மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, மன்னாடி மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லாங்காடு பகுதியில், ஆதிதிராவிடர் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் வீடுகள் முறையாக பராமரிக்
கப்படாமல், இடிந்து விழும் நிலையில் மதில் சுவர்கள் பெயர்ந்து, எப்போது வேண்டுமானாலும் விழுந்து ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக, இந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு , மேலாக பராமரிக்கப்படாத வீட்டில் குடியிருந்து வருவதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எங்கள் வீடுகளை பார்வையிட்டு சென்று உடனடியாக அனைத்து வீடுகளையும் இடித்து விட்டு புதிய வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிச் சென்ற நிலையில் ,
3 ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், வருடம் தோரும் மன்னாடி மங்கலம் ஊராட்சி மன்றத்தின் சார்பாக, ஏப்ரல் மாதம் ஒவ்வொரு வீடாக வந்து கணக்கெடுத்து செல்வதும் வீட்டு வரி ரசீது போன்றவற்றை வாங்கிச் செல்வதும் தொடர்
கதையாக நடந்து வருகிறது. இதுவரை புதிய வீடு கட்டித் தருவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் ஊராட்சி சார்பிலும் எடுக்கவில்லை.
ஆகையால், மழைக்காலங்களில் வீட்டில் மதில் சுவர்கள் வீட்டின் நெற்றி பகுதிகள் பெயர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில், இருப்பதாகவும் எப்போது வேண்டுமானாலும் விழுந்து உயிர் சேதம் ஏற்படும் நிலை இருப்பதாகவும், குழந்தைகள் பெரியவர்களை வைத்துக்
கொண்டு இரவு நேரங்களில் அச்சத்துடன் வீட்டிற்குள் இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். ஆகையால் , தமிழக அரசும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் தீவிர கவனம் செலுத்தி ஆதிதிராவிடர் காலனியில் பழுதடைந்த நிலையில் உள்ள நூறுக்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டித் தர வேண்டுமென, இந்த பகுதி ஆதிதிராவிடர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-நா.ரவிச்சந்திரன்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply