Save 20% off! Join our newsletter and get 20% off right away!

உசிலம்பட்டி.பாஜக தலைவர் அண்ணாமலைஉருவ பொம்மை எரிக்க முயற்சி.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில், அண்ணாமலைக்கு,  எதிராக போராடிய  மகீளா காங்கிரஸ் கட்சியினர் – உருவ பொம்மையை எரிக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வ பெருந்தகையை, பாஜக தலைவர் அண்ணாமலை அவதூராக பேசியதாக, குற்றம் சாட்டி தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பி.எம்.டி. நகர் முன்பு ,மகிளா காங்கிரஸ் கட்சியின், மதுரை தெற்கு மாவட்டத் தலைவி பிரவினா தலைமையிலான மகளீர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அண்ணாமலையின் உருவ படத்தை கிளித்து எரிந்ததுடன், அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அண்ணாமலையின் உருவ பொம்மையை கைப்பற்றி எரிக்கவிடாமல், தடுத்தனர். இதனால், சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.