Save 20% off! Join our newsletter and get 20% off right away!

பாலியல் தொழிலில் பிளஸ் டூ மாணவிகள்… -சென்னையில் பயங்கரம்

சென்னையில் ப்ளஸ் டூ படிக்கும் மாணவிகளை மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சென்னை மட்டுமல்லாது ஏராளமான மாணவிகளை விமானம் மூலம் வெளி மாநிலங்களுக்கும் அழைத்துச் சென்று பாலியல் தொழில் நடத்தி உள்ளனர்
இது குறித்த தகவல்கள் சென்னை வாழ் பொது மக்களை பீதியில் உறைய வைப்பதாக இருக்கிறது
சென்னை வளசரவாக்கம் ஜெய்நகர் 2வது தெருவில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பாலியல் குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் அந்த வீட்டுக்குச் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் புரோக்கர் நதியா அவரது சகோதரி சுமதி மற்றும் சகோதரியின் இரண்டாவது கணவர் ராமச்சந்திரன், நேபாள நாட்டைச் சேர்ந்த மாயா ஒலி, ஜெயஸ்ரீ, அசோக் குமார், ராமச்சந்திரன் மற்றும் 17, 18 வயதில் இரு பெண்கள் என 9 பேர் பிடிபட்டனர்.
இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நதியா 12வது படிக்கும் தனது மகள் மூலமாக ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவிகளை தனது வீட்டுக்கு வரவழைத்து 17 வயதேயான அந்த மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.
பள்ளியில் படிக்கும் மாணவிகளில், வறுமையால் கஷ்டப்படும் மாணவிகள் தாயுடன் தனியாக இருக்கும் மாணவிகள் மற்றும் வீட்டில் பள்ளி படிப்பு நேரம் போக பகுதி நேரமாக வேலை செய்யும் மாணவிகள் என குறிவைத்து மாணவிகளை பிடித்துள்ளனர்
இதற்கு நதியாவின் மகள் தான் உடந்தையாக இருந்து எல்லா வேலைகளையும் செய்திருக்கிறார். மாணவிகளிடம் நல்ல தோழி போல் பழகி அவர்களை அழைத்து வருவது போன்ற வேலைகளை செய்துள்ளார்
பெண் புரோக்கர் நதியா இதற்காக 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை பணம் வசூலித்திருப்பதும், பாலியல் தொழிலில் ஈடுபட்ட மாணவிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் கொடுத்திருப்பதும் தெரிய வந்தது
கடந்த ஓராண்டாக நதியா தனது மகள் மூலமாக ஏராளமான மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். மேலும், பஞ்சாபைச் சேர்ந்த ஒருவர் மாணவிகளை விமானத்தில் ஹைதராபாத்திற்கும், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளுக்கும் பாலியல் தொழிலுக்காக அனுப்பி வைக்கப்பட்டதும் தெரிய வந்தது.
இதுமட்டுமன்றி, கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் என்பவர் அடிக்கடி சென்னை வந்து பள்ளி மாணவிகளை வெளியில் அழைத்துச் சென்று அவர்களோடு பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார். அதேபோல, சென்னை மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற 70 வயது முதியவரும் பள்ளி மாணவிகள் பலருடன் அடிக்கடிக் பாலியல் உறவு வைத்திருந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிந்தது.
அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் சென்னை தி நகர் டாக்டர் ராமதாஸ் சாலையைச் சேர்ந்த 37 வயதான நதியா தான் இதற்கு ஏற்பாடு செய்ததாக கூறியுள்ளார்
நதியா செல்போன் இணையதளம் மூலம் தனது வாடிக்கையாளர்களை தேடி பிடித்ததும் தெரிய வந்துள்ளது
பெண் புரோக்கர் நதியா இந்த பாலியல் தொழில் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் புதிதாக வீடு கார் ஆகியவற்றையும் வாங்கி உள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது
இவர்களிடம் இருந்து 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நதியா உள்பட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ள போலீசார், மீட்கப்பட்ட 2 இளம்பெண்களை காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நல அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் நடைபெற்ற இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது
இதர்கிடையே பிளஸ் டூ மாணவிகளை ஏமாற்றி பாலியல் தொழில் நடத்தி வந்த விவகாரத்தில் கருக்கா வினோத்திற்கு தொடர்புள்ளதாக புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சமீபத்தில் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசி கைதானவர் இருக்கா வினோத். ஏற்கனவே இவர் இந்து முன்னணி அலுவலகத்தின் மீதும் வெடிகுண்டு வீசியவர் என்பது குறிப்பிடப்பட்டது
இந்த நிலையில் கருக்கா வினோத்திற்கும் நதியாவிற்கும் தொடர்பு இருப்பதாக புதிய பரபரப்பு கிளம்பி உள்ளது
இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் பல பரபரப்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன
அந்த அறிக்கையில், “ஆளுநர் மாளிகையில் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கருக்கா வினோத்துக்கு நெருக்கமான 37 வயதான பெண்ணின் வீட்டில் என்ஐஏ சோதனையிடும் போது கண்டெடுத்த ஆவணங்களின் அடிப்படையில் அப்பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததும், மேலும் பலரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து மாநில பாலியல் குற்றங்கள் தடுப்பு பிரிவுக்கு என்ஐஏ தகவல் அளித்தது.
இந்த வழக்கின் விசாரணையில், அந்த பெண் தன் மகளின் பள்ளித் தோழிகளிடம் நெருங்கிப் பழகி, நடனம் கற்றுத்தருவதாகவும், அழகுக் கலை கற்றுத் தருவதாகவும் ஆசை காட்டி அந்த குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சீரழித்த அவலம் வெளிப்பட்டது. குறிப்பாக, ஐதராபாத், கோவை போன்ற நகரங்களுக்கு அந்த பெண்களை அழைத்துச் சென்று கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம் நெஞ்சைப் பிழிகிறது.
மேலும், அந்தக் குழந்தைகளின் குடும்ப நிலைமையை தெரிந்து கொண்டு பண ஆசை காட்டியும், மறுத்தால் ஏற்கெனவே ரகசியமாக எடுக்கப்பட்ட அந்தரங்க புகைப்படங்களை பொது வெளியில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். இதுவரை 7 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறு குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இந்த கொடூர குற்றம் மன்னிக்க முடியாதது.
அந்த நபர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும். அவசரகதியான உலகத்தில், பொருளீட்டும் நிர்ப்பந்தத்தில் இயந்திரம் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள், தங்கள் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள், யாருடன் நட்பு கொண்டிருக்கிறார்கள் என அறிந்து கொள்ளாமலும், எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என தெரிந்து கொள்ளாமலும், அவர்களின் எதிர்காலத்தை தொலைத்து கொண்டிருப்பது பெரும் துயரம்” என தெரிவித்துள்ளார்