Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மதுரை-100 நாள் வேலை கேட்டு,விவசாய தொழிலாளர் மனு கொடுக்கும் போராட்டம்

100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 100 நாளும் வேலை வழங்கிட கோரியும், சட்ட கூலி நாள் ஒன்றுக்கு 319 வழங்கிட கோரியும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மேலூர் தாலுகா குழு சார்பில், மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக, மேலூர் ஒன்றியத்தில் 2024-2025 ஆண்டுக்கான 100நாள் வேலை இதுவரை. வழங்கப்
படவில்லை, மேலும், 100நாள் வேலை 15 நாள்  வழங்கவில்லை என்றால், 15நாளுக்கு உரிய சம்பளத்தை வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. எனவே, அந்த சட்டப்படி உடனடியாக வேலை வழங்கிட கோரி போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டதிற்கு, சங்கத்தின் மேலூர் தாலுகாச் செயலாளர் ஏ.தனசேகரன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர்
வீ. அமிர்தலிங்கம், மதுரை மாவட்டச் செயலாளர் வி.உமாமகேஸ்வரன் ஆகியோர் பேசினார்கள். போராட்டத்தை ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ். பாலா, தாலுகா செயலாளர் எம்.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பி. மணவாளன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். போராட்டத்தில் தாலுகா தலைவர் பி.குமரன், பொருளாளர் கே.கணேசன், துணைத் தலைவர் ஏ.குறிச்சான், துணைச் செயலாளர் என்.ராஜா, விவசாய சங்க மாவட்டக்
குழு உறுப்பினர் பி.எஸ்.ராஜாமணி, சிஐடியு தாலுகா செயலாளர் வி.சேகர் ஆகியோர் உட்பட 100 நாள்  வேலை பார்க்கும் விவசாய தொழிலாளர்கள் சுமார் 300-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

– நா.ரவிச்சந்திரன்