அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) அவைத்தலைவராக பணியாற்றி வருகிறார் மூத்த தலைவர் அ. தமிழ் மகன் உசேன். ஆனால் தற்போது, உடல்நலக்குறைவும், பொருளாதார துயரமும் அவரை வாட்டிவதைப்பது நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
உசேன் இஸ்லாமிய சமுகத்தை சேர்ந்த இவருக்கு தமிழ் பேச்சில் ஆர்வம் அதிகம். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதை, இவர் மாணவ பருவத்தில் நிறுபித்தார்.
உசேன் பயின்ற பள்ளி விழாவில் அன்றைய முதல்வர் பக்தவத்சலம் பங்கேற்ற நிகழ்வில் மாணவர்கள் பங்கேற்ற மேடை பேச்சில் பங்கேற்று பேசிய மாணவன் உசேனின் பேச்சு முதல்வர் பக்த்வச்சலத்தை ஈர்த்தது. மாணவர்களுக்கு பரிசு கொடுத்த முதல்வர் பக்தவத்சலம். உசேனை பாராட்டி பரிசு கொடுத்தபோது. முதல்வர் உச்சரித்த அடையாள பாராட்டு ‘ ‘தமிழ் மகன் உசேன்’
அன்று முதல் பள்ளி ஆசிரியர்கள் உடன் பயின்றோர் உச்சரித்து அழைத்தது தமிழ் மகன் உசேன் என்ற பெயர் இவரோடு நிலைத்து போனது.
இஸ்லாமிய விழாக்களில் குமரி மற்றும் கேரளாவில் கடுவாய் வேடம் அணிந்து ஆடுவது அன்று வளகத்தில் இருந்தது.
தமிழ் மகன் உசேன் கடுவா ஆட்டத்தில் தனி முத்திரை பதித்தவர். கடுவா ஆட்டத்திலே உசேன் கடுவா தான் தனித்த புகழ் பெற்றது.
குமரி மாவட்ட தமிழக அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுநர் பணியில் இருந்து கொண்டே எம்ஜிஆர் மன்றங்களை குமரி மாவட்டத்தில் பல இடங்களில் உருவாக்கினார்.
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அமைவதற்கு பல்லாண்டுகளுக்கு முன்பே. அந்த பகுதியில் புரம் போக்கு நிலத்தில் இவர் அமைத்த எம்ஜிஆர் மன்றம் தான். குமரி மாவட்டத்தில் தலைமை எம்ஜிஆர் மான்றமாக திகழ்ந்தது.
அண்ணா பேருந்து நிலையம் வந்ததும் அந்த பகுதியில் பல்வேறு வியாபாரம் மையங்கள் உருவானது.
எம்ஜிஆர்_ரை கலைஞர் கருணாநிதி, திமுக கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பு வெளியான நேரத்தில். தமிழ் மகன் உசேன். நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி போகும் பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த போது இவருக்கு இந்த செய்தி தெரிந்ததும். பேருந்தை சாலையில் ஓரத்தில் அப்படியே நிறுத்தி விட்டு,வேறு பேருந்தில் ஏறி நாகர்கோவில் வந்துவிட்டார்.
எம்ஜிஆர்_யின் துன்பம் தனது துன்பம் என கருதியவருக்கு.
இன்று ஏற்பட்டிருக்கும் துன்ப நிலை.
89 வயதான உசேன், கடந்த நான்கு மாதங்களாக மருத்துவமனையும், வீட்டிற்குமாக இடையே சிகிச்சைக்காகச் சென்று வருகின்றார். வயது மூப்பு, சிறுநீரக கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு, தற்போது நாகர்கோவிலில் உள்ள தனது இல்லத்தில் நோயுடன் வாழ்ந்து வருகிறார்.
1972ஆம் ஆண்டு அதிமுகவை எம்.ஜி.ஆர் தலைமையில் பதிவு செய்த ஆவணத்தில் கையெழுத்திட்ட 11 முக்கிய உறுப்பினர்களில் ஒருவராகக் கருதப்படும் உசேன், கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் மாவட்டச் செயலாளராகவும், வக்பு வாரியத்தின் தலைவராகவும், அகில உலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளராகவும் ஆகிய பதவிகளைத் திறம்பட வகித்தவர்.
2016ல் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிப்பின்போது, பாளையம்கோட்டை தொகுதிக்காக அறிவிக்கப்பட்ட அவர், அதற்காக வக்பு வாரியத் தலைமை பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் பின்னர் வேட்பாளராக மாற்றப்பட்டு, ஹைதர் அலி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2021 டிசம்பரில் இடைக்கால அவைத்தலைவராக நியமிக்கப்பட்டு, 2022 ஜூனில் நிரந்தர அவைத்தலைவராக பதவியேற்றவர், தற்போது கட்சி தலைமையிடம் இருந்து எந்தவிதமான நிதி அல்லது மருத்துவ ஆதரவும் கிடைக்காத நிலையில் அவதிப்பட்டு வருகிறார் என நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.
அரசியலில் பல்வேறு பொறுப்புகளை வகித்த ஒரு மூத்த தலைவராக, இன்று இயலாமை நிலை மற்றும் ஆதரவின்றி வாடும் தமிழ் மகன் உசேனின் நிலை, அதிமுகவினதும் பொதுவாக அரசியல் சமூகத்தினதும் மனசாட்சியை உலுக்கும் விதமாக உள்ளது.
- த.இ.தாகூர்.
