Save 20% off! Join our newsletter and get 20% off right away!

முருகனுக்கு அரோகரா…முருகன் சொத்துக்கு அரோகரா…

உளுந்தூர்பேட்டையில்தான் இந்த கூத்து!சிவன் சொத்து குல நாசம். ஒரு காலத்தில இந்த வார்த்தைக்கு மரியாதையும் பயபக்தியும் இருந்தது. இப்ப அந்த காலம் மலையேறிப்போச்சி. அதனோட விளைவு சிவனோட மகன் முருகனுக்கு சொந்தமான நூற்றி எட்டு ஏக்கர் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆக்கிரமிப்பாளர்கள் ஆளுங்கட்சியான திமுகவினரும் உள்ளனர் என்பதுதான் விசேஷம் சரி இதெல்லாம் எங்கே என்கிறீர்களா…?
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரத்தில்தான். ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் சொத்துக்களை மீட்டு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபா தரப்பில் போராட்டங்களும் புகார் மனுக்களும் முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது.
மேற்படி ஆக்கிரமிப்பாளர்கள் உளுந்தூர்பேட்டை மூலசமுத்திரம், கந்தசாமிபுரம், விருத்தாசலம் சாலை வி.கே.எஸ்.கார்டன், தாங்கல் ஏரி அருகில் முருகர் கோயிலை சுற்றி உள்ளது. ஆக்கிரமிப்புகள் மேற்படி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்கள் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு ஊர்களில் உள்ள பக்தர்களால் கோயிலுக்கு தானமாக தரப்பட்டது. விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் கோயில் இடத்தில் தரை வாடகைக்கு வந்து உளுந்தூர்பேட்டை தாசில்தாரை பாக்கெட்ல வச்சிகிட்டு பட்டா மாற்றம் செய்துகொண்டதோடு மட்டுமில்லாமல், இந்த சொத்துக்களில் பல பகுதிகள் உளுந்தூர்பேட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுருவுக்கும் பங்கு உள்ளது. அவருடைய கட்டுப்பாட்டில்தான் பட்டா மாற்றம் பத்திரப்பதிவு மாற்றம் எல்லாம் நடந்தேறி உள்ளது. சவுண்ட் சர்வீஸ் முரளி, நகைகடை பர்ச்சன் சேட்டு, திமுக கவுன்சிலர சௌ.ராமலிங்கம் இவர்கள் ஆக்கிரமிப்பாளர்களின் குறிப்பிடத்தக்கவர்கள்.
சமீப காலமாக ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துக்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபா போராட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கின்றனர். அதன் விளைவாக உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட வி.கே.எஸ். கார்டன் தரப்பில் ஆக்கிரமித்திருந்த எட்டு ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு கம்பிவேலி போடப்பட்டிருக்கிறது கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர உத்தரவின்பேரில் மீதியுள்ள ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமில்லாமல் மீட்க வேண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்து கோயில் சொத்துக்களை மீட்கும் என்று உளுந்தூர்பேட்டை வாசிகள் எதிர்பார்க்கிறார்கள். கோயில் நிலங்கள் மீட்கப்படுமா?
– ந.குமார்