Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மதுரை-வராத அதிகாரிகள்…கடமைக்கு நடந்த மக்களுடன் முதல்வர் திட்டம்!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, கொண்டையம்பட்டி கிராமத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது .
இத்திட்டத்தில், கொண்டையம்பட்டி,  அழகாபுரி ,சின்ன இலந்தைகுளம், கல்வேலிபட்டி மேலசின்னனம்பட்டி, அய்யங்கோட்டை ஆகிய ஊராட்சிகளில் இருந்து பொது மக்கள் கலந்து கொண்டனர் .
இந்த முகாமின் நோக்கமானது அரசின் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் வந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அந்த மனுக்
களுக்காக உடனடி தீர்வு காண்பதே மக்களுடன் முதல்வர் திட்டம் ஆகும். ஆனால், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்
பட்டி கிராமத்தில், இன்று நடைபெற்ற முகாமில் , பல அரசு துறைகளில் அதிகாரிகள் வராததால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மனுக்களை கையில் வைத்துக் கொண்டு அங்கும் இங்குமாக அலைந்தது பரிதாபமாக இருந்தது.
மனுக்களை வாங்க உரிய  அதிகாரிகள் இல்லாததால், நேரம் ஆக ஆக மனுக்கள் கொடுக்க வந்த பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததால் குழந்தையுடன் வந்த பெண்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
குறிப்பாக, இந்த முகாமில், பொதுப்பணித்துறை , மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கனிமவளத்துறை போன் துறை சார்ந்த அதிகாரிகள் வராததால்,
அது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காண மனுவை எழுதி கையில் வைத்துக் கொண்டிருக்கிறோம்.
இதை யாரிடம் வழங்க வேண்டும் என்று தெரியாமல், மனுவுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் என, பொது
மக்களும் விவசாயிகளும் கூறினர்.
மக்களை தேடி மருத்துவம் எல்லாம் தேடி கல்வி போன்ற  அரசின் எந்த ஒரு திட்டங்களும் பொது
மக்களுக்கு முறையாக பயனளிக்காத நிலையில், மக்களுடன் முதல்வர் திட்டமும்
வெறும் கண்
துடைப்புக்காக நடத்தப்பட்டது, மிகுந்த வேதனையையும், எரிச்சலையும் உண்டாக்
கியதாக, அங்கிருந்த பொதுமக்கள் பேசிச் சென்றனர்

-நா.ரவிச்சந்திரன்