தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி தொடர்ந்து வரும் நிலையில் கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது சர்ச்சை எழுந்தது, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, புகழேந்தி இப்படி ஒரு சிலர் கூறிய கருத்துக்களை அக்கூட்டணி ரசிக்கவில்லை, இதனால் அன்வர் ராஜா, புகழேந்தி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் கா ட்டமாகவே பேசினார். அதேமாதிரி ஜெயகுமாரும் பேசினார். இப்படி இரு கட்சிகள் மத்தியில் புகைச்சல் இருந்தது. சட்டமன்ற தேர்தலில் வலுக்கட்டயமாக நல்ல தொகுதிகள் பாஜக எடுத்துக்கொண்டு அதிமுகவுக்கு குடைச்சல் கொடுத்தது. இது தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியது. தொண்டர்கள் நொந்து போய் இருக்கிறார்கள். இந்த நிலையில் மா நகராட்சி,நகராட்சி தேர்தலில் அதிமுகவிடம் அதிக இடங்களை பெற பாஜக முடிவு செய்துள்ளது. ஏற்கனவே அடிபட்ட புலியாக இருக்கும் கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அதிமுகவை உடைத்து கூறு போடும் வேலையை பாஜக சத்தமின்றி செய்து வருகிறது. ஊழல் சமாச்சாரங்களை,காட்டி ,மிரட்டி எடப்பாடி, பன்னீர்செல்வம் இருவரையும் தங்கள் கட்டுப்பாட்டில் பாஜக வைத்துள்ளது. பாஜக ஆதரவாளர் குருமூர்த்தி கடுமையாக அதிமுவை சாடி பேசியது நினைவில் இருக்கலாம். இதனால் ஜெய்குமாருக்கும் அவருக்கும் மோதலே வந்தது. உண்மையில் சூடு,சொரணை இல்லாத கட்சியாக அதிமுக உள்ளது என்று சக கட்சியினரே வசைபாடி வருகின்ற னர்.மூத்த தலைவர்கள் என்ன சொல்வது ,செய்வது என்று நிற்கிறார்கள். அதிமுகவில் இருந்து பலர் விலகி விட்டனர். கூழை கும்பிடு போட்டு கட்சி நடத்த வேண்டாம்.மானமே முக்கியம் என்று பல நிர்வாகிகள் சொன்னாலும் இரட்டை த் தலைமை கண்டுகொள்வதில்லை.தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து அதிமுக வாயை திறப்பதில்லை .பாஜக தலைவர் அண்ணாமலைதான் பேசி வருகிறார். இப்படி அடங்கி,ஒடுங்கி தமிழகத்தில் அதிமுக நிற்கிறது. எந்த கஷ் டமும் இல்லாமல் 4 இடங்களை சட்டசபை தேர்தலில் பாஜக அள்ளிக்கொண்டு சென்றது. நிலைமை இப்படி இருக்க நெல்லை தொகுதி எம் எல் ஏ நயினார் நாகேந்திரனின் துடுக்குத்தனமான பேச்சு இன்று சந்தி சிரிக்க வைத்துள்ளது.
அரியலூர் மாணவி மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தமிழக பா.ஜ., சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அப்போது நயினார் நாகேந்திரன் பேசுகையில், ‛தமிழகத்தில் அ.தி.மு.க., எதிர்க்கட்சி போல செயல்படவில்லை. பா.ஜ., எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும் கூட துணிந்து கேள்வி எழுப்புகிறது. சட்டசபையில் ஆண்மையோடு பேச அ.தி.மு.க.,வில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை,’ எனப் பேசியிருந்தார்.இதையடுத்து அதிமுக, பாஜக கூட்டணியில் கருத்து மோதல் ஏற்பட்டு இன்று கடும் கொந்தளிப்பை உண்டாக்கி உள்ளது. குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலை அச்சமின்றி கேள்வி எழுப்பி வருகிறார்.அதிமுக மக்கள் பிரச்சனையை சட்டமன்றத்தில் எப்போதுமே பேசுவதில்லை என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.இதற்கு அதிமுக நிர்வாகிகள் சரமாரி பதில் அளித்து வருவதுடன், நயினாரை விளாசி எடுத்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் வடிவேலு பட காமெடி போல எங்களுக்கு நிறைய வேலை இருக்கு ஆண்மை இருக்கா ..இல்லயா என்று சொல்லுங்க என திமுக ஐ டி விங் கிண்டல் அடித்துள்ளது.இதன் உச்சகட்டமாக அதிமுகவின் மதுரை ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன், அண்ணன் நயினார் நாகேந்திரன், நீங்கள் வேண்டுமானால் அதிமுக தோள் மேல் தொத்திக் கொண்டு பெற்ற சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு , தாங்களாக மீண்டும் வெற்றி பெற்று தங்கள் ஆண்மையை நிருபியுங்களேன் …ஆண்மை என்பது சொல் அல்ல செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில், நயினார் நாகேந்திரன், அதிமுகவைப் பற்றிய தனது கருத்துக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது: நயினார் நாகேந்திரனின் கருத்து பா.ஜ.,வின் நிலைபாடு இல்லை. வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தேன். அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணியில் எந்த சலனமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம். பல இக்கட்டான சூழ்நிலைகளில் பா.ஜ.,விற்கு அ.தி.மு.க., துணை நின்றுள்ளது என விளக்கம் அளித்துள்ளார். பேசியது அனைத்தும் பதிவாக உள்ள நிலையில் நயினாரின் நழுவல் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.நன்கு பதவியில் இருந்து அதிமுகவில் சம்பாதித்து இன்று அதே கட்சியை நா கூசாமல் விமர்சிக்கிறார் என தொண்டர்கள் திட்டி தீர்க்கின்றனர்.. இத்தனைக்கும் எடப்பாடி, பன்னீர் இருவரும் வாயை திறக்கவில்லை.நெல்லை அதிமுகவோ கப் சிப் என இருக்கிறது. ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை என ரத்தங்கள் கொதித்துள்ளனர்.ஆண்மை என்றால் என்ன என நயினாரிடம் கேள்வி எழுப்பி வருவது இன்று டாப் நியூஸ்
– மூத்த பத்திரிகையாளர் எஸ்.ரவீந்திரன்
Leave a Reply