Save 20% off! Join our newsletter and get 20% off right away!

அரசு புறம்போக்கு ஆனாலும், கட்சி சொத்து ஆனாலும் இரண்டும் ஒன்றுதான்!- வேலூர் திமுக அலப்பரைகள்

ஆறு அங்கே இருக்கும்போதே கோவணத்தை இங்கே அவிழ்த்த கதை என்று கிராமப்புறங்களில் பிரபலமான சொலவடை ஒன்று உண்டு அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ? வேலூர் மாவட்ட திமுக துணை செயலாளர் ஆர்.பி.ஏழுமலைக்கும், சத்துவாச்சாரி வடக்கு பகுதி திமுக செயலாளரும் மச்சானுமான சக்கரவர்த்திக்கும் சாலப் பொருந்தும். மாமனும் மச்சானும் சத்துவாச்சாரி ஏரியாவுல அவ்வளவு அலப்பறை பண்றாங்க, நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கல, அதுக்குள்ள எங்க குடும்பத்து சொந்த பந்தங்கள் நாலுபேரு மாநகராட்சி தேர்தல்ல போட்டியிடப்போறோம் மாநகராட்சியே நம்ம கட்டுப்பாட்டில்தான் என்று ஏரியாவுல் சவுண்டு விட்டுகிட்டு இருக்காங்க. சத்துவாச்சாரி தெற்கு பகுதி செயலாளர் கணேஷ்சங்கர் நல்ல வசதியானவர் ஆனால் கஞ்சன்கங்கா அதனால மாமன் ஆர்.பி.ஏழுமலையிடமும் மச்சான் சக்கரவர்த்தியிடமும் மாட்டிகிட்டு தவிக்கிறார். மாமனும் மச்சானும் கணேஷ்சங்கர் ஏரியாவுக்குள் நுழைந்து டாமினேட் பண்ணுகின்றனர் இவர் கூட யாரும் சேராதீங்க அன்னம் தண்ணி புழ்காதீங்கனு சொல்லி கணேஷ்சங்கரை ஓரங்கட்றாங்க. காரணம் சக்கரவர்த்தி கணேஷ்சங்கர் வார்டுல நிற்கப்போறாராம், குடியிருக்கிற வார்டுல வளளலார் ஆர்.பி.ரமேஷ்னு ஒருத்தர் மீசையை முறுக்கிகிட்டு நிற்கிறாராம் அதனால, இந்த மாற்று ஏற்பாடாம். தனக்கு நேர்ந்த நெருக்கடிகளை வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏவும் மாநகர செயலாளருமான கார்த்திகேயனிடம் எழுதி மனுவாக கொடுத்தால் படிக்கமாட்டார் என்பதால், வாயால் சொல்லி புலம்பி இருக்கிறார் வழக்கம்போல சிரிச்சிட்டு போயிட்டாராம் கார்த்தி காரணம், ஆர்.பி.ஏழுமலைக்கு மூடு வந்தா தெலுங்கு பட பாணியில அவனே, இவனே என்று சட்டியில எண்ணெய் ஊற்றாமலே வறுத்துவிடுவார் என்கிற அதீத பயம்தான் காரணம்.

கணேஷ்சங்கர் வார்டுல நீர்வழி புறம்போக்கு, அரசு புறம்போக்கு இடங்கள் நிறைய இருப்பதால், அதை கொஞ்சம் கொஞ்சமாக கவனிப்பதோடு தங்களைப் பற்றி அடிக்கடி கார்த்தி எம்எல்ஏவிடம் போட்டுக் கொடுப்பதால், வர்ற கட்சி தேர்தல்ல கணேஷ்சங்கர் பதவியை காலி பண்ண மாமனும் மச்சானும் தீவிரமாக இருக்காங்க.

சத்துவாச்சாரி பகுதியில செங்குந்த முதலியார், அகமுடைய முதலியார், வன்னியர், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், யாதவர், முத்திரையர் என பலதரப்பட்ட சமுதாயத்தினர் வசிக்கின்றனர். ஆனால், சக்கரவர்த்தி ஒருங்கிணைந்த பகுதி செயலாளராக இருக்கும்போது தான் சமுதாயத்தினரை பொறுப்புகளில் கொண்டு வந்தவர். தங்களை மீறி புதுசா யாரையும் திமுகவுக்குள் நுழைய விடறதில்லை மீறி நுழைஞ்சிட்டா விரட்டியடிக்கும் வேலையையும் கூடுதலா செய்யறாங்க. ஆற்காடு ரோடுல ஆவின் பூத்துக்கு நேர் எதிரில் இருக்கும் திமுகவுக்கு சொந்தமான இடத்தை பல லட்ச ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டு வருமானம் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த விஷயமெல்லாம் ஏரியா உடன்பிறப்புகள், பொதுமக்கள் மூலம் மாவட்ட செயலாளர் நந்தகுமாருக்கு தெரியவர டென்ஷனாகி இருக்கிறார் விடுங்க அந்த இடத்தில கலைஞர் சிலை வச்சிடலாம் என்று சொல்லிவிட்டாராம் உற்சாகமாகின்றனர் உடன்பிறப்புகள். ஏற்கனவே ஒன்றிய செயலாளராய் இருந்தவர் என்பதால், யூனியன் சேர்மன் அமுதா ஞானசேகரன் பெயரைச் சொல்லி பழைய நினைப்பில் கை நீட்ட, சேர்மன் அமுதாவின் கணவர் ஞானசேகரன் மாவட்டம் நந்தகுமாரிடம் ஆர்.பி.ஏழுமலையின் திருவிளையாடல்களை சொல்லி புலம்ப வர்ற கட்சி தேர்தல்ல மாற்றத்தை ஏற்படுத்திடலாம் தைரியமா இருங்க என்று சொல்லி இருக்கிறார். சத்துவாச்சாரி திமுகவினர் நந்தகுமார் நடவடிக்கையை எதிர்பார்த்து ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். வேலூர் எம்எல்ஏவாகவும் மாநகர செயலாளராகவும் இருக்கும் கார்த்தி, நந்தகுமார் நடவடிக்கைகளுக்கு எதிர் அரசியல் பண்ணி கட்டையைப் போடாமல் இருக்கனும் என்று மனதுக்குள் முனுமுனுக்கின்றனர் உடன்பிறப்புகள்.

மொத்ததில வேலூர் மாநகர திமுகவில் ஒரு பகுதியான சத்துவாச்சாரியை ஆர்.பி.ஏழுமலையும், சக்கரவர்த்தியும் கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக கரைச்சிகிட்டு இருக்காங்க என்பது மட்டும் உண்மை.

– துலாம் இராசிக்காரன்