Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சோழவந்தான்-ஆபத்தான நிலையில்,வயல்வெளிகளில் மின் வயர்கள்…சீர் செய்ய விவசாயிகள் கோரிக்கை

மதுரை மாவட்டம்,  சோழவந்தான் அருகே, நாச்சிகுளம் ரோட்டில், மேற்குப் பகுதியில் சோழவந்தான் முதலியார் கோட்டை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் .
 உள்பட விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள்  நிலத்தில் குறுக்கே ஆபத்தான நிலையில் ,
மின் வயர்கள் தாழ்வாக செல்கிறது. இதனால், தனது நிலத்தில் வாழை உள்பட விவசாயம் பயிரிட முடியாமல் ராஜேந்திரன் மற்றும் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து, இப்பகுதி விவசாயிகள் மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை தெரிவித்தும், தாழ்வாக தொங்கக்
கூடிய வயர்களை
சரி செய்ய முன்வரவில்லை. இதனால், விவசாயம் செய்யும் பொழுது தாழ்வாக
மின் வயர் விவசாயிகள் மீது மின்சாரம் பாய்ந்து உயிர் பலி ஏற்படக்
கூடிய அபாய கட்ட நிலையில் உள்ளது.
 கடந்த வாரம் முள்ளி பள்ளத்தில் காலை கடனை கழிக்க சென்ற ஆலடி என்ற விவசாயி தென்னந்
தோப்பில் குறுக்கே சென்ற மின் வயர் தாழ்வாக இருந்ததால், தென்னை மரத்தில் உரசி ஆலடி தடுமாறி தென்னை மரத்தில் கை வைத்த போது மின்சாரம் பாதித்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது. இதுபோல், அப்பகுதி உள்ள விவசாயிகளை உயிர்ப்பலி வாங்கும் முன் மின் வாரியம் துரித நடவடிக்கை எடுத்து ,
தாழ்வாக உள்ள மின் வயரை சரி செய்யும்படி அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-நா.ரவிச்சந்திரன்