விழுப்புரம்- சிவி சண்முகத்தின் பிடியில் ஒன்றிய செயலாளர்கள்… அதிருப்தியில் தொண்டர்கள்…?

விழுப்புரம்-
சிவி சண்முகத்தின் பிடியில் ஒன்றிய செயலாளர்கள்…
அதிருப்தியில் தொண்டர்கள்…?

விழுப்புரம் மாவட்டத்தில் தோல்வி முகம் காணும் அதிமுக…. சிவி சண்முகத்தின் பிடியில் ஒன்றிய செயலாளர்கள் கழண்டு கொள்ளும் கட்சிக்காரர்கள்….

தமிழகம் முழுவதும் ஆளும் திமுக அரசின் மீது அதிருப்தி அலைகள் நிலை வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கூடுதலாக இறங்கு முகமாகவே இருக்கிறது அதிமுக. காரணம் கட்சியின் தலைமையில் ஏற்பட்டிருக்கிற விரிசல்கள் அல்ல. மாவட்டத்தில் வெற்றியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லாமல் இருக்கும் நிலையே காரணம் என்கின்ற அதிமுக தொண்டர்கள். செல்வாக்கு மிகுந்த மாவட்ட செயலாளர்களில் ஒருவர் சிவி சண்முகம். இருந்தாலும் கட்சியை தனது கட்டுப்பாட்டில் முழுமையாக அடைகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்கின்றனர் மூத்த நிர்வாகிகள். கட்சி தலைமை எந்த போராட்டங்களை அறிவித்தாலும் யார் பேச வேண்டும்,

யார் பங்கேற்க வேண்டும் என்பதை முடிவு செய்வது சிவி சண்முகமும் அவரது அண்ணன் ராதாகிருஷ்ணனும் தான். இவர்கள் இருவர் படமும் இல்லாமல் ஒரு போஸ்டர் கூட அடிக்க முடியாது.க்ஷ கட்சி தொண்டர்களால். பேசுபவர்கள் யாராக இருந்தாலும் மேடையில் எம்ஜிஆர், ஜெயலலிதா புகழ் பாடாவிட்டாலும் கூட சிவி சண்முகம் ராதாகிருஷ்ணன் புகழ் பாட தவறுவதில்லை. எதிர்க்கட்சியாக இருக்கின்ற எந்த கட்சியும் அறிவிக்கின்ற போராட்டத்திற்கு தானாகவே கூட்டம் கூடும் என்பது இயற்கை. ஆனால் இப்போது எல்லாம் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மனித சங்கிலி என்றாலும் கூட 200 ரூபாய் டாட்டா ஏசி இல்லாமல் கூட்டம் வருவதில்லை. ஒளிவு மறைவாக கூட்டத்திற்கு பணம் கொடுக்கப்பட்ட நிலை மாறி இப்போது எல்லாம் பொதுவெளியிலே பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. கட்சியில் முன்னாள் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் எவ்வளவு பேர் மாவட்டத்தில் இருந்தாலும் கூட கூட்டத்தில் கலந்து கொள்ள அவர்களை அழைப்பதில்லை. அவருடைய பெயர்களை கூட யாரும் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்வது சிவி சண்முகத்தின் வேலையாக இருந்து வருகிறது. இப்படியே போனால் கட்சி அடுத்த கட்டத்திற்கு நகராமல் போகும் என்பது சண்முகத்திற்கு தெரிந்தாலும் கூட தன் கட்டுப்பாட்டில் கட்சியை வைத்திருப்பதாக அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறார் என்று புலம்புகின்றனர் கட்சிக்காரர்கள். பெரும் பணச் செலவில் கட்டப்பட்ட அஇஅதிமுக மாவட்ட அலுவலகம் சண்முகம் வரும்போது மட்டுமே திறக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. சண்முகம் வரும்போது மட்டுமே கட்சிக்காரர்கள் கரை வேட்டி கட்டுகிற நிலைமைக்கு ஆளாக்கிவிட்டார் சண்முகம்.

எடப்பாடிக்கு இதெல்லாம் தெரியுமோ? தெரியாதோ? தெரியவில்லை யார் எடுத்துச் சொல்வது. இப்படியே போனால் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற பொது தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளிலும் அதிமுக மண்ணை கவ்வப் போவது உறுதி என்கிறார்கள் பழைய  நிர்வாகிகள். இவற்றை சரி செய்ய கட்சிக்காரர்களை அரவணைத்து போகிற ஒரு மாவட்ட செயலாளரை அறிவிக்க வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி. இல்லையென்றால் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கின்றனர்‌ தேர்தல் நெருங்க நெருங்க கட்சியினர் உற்சாகமாகி வருவார்கள் ஆனால் வலுவிழிந்து போனவர்களாக மாறி வருகிறார்கள் விழுப்புரம் மாவட்டத்தில். காரணம் மாநிலங்களை உறுப்பினர் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தான் என்கின்றனர். ஒரு பக்கம் திமுகவில் அமைச்சர் பொன்முடி லட்சுமணன் செஞ்சி மஸ்தான் என யுத்தம் நடக்கும் நிலையில் அதிமுகவின் இந்த நிலை அவர்களுக்கு சாதகமாக போனது என்று சொல்லலாம்.

-பா.ஜோதி நரசிம்மன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *