வந்தவாசியை அடுத்த ஆராசூர் சொந்த ஊர் என்றாலும், குடியிருப்பு என்னவோ சென்னையில்தான்! வீடு கட்டி விற்பது சினிமா படங்கள் தயாரிப்பது அம்பேத்குமாரின் பிரதான தொழில் கடந்த ஐந்து வருடங்கள் எம்எல்ஏவாக இருந்தபோது திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஓட்டுபோட்ட மக்கள் என அனைவர் கண்ணிலும் படாமல் காலம் தள்ளியவர், மீண்டும் தேர்தல் வரும்போது சீட்டு கேட்டு ஒற்றை காலில் நிற்க திமுகவினர் கொதித்துப்போய் விட்டனர். ஆனாலும் தலைமை எடுத்த முடிவின்படி மீண்டும் சீட்டு கிடைத்து திமுக அலையால் கரை ஏறினார். வெற்றி பெற்றதிலிருந்து, மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தனோடு மல்லுகட்ட ஆரம்பித்தார். மீண்டும் எம்எல்ஏ சீட் கேட்டபோது தனக்கு பரிந்துரை செய்யவில்லை என்பதுதான் காரணம் அரசு அரசியல் நிகழ்ச்சிகளில் கார்னர் பண்ண ஆரம்பித்தார். விஷயம் முற்றிப்போய் மாவட்ட மந்திரி எ.வ.வேலுவிடம் பஞ்சாயத்தை கூட்டினார் தரணிவேந்தன் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார் எ.வ.வேலு, ஆனாலும் பழையபடியே அம்பேத்குமார் தொடர அமைதியாக ஒதுங்கிக்கொண்ட தரணிவேந்தன், வந்தவாசி தொகுதி விவகாரங்கள் எதிலும் தலையிடுவதில்லை.
வந்தவாசி பிரபு, நந்தகோபால், தெள்ளார் ராஜா, இளங்கோ பெரணமல்லூர் கே.டி.ராமசாமி உட்பட ஐந்து ஒன்றிய செயலாளர்களை தரணிவேந்தனிடம் போகாமல் தன் கைப்பிடிக்குள் வைத்துக்கொண்ட அம்பேத்குமார், தன்னுடைய உதவியாளர் கிஷோர் உட்பட அனைவரையும் பங்குதாரர்களாக கொண்டு மும்முனி பைபாஸ்ல கோடிகளை கொட்டி தார்பிளான்ட் அமைக்க, விஜயவாடா டூர் போய் வந்திருக்காங்க, தேர்தல் வாக்குறுதிகளை சட்டமன்றத்தில் பேசி இருக்கிறார் தொகுதியில நல்லது கெட்டதுனா தெரிஞ்சா கந்துக்கிறார். புதியதாக கட்சிக்கு வந்தவர்களை காரில் ஏத்திகிட்டு எங்களை கண்டுக்கறதில்லை என்கின்றனர் திமுகவினர்! எப்பவும் சென்னையில் இருக்கும் அம்பேத்குமார் எப்பொழுதாவது வந்தவாசி பக்கம் வருவார், அப்படி வரும்போது யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். அம்பேத்குமாரின் தம்பி பிரபுதான் வந்தவாசியில் அவசரத்துக்கு எம்எல்ஏ இவரிடம் விஷயத்தை சொன்னால் அண்ணனிடம் சொல்லிடுவார் ஐந்து ஒன்றிய செயலாளர்கள் மட்டும் நல்லா இருக்காங்க என்கிற குமுறல் சத்தம் மட்டும் ஓங்கி ஒலிக்குது.
Leave a Reply