Save 20% off! Join our newsletter and get 20% off right away!

அரசியல் வாதிகளுக்கு குட்பைஅசத்திய உசிலம்பட்டி மாணவ-மாணவிகள்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில், பள்ளிக்கு  சென்ற மாணவ மாணவிகளை தடுத்து போராட்டத்தை நடத்திய அரசியல் வாதிகளிடம், அப்படித் தான் பள்ளிக்கு செல்வோம் என, பேசி அதிர வைத்த மாணவிகளின் வீடியோ வைரலாகி வருகிறது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் ,கள்ளர் சீரமைத்துறை, ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பார்வட் ப்ளாக் கட்சியினர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்தனர்.
இந்நிலையில், பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை வாசலிலேயே தடுத்து நிறுத்தி, வீட்டிற்கு திருப்பி அனுப்பிய சூழலில் உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவிகள் அரசியல் கட்சியினருடன் அப்படித் தான் பள்ளிக்கு செல்வோம், எங்கள் ஆசிரியர் எங்களை வர சொல்லியுள்ளார்,
எங்களை ஏன் தடுக்கிறீர்கள் என, அதிரடியாக பேசி போலீசார் பாதுகாப்புடன் பள்ளிக்கு  சென்ற  வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது
– நா.ரவிச்சந்திரன்