Save 20% off! Join our newsletter and get 20% off right away!

ஊத்தங்கரை தமிழ்ச்செல்வன் எம்எல்ஏவின் நூறுநாள் சாதனை

தமிழ்ச்செல்வன் எங்கள் வேட்பாளரே அல்ல குறுக்கு வழியில் மாஜி மந்திரி கே.சி.வீரமணி, திருப்பத்தூர் மாஜி எம்எல்ஏ, கே.ஜி.ரமேஷ் இருவரிடமும் பணியாளராக இருந்த திருப்பதி இன்னும் புரியற மாதிரி சொல்லனும்னா காக்கங்கரை, கந்திலி பகுதியில் பிரபலமான மணல் வியாபாரி காவல் நிலையங்களில் வியாபாரம் சார்ந்த வம்பு வழக்குகள் நிறையவே உண்டு திருப்பதிக்கு, அவருடைய மாமாதான் தமிழ்ச்செல்வன் என்கின்றனர் ஊத்தங்கரை தொகுதி அதிமுகவினர்! மணல் பணத்தை ஒருசில திமுக நிர்வாகிகளுக்கும் தாராளமாய் கவனித்ததின் விளைவு இருபத்தி எட்டாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தமிழ்ச்செல்வன் வெற்றி! மத்தூர் டூ திருப்பத்தூர் போகும் வழியில் சிவம்பட்டிதான் தமிழ்ச்செல்வனுக்கு சொந்த ஊர் தொகுதிக்குள் வர்றது தரியாது போறது தெரியாது எங்களுக்கே அந்த கதினா ஓட்டு போட்ட மக்களோட கதியை யோசிச்சி பாருங்க என்கிறார் அதிமுகவின் மூத்த நிர்வாகி தமிழ்ச்செல்வனுக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்ல வந்தார், நின்றார் மணல் பணம் தாராளமாய் பாய்ந்தது ஜெயிச்சிட்டார் என்ன பண்றதுன்னு அவருக்கும் தெரியல எங்களுக்கும் தெரியல, ஆளுங்கட்சியா இருந்தாகூட பரவாயில்ல தமிழ்ச்செல்வனை பொம்மையா வச்சிகிட்டு எதாவது சாதிக்கலாம் இப்ப திமுக ஆளுங்கட்சியா இருக்கு என்ன பண்றதுன்னு புரியல? பல வருஷமா கட்சியை வளர்த்து காப்பாத்தி வச்சிருந்தா திடீர்னு யாராவது சம்பந்தமே இல்லாம வந்து எம்எல்ஏ ஆயிடறாங்க என்று சலிப்பாக பேசிய ஊத்தங்கரை ஒன்றிய நிர்வாகி இதுவரை கற்பூரம் ஏற்றக்கூட கால்காசு கொடுக்கல என்று தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறார். பட்ஜெட் கூட்டத் தொடரை முடித்துவிட்டு திரும்பி இருக்கும் தமிழ்ச்செல்வனை தொகுதியில பெரும்பகுதி மக்களுக்கு எம்எல்ஏ என்றே தெரியவில்லை. ஆனால் மத்தூர் ஒன்றியத்தில் தமிழ்ச்செல்வன் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள் நல்லது கெட்டதுனு தகவல் சொன்னா வந்து பாத்துவிட்டு போறார் பொதுவாழ்க்கைக்கு புதுசு மற்றபடி போகப்போக சரியாகிவிடும் என்று ஆறுதல் அடைகின்றனர் தமிழ்ச்செல்வனின் உறவினர்கள். மற்றபடி நூறுநாள் சாதனை என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை.