Save 20% off! Join our newsletter and get 20% off right away!

இதைத்தான் எதிர்பார்த்தோம். நன்றி முதல்வரே..!

தமிழகத்தில் எதிர்பார்த்த  நல்ல தகவல்களை முதல்வர் அறிவிக்கிறார் என்றால் அதில் எந்தவித மாச்சரியமும் இல்லை. அண்ணா,கருணாநிதி வழியில் இன்று  முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார். குட்டியும், தட்டியும் எவ்வளவுதான் முதல்வரை விமர்சனம் செய்தாலும் மனிதர் கலங்கமாட்டார். என்ன கோரிக்கை வைத்தாலும் உடனே பரிசீலனை செய்து நிறைவேற்றும் ஒரே முதல்வர் இவர்தான். தமிழுக்கு எவ்வளவு பெருமை சேர்க்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ அதை செய்து காட்டியவர்  முதல்வர் ஸ்டாலின். நீண்ட நெடுங்காலமாக அறிவிக்கப்படாமல் எதிர்பார்க்கப்பட்ட  விஷயம் இன்று நிறைவேறி  உள்ளது.  .தான் வாழும் காலத்தில் ஒரு இலக்கியவாதி கவுரவிக்கிப்பட்டால் அவர் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே  இருக்காது.
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கி வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு அரசின் விருதுகளுக்கான விருதாளர்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அவ்வகையில் தமிழ்நாடு அரசின் விருதுகளுக்கான விருதாளர்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “அவ்வகையில், 2021ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது – நாஞ்சில் சம்பத், மகாகவி பாரதியார் விருது – பாரதி கிருஷ்ணகுமார் , பாவேந்தர் பாரதிதாசன் விருது – புலவர் செந்தலை கவுதமன், சொல்லின் செல்வர் விருது – சூர்யா சேவியர், சிங்காரவேலர் விருது – கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம், தமிழ்த்தாய் விருது – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது – முனைவர் இரா. சஞ்சீவிராயர் , சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது – உயிர்மை திங்களிதழ், தேவநேயப்பாவாணர் விருது – முனைவர் கு. அரசேந்திரன், உமறுப்புலவர் விருது – நா. மம்மது , கி.ஆ.பெ. விருது – முனைவர் ம. இராசேந்திரன், கம்பர் விருது – பாரதி பாஸ்கர், ஜி.யு.போப் விருது – ஏ.எஸ். பன்னீர்செல்வம் , மறைமலையடிகள் விருது – சுகி.சிவம் , இளங்கோவடிகள் விருது- நெல்லைக் கண்ணன், அயோத்திதாசப் பண்டிதர் விருது – . ஞான. அலாய்சியஸ் அவர்களுக்கும் வழங்கிட ஆணையிடப் பெற்றுள்ளன.

இவ்வாண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை ரூ.1,00,000/- லிருந்து ரூ.2,00,000/- உயர்த்தியும் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கி பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப் பெறுவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்படி பொருத்தமான விருதுகளை அளித்ததன் மூலம் தமிழ் நெஞ்சங்களை  கவர்ந்ததுவிட்டார்.உங்களை காலம் உள்ளவரை  மறக்க மாட்டார்கள்
முதல்வரே. எங்களை போன்ற பத்திரிகையாளர்களுக்கும் உரிய  அங்கீகாரம்,,விருது வழங்குமாறு வேண்டிக்கொள்கிறோம் .

– மூத்த பத்திரிகையாளர் எஸ்.ரவீந்திரன்