காஞ்சியில் பிறந்தால் முக்தி! காசியில் இறந்தால் முக்தி!! ஆனால் திரு(வ)அண்ணாமலையை நினைத்தாலே முக்தி!!! சைவ தளத்தில் அகங்காரத்தை அழிக்ககூடிய ஒரு ஸ்தலமாக விளங்கியதுதான் அண்ணாமலை, அந்த அகங்காரம் இறைவனுக்கே ஏற்பட்டால்கூட அதை பொசுக்குவது இந்த அன்கி சொரூபம் அண்ணாமலையின் சிறப்பு, அண்ணாமலை என்றால் அருணம்+அசலம் சூரியன் அல்லது நெருப்பு ஜுவாலை நெருப்பு பிழம்பு, நெருப்பு மலை அதன் பெயரே சாட்சி!
உலகமெல்லாம் இருக்க கூடிய சிவ அடையாளங்கள் சிவதளங்கள் சிவனுடைய இருப்பிடமாவோ, திருவிளையாடல் தளமாகவோ இருக்கும் ஆனால், மலையே அக்னி சொரூபமாய் அண்ணாமலையாய் இருப்பது திருவண்ணாமலையில் மட்டும்தான். ஏன் என்றால்.., அண்ணாமலையை நினைத்தால், உலகத்தில் உள்ள அத்துணை ஆன்மாக்களையும் நினைப்பதாக ஐதீகம்! தேவாரத்தில், உலகம் முழுவதும் இருநூற்றி எழுபத்தி ஐந்து சிவ தலங்களைப் பற்றி சொல்லி உள்ளனர், அதில் இருத்தி இரண்டு சிவதலங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதில் மிகவும் புனிதமானது திருவண்ணாமலை. பஞ்சபூதத்தில் நெருப்பாய் சிவன் இங்கு அமர்ந்திருப்பதால் இதை மணிப்பூர்வ ஸ்தலம் என்று சொல்கிறோம் இந்த மலையை கடவுள்களும், வானவர்களும் தேவர்களும் வந்து வணங்கி சென்றதால் இதனை ஆதார ஸ்தலம் என்கிறோம். அதற்கு ஆதாரமாக அஷ்டலிங்கங்கள்…, சூரியன், சந்திரன், பிரம்மா, விஷ்ணு, இங்கு வழிபட்டிருக்காங்க.
இவ்வளவு சிறப்புகள் இருந்ததால், இடைக்காடர் சித்தர், குகை நமச்சிவாயர், விருட்பாட்சி தேவர், தெய்வசிகாமணி, அருணாச்சல தேசிகர், அருணகிரிநாதர், சேஷாத்திரி மகான், ரமணமகரிஷி, யோகிராம் சூரத்குமார், மூக்குபொடி சாமியார் ஆகியோர் வந்து அமர்ந்தனர். இத்திருத்தலத்தில் உண்ணாமலை அம்மனுக்கு பத்துநாள் திருவிழா இருக்கு, விழாக்களில் பாதி, தன்னில் பாதியை கொடுத்திருக்கிறார் அண்ணாமலையார். அம்பாளுக்கு வழிகாட்ட, அந்த காலகட்டத்தில் வாழ்ந்த கௌதமமகரிஷி, துர்வாசமுனிவர் இங்கு வாழ்ந்துள்ளனர். அதனால்தான் இந்த மலையையே சிவனாக கருதி மலைவளம் வருகிறோம். இமயமலைக்கும் முந்தியது அண்ணாமலை. இது இருநூறு கோடி ஆண்டுகள் பழமையானது.
அஷ்ட லிங்கங்கள் ஒரு மனிதனுடைய பனிரெண்டு இராசிகளும் எட்டு கட்டத்திற்குள் அடங்கும் அந்த எட்டு கட்டங்கள் போல் இங்கு அஷ்ட லிங்கங்கள் அமைந்திருப்பது சிறப்பு! சிவனே அந்த எட்டு கட்டங்களையும் ஆளக்கூடிய அமைப்பில் திருஅண்ணாமலையே இருப்பதால், சித்தர்கள், யோகிகள், மகான்கள், பக்தர்கள் தன்பக்கம் இழுக்க கூடிய காந்த சக்தியாக இயற்கையாகவே இந்த மலை அமைந்துள்ளது.
- இந்திர லிங்கம்
இந்திரனே இங்கு வந்து சிவனை வழிபட்டிருக்கிறார். சூரியனும், சுக்கிரனும் ஆட்சி பெற்றுள்ளனர். இந்திரலிங்கத்தை வணங்குவதால், நீண்ட ஆயுள், அரசபோக வாழ்க்கை, பெருத்த செல்வம் கிடைக்கும். பணிரெண்டு இராசியில், துலாம் மற்றும் ரிஷபம் இராசிக்காரர்கள் வணங்க வேண்டி லிங்கம் இந்திரலிங்கம். - அக்னி லிங்கம்
சந்திரனுக்கு கேது வடிவில் காட்சி கொடுத்து, குளிர்ந்து அக்னி லிங்கமாக மாறி இருக்கிறார். மனசஞ்சலங்களை தீர்ப்பதற்கு அக்னி லிங்க தரிசனம் மிகவும் சிறப்பானது. சிம்ம இராசிக்காரர்கள் வழிபட வேண்டிய லிங்கம். - எமலிங்கம்
சிவபெருமான் தாமரை மலர்மீது எமனுக்கு காட்சி அளித்த லிங்கம் எமலிங்கம் வீண் செலவுகளை தவிர்ப்பதற்காகவும், பணபுழக்கம் அதிகரிப்பதற்காகவும், ஆயுள் விருத்திக்காக வழிபட வேண்டிய லிங்கம் எமலிங்கம், விருட்சக இராசிக்காரர்கள் வழிபட வேண்டிய லிங்கம். - நிருதி லிங்கம்
தென்கிழக்கு திசையில் அமைந்துள்ளது. நிருதி பகவானுக்கு சிவபகவான் நிருதி ஈஸ்வரராக காட்சி அளித்த இடம்தான் நிருதிலிங்கம். இதன் அருகில் இருக்க கூடிய சனீஸ்வரன் குளத்தில் நீராடி மனநிம்மதி குழந்தைப்பேரோடு வாழலாம். இது மேஷ இராசிக்காரர்கள் வழிபட வேண்டிய லிங்கம். - வருண லிங்கம்
மேற்கு திசைக்கு அதிபதியான சனிபகவானின் அருளைப் பெற வருணலிங்கத்தை நாம் வழிபட வேண்டும். ஈஸ்வரன் நீர்வடிவத்திலான தரிசனம் வருணபகவானுக்கு கொடுத்த இடம் வருணலிங்கம். தீராத வினைகளையெல்லாம் தீர்க்க கூடிய லிங்கம் வருணலிங்கம். மகரம், கும்பம் இராசிக்காரர்கள் வழிபட வேண்டிய லிங்கம். - வாயு லிங்கம்
வாயுபகவானை ஈசன் ஆட்கொண்ட ஸ்தலம்தான் வாயு லிங்கம். இந்த லிங்கத்திற்கு வடமேற்கு அதிபதியான கேது பகவானின் பரிபூரண ஆசி உண்டு இவரை வணங்குவதால் சகல யோகமும் கிடைக்கும். குறிப்பாக கடக இராசிக்காரர்கள் வழிபட வேண்டிய லிங்கம். - குபேர லிங்கம்
குபேரன் தான் இழந்த செல்வங்களை எல்லாம் திரும்ப பெற வேண்டி தவமிருந்து மீண்டும் செல்வம் கிடைக்கப் பெற்ற ஸ்தலம் குபேரலிங்கம். செல்வசெழிப்பு வேண்டுவோர் வழிபட வேண்டிய லிங்கம். இங்கு குரு பகவான் ஆட்சி செய்கிறார் தனுசு, மீன இராசிக்காரர்கள் வழிபட வேண்டிய லிங்கம் இதுதான். - ஈசான்ய லிங்கம்
ஈசனை நந்தீஸ்வரன் வழிபட்ட ஸ்தலம்தான் ஈசான்ய லிங்கம். ஈசனை தவிர அனைத்தும் நிலையற்றவை என உணர்த்தும் ஞானத்தை கொடுக்க கூடிய ஸ்தலம் ஈசான்யலிங்கம். புதன் ஆட்சி செய்யக்கூடிய இடம் அனைத்து கலைகளும் தேர்ச்சிபெற ஈசான்ய லிங்க வழிபாடு மிகவும் உறுதியாக இருக்கும். மிதுனம், கன்னி இராசிக்காரர்கள் வழிபட வேண்டிய லிங்கம்.
இவ்வளவு பெருமை மிகுந்த புராண அமைப்புடன் நாம் திருஅண்ணாமலை ஸ்தலத்தை உலகத்தார் பார்வைக்கு இன்னும் முழுமையாக கொண்டு செல்லவில்லை, சிலவற்றை நூறு ஆண்டுகள் பழமையானது என மார்தட்டிக்கொள்ளக்கூடிய மேலை நாடுகள் மத்தியில் இருநூறு கோடி ஆண்டுகள் பழமையான இந்த சிவனை, இமயமலைக்கும் மூத்த இந்த சிவனை உலகம் முழுக்க கொண்டு செல்வோம்! ஓம் நமச்சிவாய.
Leave a Reply