மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள, திருவள்ளுவர் சிலை முன்பு சி.பி.ஐ. எம்.எல். கட்சியின் சார்பில், மாவட்டக் குழு உறுப்பினர் மங்கையர்க்கரசி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பணக்காரர்களுக்கான இட ஒதுக்கீட்டை முற்றிலும் விலக்கிக்கொள்ள வேண்டும், அரசியல் சட்டத்திற்கு விரோதமான கிரிமினல் சட்டங்களை அமலாக்கத்துறை திரும்பப் பெற வேண்டும்.
மத்திய அரசு, சில கோடி மக்களுக்கான வேலை உறுதித் திட்டத்திற்கு 2.5 லட்சம் கோடிகளை ஆண்டுதோறும் ஒதுக்க வேண்டும். தமிழக அரசு அனைவருக்கும் வேலை அளிக்கும் வகையில் கண்மாய் வேலையை மறுபடியும் துவக்க வேண்டும். மாறிவிட்ட மதுவிலக்கு சட்டம் 1937ஐ கைவிட்டுவிட்டு, தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமலாக்க வேண்டும்.
மது வணிகத்தில் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும், அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கும், சர்க்கரை- சாராய ஆலை முதலாளிகளுக்கும், இடையிலான இரகசிய உறவே மது விற்பனை அதிகரிப்புக்கும் முதன்மையான காரணம் என்றும் இதனைக் கண்டுகொள்ளாமல் கள்ள சாராயம் விற்பவர்களுக்கு கூடுதல் தண்டனை என்பது கண்துடைபாக உள்ளது என்றும்,
மேலும், பேரணை சாலை விரிவாக்கத்திற்காக, நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக திரித்து உருவாக்கப்பட்ட வீடு இடிப்பு நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும். மக்களுக்குப் பாதிப்பு இல்லாமல் சாலை விரிவாக்கம் நடைபெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், சிறப்புரை குற்றவியல் சட்டங்கள் குறித்து வழக்கறிஞர் வாஞ்சி நாதன் பேசினார். மாநிலக் குழு விஜயராஜன் வாழ்த்துரை வழங்கினார். மாநகர் செயலாளர் கணேஷன், மாநிலக்குழு ஈஸ்வரி, அகில இந்திய மாணவர் கழகம் தேவராஜன், புரட்சிகர இளைஞர் கழகம் விக்னேஷ் மற்றும் சிபிஐ எம்.எல். மாவட்டச் செயலாளர் மதிவாணன் ஆகியோர் பேசினர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply