கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜி.வி தமிழ்ச்செல்வம் இவர் பெயரளவில் மட்டும் எம்எல்ஏவாக உள்ளார். தொகுதி பக்கம் வருவதில்லை இவருடைய ஊர் திருப்பத்தூர் மாவட்டத்தின் அருகாமையில் உள்ளதால் எப்போதும் அந்த பகுதியில் மட்டுமே சுற்றி வருகிறார் தனது தொகுதி பக்கம் கட்சி கூட்டம் நடந்தால் மட்டும் வருகிறார் தொகுதி மக்களின் பிரச்சினைகள் மற்றும் மழைக்காலங்களில் கூட எட்டிப் பார்க்கவில்லை தன்னுடைய மச்சான் உதவியால் எம்எல்ஏ ஆனதால் எப்போதும் தன்னுடைய மச்சானின் மணல் கடத்தல் தொழிலுக்கு மிகப் பெரும் உதவியாக இருக்கிறார். ஊத்தங்கரை தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு கிடைக்கும்?
தமிழ்செல்வன் எம்எல்ஏவின் மச்சான் திருப்பதி மணல் கடத்தல் மூலம் கோடிகளில் சம்பாதித்து அந்த பணத்தின் மூலம் தனது மாமாவை எம்எல்ஏவாக உருவாக்கினார். அதிமுகவை சேர்ந்த கே. சி. வீரமணி மூலம் செல்வாக்கு பெற்று கட்சியில் சீட்டு வாங்கினார் பல கோடி பணத்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு கொடுத்து ஊத்தங்கரை தொகுதியில் காங்கிரசை தோற்கடித்தார். பல கோடி செலவு செய்து அதிக வாக்குகள் பெற்று தன் மாமாவை எம்எல்ஏவாக உருவாக்கி இந்த செல்வாக்கின் மூலம் தனது மேல் உள்ள கரையை சுத்தம் செய்ய சிரமப்படுகிறார் திருப்பதி தற்போது செயற்கை மணல் உற்பத்தியில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். காவல்துறையின் கண்ணில் மண்ணைத் தூவி செயற்கை மணல் தயாரிப்பு தொழிற்சாலையை பல்வேறு இடங்களில் உருவாக்கியிருக்கிறார். இதில் முக்கிய பங்கு வகிப்பவர் ஜி.வி. தமிழ்ச்செல்வன் அவர்களின் மச்சான் திருப்பதிதான்! நிலத்தடி நீர் வளம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், கனிம வளமும் கொள்ளை போகிறது என விவசாயிகள் கூறுகின்றனர். தமிழகத்தில் ஆறுகளில் இருந்து மணல் எடுக்க அரசு தடைவிதித்துள்ளது. இதை பற்றி கவலை படாமல் தொடர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார் திருப்பதி. இவர் மீது திருப்பத்தூர், கந்திலி, மத்தூர் காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இப்போது செயற்கை மணல் தயாரிப்பு காக்கங்கரை பகுதியில் மட்டும் முப்பதுக்கும் மேற்பட்ட தொட்டி அமைத்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக இடங்களில் மணலை சேமித்து அங்கு அதற்கான அமைக்கப்பட்ட பிரத்தியேக தொட்டிகளில் கொட்டி பின் மோட்டார் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு அந்த மண் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து அதன் மூலம் செயற்கை மணல் தயாரிக்கப்படுகிறது.
இந்த செயற்கை மணல் தயாரிப்பு காக்கங்கரை, திருப்பத்தூர், மத்தூர், ஊத்தங்கரை பகுதிகளில் தங்கு தடையின்றி வெட்டவெளிச்சமாக நடக்கிறது ஒரு லோடு மணல் முப்பதாயிரம் முதல் நாற்பதாயிரம் வரை விலை போகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் மந்திரி கே. சி .வீரமணி ஆதரவாளர் அவரோடு நெருங்கி பழக கூடிய நபர் ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வனின் மச்சான் திருப்பதி. இவருடைய ஊர் காக்கங்கரை என்பதால் நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, கந்திலி மற்றும் ஆம்பூர் போன்ற பகுதிகளில் செயற்கை மணல் தயாரிப்பு நடந்து வருகிறது.
அரசியல் பலம், பணபலம் இருப்பதால் எம்எல்ஏவின் மச்சான் திருப்பதி மீது காவல் துறையினரும் வருவாய்த் துறையினரும் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறும்போது…, கந்திலி, காக்கங்கரை, சுந்தரம்பள்ளி, நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் செயற்கை மணல் தயாரிப்பு தொழில் கொடி கட்டி பறக்கிறது.
செயற்கை மணல் தயாரிப்பு குறித்து பொதுமக்கள் காவல்நிலையங்கள் காவல் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தால் தகவல் அளிப்பவர்களின் பெயர் முகவரி செல்போன் எண் ஆகியவற்றை மணல் கடத்தல்காராகளிடம் காவல் துறையினரே வழங்கி விடுகிறார்கள் இதனால் தகவல் அளிப்போருக்கு தாக்குதல் மற்றும் கொலை மிரட்டல் போன்ற நிகழ்வுகள் நடப்பதால் மணல் கடத்தல் குறித்து புகாரை பொதுமக்கள் யாரும் காவல் நிலையங்களுக்கு சொல்வதில்லை.
அரசியல் கட்சியினரும் காவல்துறையினரும் மணல் கடத்தல் தொழிலுக்கு பாதுகாப்பு அளிப்பதால் மணல் திருட்டை தடுக்கவே முடியாத நிலைக்கு சென்றுவிட்டது. இதனால் ஊத்தங்கரை எம்எல்ஏவின் மச்சான் திருப்பதி மணல் திருட்டில் முடிசூடா மன்னனாக இப்பகுதியில் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இவர் மீது நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
– பாலாஜி மணி
Leave a Reply