Save 20% off! Join our newsletter and get 20% off right away!

ஊத்தங்கரை தலைவர் பதவியை பிடிக்க மோதும் உதவாகரைகள் – ஒரு குமுறல் ரிப்போர்ட்

நீ ஒருபடி அரிசி கொண்டு வா நான் ஒரு படி உமி கொண்டு வர்றேன் இரண்டையும்
ஒண்ணா கலந்து ஊதி சாப்பிடலாம் என்கிற சொலவடை கிராமப்புறங்களிலும்
நகர்புறங்களிலும் மிக பிரபலம்! மேற்படி சொலவடையை செயல்படுத்திக்
கொண்டிருக்கிறார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை டவுன் பேரூராடசியில்
இருக்கும் திமுக பிரமுகர் அமானுல்லா பாய் மாவட்ட சிறுபான்மையினர் அணி
அமைப்பாளர், அமானுல்லா ஏற்கனவே மூன்று முறை கவுன்சிலராக இருந்தவராம்
இப்பொழுது பேரூராட்சி தலைவராக ஆசைப்படுகிறார். பதினைந்து வார்டுகளிலும்
திமுக வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க, ஒரு வார்டுக்கு பத்து  பேர் கொண்ட
குழு முடிவெடுக்கும் வேட்பாளராக நிற்பவர் கட்சியில ஐந்து லட்ச ரூபாயை
டெபாசிட் பண்ணிடனும் பத்து பேர் கொண்ட குழு அந்த பணத்தை ஓட்டுப்
பதிவுக்கு முன்தினம் வார்டுல செலவு பண்ணி ஜெயிக்க வைப்பாங்க, ஜெயிச்ச
கவுன்சிலர்கள் எல்லோரும் அமானுல்லா பாய்க்கு ஓட்டு போட்டுவிட்டு திரும்பி
பார்க்காம போயிடனும். இல்லாட்டி அபிடவிட்ல கையெழுத்து போடனும் கவுன்சிலர்
பதவியை ராஜினாமா பண்ணிடறேன்னு, திமுகவினர் பேசாம சுயேட்சையா நின்னா என்ன
என்கிற ஆழ்ந்த யோசனையில் இருக்கின்றனர். அமானுல்லா பாய்க்கு முப்பது
வருடங்களுக்கும் மேலாக நகர செயலாளராக இருந்துகொண்டு திமுகவை கரைத்துக்
கொண்டிருக்கும் பாபு சிவக்குமார் ஆதரவு தருவதோடு தன் மகன் தீபக் (எ)
பார்த்திபன் மனைவி கலைமகளை தலைவர் அல்லது துணைத் தலைவர் ஆக்கும்
முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். பாபு சிவக்குமாரும் செலவு பண்ண
மாட்டார் வாயால வடை சுடறவர்தான் இப்ப புரிந்திருக்மே சொவடைக்கு அர்த்தம்!
பல வருடங்களாக நகர செயலாளர் பதவியை குறி வைத்து இயங்கிக் கொண்டிருக்கும்
திமுக பிரமுகரான கதிர்வேல் இப்பொழுது தலைவர் பதவியை குறிவைத்து தேர்தல்
வேலையை செய்கிறார் இவருக்கு திமுகவினர் மத்தியில் செல்வாக்கு உண்டு
கதிர்வேல் ஊத்தங்கரை நகரில் பேசப்படும் நபராக இருக்கிறார்.
அரசு மருத்துவரான கந்தசாமி கடந்த முறை எம்எல்ஏ சீட்டுக்கு பணம்
கொடுத்திட்டு எம்எல்ஏ சீட்டும் வாங்க முடியாம கொடுத்த பணத்தையும் வாங்க
முடியாம, பஞ்சாயத்தை போலீஸ் வரை கொண்டு போய் போராடினார். இந்த முறை சில
கோடிகளை கையில வவச்சிகிட்டு திமுக தலைமைவரை முட்டிப்பார்த்தார் இந்த
முறையும் கிடைக்கல, அதனால தன் மனைவி நிர்மலாவை பேரூராட்சி தலைவராக்கும்
முடிவில் இருக்கிறாராம் பத்து வார்டுகளில் தன்னுடைய ஆதரவாளர்களை
நிறுத்தி, தலைவர் பதவியை அடைய திட்டம் வைத்திருக்கிறார். வார்டுகளில்
தங்கள் தரப்பை எதிர்த்து நிற்கும் வலுவான வேட்பாளர்களுக்கு பெரிய தொகையை
கொடுத்து ஆப் பண்ணும் திட்டத்தில் இருக்கிறார் இவருடைய பட்ஜெட் இரண்டு
கோடியாம்.

அதிமுக தரப்பில் சீனியரான நகர செயலாளர் சிவானந்தம் தலைவர் ஆகனும்னு ஆசை
ஆனா சிவானந்தம் கவுன்சிலரா ஜெயிக்கிறதே கஷ்டம், இன்னொருவர் சிக்னல்
ஆறுமுகம் வசதி இருக்கு, ஆனா தன் நண்பர் வாசுதேவன் மூலம் கே.பி.முனுசாமியை
அப்ரோச் பண்ணுகிறார் நீங்க பணம் கொடுத்தா நான் நிற்கிறேன் என்கிறார்.
சிவானந்தம் சிக்னல் ஆறுமுகம் இருவருமே அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள்,
இருதரப்பு மத்தியிலும் எடுபடல என்கின்றனர் உள்ளூர்வாசிகள் அதிமுக எம்எல்ஏ
தமிழ்ச்செல்வன் தேர்தல் வேலை செய்கிறேன் ஆனா பணம் கேட்காதீங்க என்கிறார்
எல்லா வார்டிலும் நிற்க வேட்பாளர் தேடுதல் வேட்டை நடத்தராங்க ரத்தத்தின்
ரத்தங்கள்.., ரொம்ப கஷ்டம் அதிமுகவினர் பாடு.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூபதியை உள்ளூர்ல யாரும் அரசியல்வாதியா
பார்க்கறதில்ல வியாபாரியா பாக்கறாங்க, ஏற்கனவே தலைவராக இருந்து ருசி
பார்த்தவர், தன்னுடைய இன்னோவா காரிலிருக்கும் தலைவர், டவுன் பஞ்சாயத்து
ஊத்தங்கரை என்கிற போர்டை கூட இன்னும் கழட்டாமல் வைத்திருக்கிறார் மக்கள்
எனக்கு இன்னொரு வாய்ப்பு தருவார்கள் என்கிற பூபதி, தன் குடும்பத்தில
மூன்று பேர் அதுபோக, பத்து பேரை தனியாக நிறுத்த திட்டமிட்டிருக்கிறார்.
பூபதி தரப்பில் ஓட்டுக்கு ஆயிரமும் வீட்டுக்கு ஒரு சிலிண்டரும்
தரப்போகிறார் என்று பீதியை கிளப்பிவிட்டாங்க அதனால பரபரப்பாக இருக்கிறது.
பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தானே பணம் கொடுத்து நாளுபேரை
நிற்க வைக்கிறார் அதில ஒருத்தர் ஜெயிப்பார் என்கின்றனர், திமுகவில் சீட்
கிடைக்காதவர்கள் அதிமுகவில் நிற்க விரும்பாதவர்களை டிடிவி தினகரனின்
அமமுக நிர்வாகிகள், எங்க கட்சி சார்புல நில்லுங்க செலவை நாங்க
பார்த்துக்கறோம் என்று பேச்சி வார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
திமுகவினர் ஓட்டுக்கு ஐநூறு கொடுக்கும் முடிவில் இருக்கின்றனர்.
ஊத்தங்கரையில் தலைவர் பதவியை பிடிக்க ஆசைப்படுபவர்கள் யாரும் உதவும்
கரங்கள் போல் தெரியவில்லை உதவாக்கரைகளாகவே தெரிகிறார்கள்.

– பாலாஜி மணி