Save 20% off! Join our newsletter and get 20% off right away!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன் தருமபுரி எம்பி சொல்வது உண்மையா?

இருக்கற இடம் தெரியாம இருக்கணும் என்பது யாருக்கு பொருந்துமோ இல்லையோ…  தருமபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமாருக்கு பொருந்தும்! கட்சிக்குள் வந்தநாள் முதல் இந்த நாள்வரை அரசியலில் செந்தில்குமார் வளர்ந்துவிடாமல் கூட்டணி அமைத்து செயல்படும் திமுக நிர்வாகிகள் தருமபுரி மாவட்டத்தில் அதிகம்! அதிலும் மாவட்ட தலைநகர் தருமபுரியில் கூடுதல் கவனம் செலுத்தும் உடன்பிறப்புகளை தாண்டி சபரீஸ்வரன், உதயநிதி சேனலில் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு, எதிர்நீச்சல் போட்டுதான் எம்பி ஆனார் டாக்டர் செந்தில்குமார். பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்தவர் தருமபுரியில் மட்டுமல்ல மாவட்டம் முழுவதும் பிரபலமான இளைஞர், தருமபுரி, அரூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி, பென்னாகரம், மேட்டூர் ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பாராளுமன்ற தொகுதி எம்பி! வென்றவுடன் வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தவர், அந்த விஷயம்கூட வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டார் பந்தா கிடையாது ஆரவாரம் இல்லாமல் தன்னுடைய நடவடிக்கைகளை மிக எளிமையாக அமைத்துக் கொண்டார். ஆரம்பத்தில் திமுகவினரும், பத்திரிகையாளர்களும் எம்பியை போனில்கூட பிடிக்க முடியவில்லையே என்று சலித்துக் கொண்டனர். அதன்பிறகு படிப்படியாக தொடர்பு எல்லைக்குள் வந்த செந்தில்குமார், தருமபுரி டவுன் அப்பாவு நகரில் பெரிய பங்களா டைப்ல ஒரு வீட்டை பிடித்து அலுவலகமாக்கி நான்கு பேரை வேலைக்கு அமர்த்தி, கட்சிக்காரர்கள் தொகுதி மக்கள் கோரிக்கைகளை வாங்கி பைல் பண்ணுவது, அரசு மற்றும் அரசியல் நகழ்ச்சி பற்றிய விவரங்களை பதிவு செய்வது எம்பியை தேடி வருபவர்களுக்கு போன் நம்பர் வாங்கி வச்சிகிட்டு அவர் வரும்போது கூப்பிடறாங்க அப்ப நீங்க எம்பியை பார்க்கலாம். செந்தில்குமாரை டிவிட்டர் அரசியல்வாதி என்று ஒரு சாரார் கலாய்கிறாங்க ஆமாங்க இவர் பதிவு பண்ணும் டிவிட்டர் தகவல்கள் பல சர்ச்சைக்கு உள்ளாகி, செந்தில்குமாரை மட்டுமல்ல தருமபுரி பாராளுமன்ற தொகுதி, திமுக தலைமை வரை திரும்பி பார்க்க வைக்கிறது. விளிம்பு நிலையில் உள்ள பெண்களுக்கு மருத்துவம், படிப்பு, நிதி உதவிகள் என்று முக்கியத்துவம் தருகிறார். தருமபுரி, சென்னை, டெல்லி என்று பிஸியாக இருக்கும் எம்பியின் போன் எப்பவும் சைலண்ட்ல இருக்கும் தெரிந்த நம்பர்கள் என்றால் பார்த்துவிட்டு உடனே கூப்பிடுகிறார் மற்றவர்கள் எம்பி அலுவலகத்தை நாட வேண்டியதுதான். அதிகாரிகள் தரப்பில் ஒத்துழைப்பு நிறைவாக இருப்பதால், கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறுகிறது. ஒவ்வொரு யூனியனிலும் அதிகாரிகளை வைத்துக் கொண்டு, பொதுமக்கள் கோரிக்கைகளை கேட்டு நிவர்த்தி செய்கிறார். இரண்டு வருடங்களாக கொரோனா கோர தாண்டவம் ஆடியதால் எம்பியின் தொகுதி நிதியை ஆட்டையை போட்டுட்டாங்க. பொதுமக்கள் கோரிக்கைகளில் கழிவறை, குடிதண்ணீர், சாலை வசதி இம்மூன்றும்தான் பிரதானமாக இருக்கிறது. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிவிட்டேன் என்கிறார் எதாவது விட்டுவிட்டேனா சொல்லுங்க என்று கேள்வி கேட்கிறார். தொழிற்பேட்டை வேலை நடக்குது, ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தியாச்சி, மொரப்பூர் இரயில்வே திட்டம் வேலை நடக்குது. கலசபாடி கிராமம் எழுபது ஆண்டுகால சாலை வசதி கோரிக்கை வனத்துறையுடன் பேசி உத்தரவு வந்திடுச்சி, ஒகேனக்கல் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாதலமாக மாற்றுவது, ஒகேனக்கல் உபரிநீரை கொண்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகளை நிரப்புவது, ஒகேனக்கல் பேஸ் 2, இந்த திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தால் 2054 வரை தண்ணீர் பஞ்சம் வராது. மூன்று வருட மக்கள் பணி எனக்கு திருப்தி என்று சொல்லும் செந்தில்குமார் தன்னுடைய ஒவ்வொரு மாத செயல்பாடுகளை பைல் போட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்துவிடுகிறார். பாராளுமன்ற கூட்டத்தொடர் வருகை, அதிகமாக கேள்வி கேட்டு பேசியது, விவாதங்களில் பங்கேற்றது வரை செந்தில்குமார் எம்பிக்கு தனி அடையாளம் என்கிறார். அப்ப சரி!