மதுரை வக்பு வாரியக் கல்லூரியில், மனித வள மேம்பாட்டுப்பிரிவு கல்லூரி சார்பாக மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டுதல் சார்ந்த கருத்தரங்கம் புதனன்று நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வரும் (பொறுப்பு) முனைவருமான ஷாசுலி இப்ராஹிம் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில், கல்லூரியின் மனித வள மேம்பாட்டுப் பிரிவின் ஒருங்கிணைப்பாளரும் முனைவருமான மும்தாஜ் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வில், மதுரை எஸ் எஸ்.எல். கல்வி நிறுவனம், தொழில் மற்றும் வேலைவாய்ப்பு திட்டமிடல் என்ற தலைப்பில் மேலாளரும் முனைவருமான கஃபூர் அர்சன் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து மாணவர்கள் தங்களை எவ்வாறு புதிய வேலைக்கு தயார்படுத்திக் கொள்ளுவது என்றும், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும், மேலும் மாணவர்கள் தங்கள் சுய ஆளுமையை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ளுவது என்பது குறித்தும் விளக்கிக் கூறினார். முடிவில், வேதியியல் துறைத்தலைவர் & உதவிப் பேராசிரியரும் முனைவருமான ஷாஹிதா பர்வீன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியினை மனித வள மேம்பாட்டுப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜனாப் மீர் இஸ்மாயில் அலி, ஜனாப் சையத் ஜாவித் நசீம், ஜனாப் முகமத் ரியாஸ்தீன், முனைவர் சமீம், முனைவர் கவிதா, முனைவர் புவனேஷ்வரி, செல்வராஜ், ரினோஷா பானு ஆகியோர்கள் ஒருங்கிணைத்து ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதில் பல்வேறு துறைகளை சார்ந்த பேராசிரியர்கள், பேராசிரியைகள், மாணவிகள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
– நா.ரவிச்சந்திரன்
Leave a Reply