Save 20% off! Join our newsletter and get 20% off right away!

கவுன்சிலர்களுக்கு மிரட்டல்…என் மயிரைக்கூட புடுங்கமுடியாது,

ராசிபுரம் நகரச் செயலாளர் அடாவடி
ராசிபுரம் நகர மன்ற தலைவர் கவிதா சங்கர்  வீட்டுமனை பிரிவுகளுக்கு  அப்ரூவ்டு வழங்குவதற்கு பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்று, நகர மன்ற உறுப்பினர்களிடம்  தவறான கோப்புகளில் கையெழுத்து கேட்டு மிரட்டியதோடு, பல கோடி ரூபாய் போலி கணக்குகள் எழுதி பில்லில் கையெழுத்து போடும்படி நகர மன்ற உறுப்பினர்களை வற்புறுத்த, ஒட்டுமொத்த திமுக கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் கடந்த 26ஆம் தேதி திமுக நகர மன்ற தலைவர் கவிதா சங்கர் தலைமையில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் இரண்டு பேர் புதிய பஸ் நிலையம் மாற்ற கொண்டுவந்த தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி வெளிநடப்பு செய்தனர்.
மன்ற கூட்டத்தில் இருந்த திமுக கவுன்சிலர்கள் 24 பேரிடம் ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு துணை போகும் வகையில், பெரிய அளவில் பணத்தை பெற்றுக் கொண்டு நகர மன்ற தலைவர் கவிதாசங்கர், பல்வேறு போலியான கோப்புகளில் நகர மன்ற உறுப்பினர்களை கையெழுத்து போட வற்புறுத்தி மிரட்டினார்…
அதனால் நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கும் நகரமன்ற தலைவர் கவிதா சங்கருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது..
இதனால் ஆத்திரம் அடைந்த நகர மன்ற தலைவர் கவிதா சங்கர், திமுக கவுன்சிலர்களை பார்த்து, ஏற்கனவே உங்களிடம் வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கி வைத்துள்ளேன்,  என் கணவர் நகரச் செயலாளர் என்.ஆர்.சங்கரிடம் சொல்லி உங்களை தொலைத்து விடுவேன் என உச்சபட்சமாக மிரட்டி இருக்கிறார்.
ஆனாலும் எந்த கோப்புகளிலும் கையெழுத்து போடாமல் திமுக கவுன்சிலர்கள் நகர மன்ற கூட்டத்தை புறக்கணித்து கும்பலாக வெளியேறிவிட்டனர். விடுமுறை நாளான சனிக்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் அனைத்து கவுன்சிலர்களையும் நகராட்சிக்கு வரும்படியும், ஒரு முக்கியமான விவாதம் நடத்த உள்ளதாக நகர மன்ற தலைவர் கவிதா சங்கர் கவுன்சிலர்களை அழைத்திருக்கிறார்.
இதை நம்பி நகர மன்ற கூட்டத்திற்கு திமுக கவுன்சிலர்கள் வந்த நிலையில், உள்ளே அத்துமீறி நுழைந்த கவிதாசங்கரின் கணவர் திமுக நகர செயலாளர் என்.ஆர்.சங்கர், கதவை பூட்டிக் கொண்டு திமுக கவுன்சிலர்களை சரமாரியாக ஒருமையில் பேசியதோடு  வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
என் அண்ணன் பிரபாகரன், முதல்வர் ஸ்டாலின் மனைவி, துர்காஸ்டாலின் அவர்களின் விசுவாசி , நான் நிலைத்தால் துர்க்கா ஸ்டாலினிடம் சொல்லி உங்கள் பதவியை காலிபண்ணி நடுத்தெருவில் நிறுத்திவிடுவேன், நீங்களெல்லாம் என்னுடைய மயிருக்கு  சமம், அதைகூட உங்களால் புடுங்க முடியாது என்று மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி, சவுண்டு விட, கடுமையான வாக்குவாதம் முற்றியதில் 24ஆவது வார்டு கவுன்சிலர் கலைமணியை எட்டி உதைத்து கீழே தள்ளி விட்டுள்ளார்.
இதில் கலைமணிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் திமுக கவுன்சிலர்கள் அவரை தூக்கி கொண்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்திருக்கின்றனர்.
இந்நிலையில், ஒட்டுமொத்த கவுன்சிலர்களும் நகர மன்ற தலைவர் கவிதா சங்கருக்கு எதிராகவும், அவருடைய கணவர் நகரச் செயலாளர் என்.ஆர்.சங்கருக்கு எதிராகவும், அறிவாலயத்திற்கும், கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் எம்பிக்கும் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.
இதனால் தலைமை மீது நம்பிக்கை இழந்த கவுன்சிலர்கள் விரைவில் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய, தங்கள் வார்டு மக்களை திரட்டி மாற்றுக் கட்சியில் இணைவதாக கூடிப் பேசி முடிவெடுத்திருக்கின்றனர்.
மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், இவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக ராசிபுரம் நகரத்தில் அனைவர் மத்தியிலும் பேச்சு உலாவருகிறது. அதனால் புகார் கொடுத்து எந்தப் பயனும் இல்லை, பணத்திற்காக நகரச் செயலாளர் என்.ஆர்.சங்கரும் , நகர மன்ற தலைவர் கவிதாசங்கரும் ராசிபுரம் நகரை கூறு போட்டு விற்கின்றனர் என்று  திமுக கவுன்சிலர்கள் குமுறுகின்றனர்.
திமுக நகர மன்ற உறுப்பினர்களின் வேதனையை உணர்ந்து அராஜக செயலில் ஈடுபடும்  நகரச் செயலாளர் என்.ஆர்.சங்கர் மற்றும் அவருடைய மனைவி கவிதா சங்கர் மீது தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு வரும்.
கடந்த வருடம் என்.ஆர்.சங்கர், அவரது அண்ணன் பிரபாகரன், இவர்கள் இருவரின் தொந்தரவால் கவுன்சிலர் தேவிப்பிரியா, கணவர் அருண்லால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது முழு பூசணிக்காய் சோற்றில் மறைத்துவிட்டனர். இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை.
ஆளுங்கட்சியின் நகர செயலாளராக இருக்கும் என்.ஆர்.சங்கர் தன் மனைவி கவிதாவை நகரமன்ற தலைவராக உட்கார வைத்துக்கொண்டு அனைத்து கவுன்சிலர்களையும் மிரட்டி ஆபாச வார்த்தைகளில் பேசி எண்ணற்றமுறைகேடுகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார் ராசிபுரம் நகரத்தில்.
கவிதாவும் அவரின் கணவர் சங்கரும் அவர்களின் பேச்சுகளோ அல்லது செயல்பாடுகளோ ஆளுங்கட்சியான திமுகவுக்கு எந்தவகையிலும் பெருமைசேர்ப்பதாக இல்லை. அறிவாலயம் தலையிட்டு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ராசிபுரம் நகரமக்கள் மட்டுமல்ல, திமுகவினரும் எதிர்பார்க்கின்றனர்.
– சங்கர்ஜி