பீகாரில் பல்வேறு மாவட்டங்களில் மதுக்கடைகளை நடத்த கட்டுப்பாடு உள்ளது. சில மாவட்டங்களில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை தவிக்கிறது. வடக்கு பீகாரில் சமீப நாட்களாக கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியாகி வருகிறார்கள்.
சமீபத்தில் கோபால்கஞ்ச் மற்றும் மேற்கு சாம்பரான் மாவட்டங்களில் ஒரே நாளில் 24 பேர் பலியாகினர். கடந்த அக்டோபர் 28ம் தேதி ஹூச் பகுதியில் 8 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியானார்கள். பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதேபோல் கடந்த ஜனவரியில் இருந்து அக்டோபர் 31 வரை 70 பேர் அங்கு கள்ளச்சாராயம் குடித்து பலியாகி உள்ளார். இந்தியாவிலேயே கள்ளச்சாராயம் காரணமாக அதிக பேர் பலியாகும் மாநிலங்களில் பீகார் முன்னிலை வகிக்கிறது
Leave a Reply