கன மழையின் பெரும் வெள்ளத்தால், கடும் பாதிப்புக்குள்ளாகிருக்கிறது, தமிழகம் குறிப்பாக சென்னை. இதனால், ஒட்டுமொத்த குறிப்பாக ஏழை எளிய மக்கள், தங்களின் வீடுகளையும் உடைமைகளையும் ஜீவாதாரங்களையும் இழந்து பெரும் துயரடைந்துள்ளனர்.
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், துயர் துடைக்கவும், இரவு பகல் பாராமல் தமிழக அரசை முடுக்கிவிட்டுள்ளார், முதல்வர் ஸ்டாலின்.
வயதையும் உடல்நிலைகளையும் கிஞ்சிற்றும் பொருட்படுத்தாமல், முதல்வர் ஸ்டாலினும், அத்தனை அமைச்சர்களும், ஒட்டுமொத்த அரசு அதிகாரிகள் உட்பட ஊழியர்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக மற்றும் தொண்டு அமைப்பினரும், சாலைகளிலும் வீடுகளிலும் ஆளையே முழுங்குகின்ற வகையில் சூழ்ந்துள்ள மழை வெள்ளம், சாக்கடை கழிவு நீர் உள்ளிட்டவைகளில், பெரிய அளவில் பாதுகாப்பு உபகரணங்களின்றி, தன்னலம் பாராமல் உயிரை துச்சமெக்கருதி, நேரடியாக களம் இறங்கி மக்கள் பணியாற்றி வருகின்றார்கள். ஊரே பற்றி எரியும்போது, ஃபிடில் வாசித்த நீரோ மன்னனைப்போல, தனது அரசியல் சுய விளம்பரத்திற்காக, கரண்டைக் கால் அளவிற்கே தேங்கியிருந்த தண்ணீருக்குள் படகை இழுத்துவந்து அதில் ஒய்யாரமாக அமர்ந்து,
“டாப் ஐ தூக்கு
தம்பி wide angle ல எடு
அண்ணே
ஒரே ஒரு எம்டி மட்டும்”
என, தன்னால் செட்டப் செய்யப்பட்ட ஒளிப்பதிவாளர்களால் கேட்கப்பட்டு நடிக்க வைத்து படமாக்கி,
அம்மா வீட்டுக்குள்ள தண்ணி வந்திச்சா”
என, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவரிடம் கேனத்தனமாகக் கேட்டும்,
ஊடகங்களுக்கு போஸ் கொடுத்து நடித்துக் காட்டி, சர்வ அயோக்கியத்தனத்தைச் செய்து, ஒட்டுமொத்த குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு அவமானமாகிருக்கிறார், பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை.
பேரிடர்களின்போது மக்களை மீட்கவும் காக்கவும் கற்றுதரப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை, அடிப்படை அறிவும் மனிதாபிமானமும் இல்லாமல், சுய விளம்பர பேர்வழியாக நடமாடுவது, வெட்கக்கேடு.
– சமூக ஆர்வலர் எழுத்தாளர் பூமொழி
Leave a Reply