பொன்விழா ஆண்டில் அதிமுகவினர் முகத்தில் புன்னகை!

அதிமுகவின் ஐம்பது ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் வகையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதியிலுள்ள மூத்த நிர்வாகிகளை வரவழைத்து நலத்திட்டங்களும், அன்னதானமும், வழங்கியதோடு கட்சி கொடியேற்றி பொன்விழா ஆண்டு ஷீல்டு கொடுத்து கௌரவித்திருக்கிறார் கலசபாக்கம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம். மூத்த நிர்வாகிகளை சால்வை போர்த்தி மரியாதை செய்தபோது கண்கலங்கினர் கட்சியை எம்ஜிஆர் தொடங்கினார் ஜெயலலிதா வளர்த்தார் அதை நாம் பாதுகாப்போம் என்று உணர்ச்சி மிகுதியால் பேசினர் ரத்தத்தின் ரத்தங்கள். கடந்த ஐந்து ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்தபோது கலசபாக்கம் அடைந்த வளர்ச்சியையும், அதிமுகவினருக்கு செய்த நலத்திட்டங்களையும் நினைவூட்டினார் பன்னீர்செல்வம். தொகுதி முழுவதும் தவணை முறையில் கட்சியினரை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியை தொடர்ந்து கொண்டாடப்போகிறாராம். தமிழகத்தில் முதல் நபராக முந்திக்கொண்டார பன்னீர்செல்வம் அதிமுகவினர் முகத்தில் புன்னகையை பார்க்க முடிகிறது.
மூத்த நிர்வாகிகளுக்கு கௌரவம்.