுநாள் சாதனை என்று எதுவும் சொல்ல முடியாது என்றாலும், சேவூர் இராமச்சந்திரன் செயல்பாடுகள் தொகுதியில் மோசமில்லை. வல்வரோ இல்லையோ? ஆனால் நல்லவர் என்கின்றனர் தொகுதிவாசிகள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply