நீ அரிசி கொண்டு வா நான் உமிகொண்டுவர்றேன் இரண்டையும் கலந்து ஊதி சாப்பிடலாம் என்கிற பாலிசிக்கு சொந்தக்காரர், தமிழகத்தில் வாயால் வடசுடும் நபர்களில் முதன்மையானவர் அடுத்தவன் பணத்தில் அரசியல் பண்ண தெரிந்த ராஜதந்திரி, திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி பொதுவாழ்க்கையில் நிறைய தோல்விகளையும் சில வெற்றிகளையும் மட்டுமே பார்த்தர் வெற்றியோ தோல்வியோ பணம் பண்ணுவதில் குறியாக இருப்பார். அதனால் சிக்கல்களையும் அனுபவிப்பார் உதாரணத்திற்கு வேளாண்மைத்துறை மந்திரியாக இருந்தபோது முத்துகுமாரசாமி என்கிற அதிகாரி தற்கொலை விவகாரத்தால் ஜெயிலுக்கு போய் பெயிலில் வந்து, தன்னிடம் இருந்த எல்லா பதவிகளையும் இழந்து ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டவர், எடப்பாடி பழனிச்சாமியோடு நெருக்கமாக இருப்பவர்களை பிடித்து மீண்டும் அதிமுகவிற்குள் நுழைந்து திருவண்ணாமலை எம்பி சீட் வாங்கி நின்றார் ஓட்டுக்கு கொடுத்த பணத்தை பெரும்பான்மையான கட்சி நிர்வாகிகள் பையோட விட்டுக்கு கொண்டு போனதோட செல்லை சுவிட்ச் ஆப் பண்ணிட்டாங்க, மூன்று லட்சத்தி ஐந்தாயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போனார் அதன்பிறகு ஆள் பிடித்து மாவட்ட செயலாளர் ஆனவர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கலசபாக்கம் தொகுதி எதிர்பார்த்தார் போளூர் தொகுதிதான் கிடைத்தது. திமுகவில் பலவீனமான வேட்பாளர் கே.வி.சேகரன் நின்றதால், பாமகவினர் தயவுடன் பணத்தை இறைத்து பாஸ் பண்ணிவிட்டார். ஓட்டுப்பதிவு அன்று மாலை ஆறு மணிக்கு பிறகு தொகுதியில் நெடுங்குணம் ஏரியாவில் திமுகவினர் ஒன்றுதிரண்டு மின்சாரத்தை நிறுத்திவிட்டு, அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் இருட்டில் கும்பாபிஷேகம் நடத்தியது அவ்வளவு எளிதில் மறக்கமுடியாத விஷயம்! அரசு நிகழ்ச்சிகளில் திமுக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கண்டுகொள்வதில்லை, இவரும் தனி ஆவர்தனம் பண்ணி காலம் தள்ளுகிறார். தன்னுடைய கட்சி நிகழ்ச்சிகளை தவறாமல் நடத்தி வருகிறார். நல்லது கெட்டதுல கலந்துக்கறார் அங்கேயே நன்றியும் சொல்லிவிடுகிறார் எம்எல்ஏ என்கிற முறையிலும், மாவட்ட செயலாளர் என்கிற முறையிலும், தன்னுடைய கமிஷனை எந்த ஏரியாவிலும் விட்டுத் தருவதில்லை. தொகுதிக்கு அடிக்கடி வருவார் இல்லாட்டி திருவண்ணாமலை வீட்டிலும் கலசபாக்கத்திலுள்ள கல்வி நிறுவனங்களிலும் பார்க்கலாம் தனக்கு நஷ்டம் வராத எந்த வேலையா இருந்தாலும் செய்வார். திமுக ஆளுங்கட்சி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒத்துழைக்குமா? என்று தெரியவில்லை. அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கும் அந்த அச்சம் உண்டு மற்றபடி நூறுநாள் சாதனை என்று தனியாக சொல்ல முடியாது ஒன்றுமட்டும் நிச்சயம் ஐந்து வருட முடிவில் போளூர் தொகுதி வாக்காளர்களுக்கும் அதிமுகவினருக்கும் சொந்த கட்சிக்கே சூனியம் வைத்த திமுகவினருக்கும் வித்தியாசமான புதிய அனுபவம் காத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply