கடலில் உயிருக்கு போராடிய கல்லூரி மாணவரை
காப்பாற்றிய அகதிகள் முகாம் தமிழர்
பி.டி.செல்வகுமார் பாராட்டு
குமரி கடலில் மூழ்கிய கல்லுரி மாணவரை உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய குமரி இலங்கை தமிழர். சத்தியராஜின் வீட்டுக்கு நேரில்சென்று சால்வை அணிவித்து, ஊக்க பரிசு தொகையும் அளித்து பாராட்டிய கலப்பை மக்கள் இயக்க நிறுவனரும், சமூக சேவகரும் சினிமா டைரக்டருமான பி.டி செல்வக்குமார் கூறும்போது
குமரி அருகே ரஸ்தாகாடு கடலில் மிலாடி நபி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சுமார் 20 கல்லூரி மாணவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ராட்சச கடல் அலையில் நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டு உயிருக்கு போராடி காப்பாற்றுங்கள் என ஒலமிட்டனர். இந்நிலையில் இந்திரசித் என்ற ஆந்திர மாநிலத்தை சார்ந்த மாணவர் நீரில் மூழ்குவதை கடலில் குளித்து கொண்டிருந்த கொட்டாரம் பெருமாள்புரம் அகதிகள் முகாமைச் சேர்ந்த தமிழ் இளைஞர் சத்தியராஜ் மனைவி பார்த்து, தனது கணவர் சத்தியராஜை காப்பாற்ற கூறினார், இந்நிலையில் துணிச்சலுடன், தாமதமின்றி செயல்பட்டு அபாயகரமான நிலையில் இருந்த மாணவரை சுமார் 30 மீட்டர் துரத்தில் தைரியமாக கடலுக்குள் குதித்து கரைக்கு மீட்டு வந்து காப்பாற்றியுள்ளார் தனது
உயிரை பணயம் வைத்து கல்லூரி மாணவரை காப்பாற்றிய இலங்கை தமிழர் சத்தியராஜ் கடவுளுக்கு மேலானவர், தனது மனைவி, குடும்பத்தை பற்றி கவலைபடாமல் மனிதநேய செயலில் ஈடுபட்ட சத்தியராஜ்க்கு தமிழக அரசு வீர தீர செயலுக்கான அண்ணா விருது வழங்க வேண்டும் மேலும் மாவட்ட கலெக்டர் மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா விருதுக்கும் பரிந்துரை செய்யவேண்டும். வரும் குடியரசு தினவிழாவில் விருதும், ஊக்கத் தொகையும்.பாராட்டு சான்றிதழும் வழங்க வேண்டும் கலப்பை மக்கள இயக்கம் சார்பில் அடுத்த நிகழ்ச்சியில் அவரை மேடையில் அழைத்து கௌரப்படுத்த முடிவு செய்துள்ளோம். தமிழக விளையாட்டு இறை அமைச்சர் உதயநிதி,தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆகியோர் சத்தியராஜை நேரில் அழைத்து பாராட்டி விருது வழங்க வேண்டும் என்றார்.
அப்போது கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் செந்தில், ரமேஷ், ராமகிருஷ்ணன் உடனிருந்தனர்
– மனோ
Leave a Reply