இருபத்தி ஐந்து வருடங்கள் பேரூராட்சி தலைவர் ஒன்பது வருடங்களாக மாவட்ட செயலாளர், இரண்டாவத முறையாக எம்எல்ஏ ஆகி அப்படியே அமைச்சர் ஆனவர், தன்னையும் தன் குடும்பத்தையும் உறவுகளையும் தாராயமாக வளர்த்துக்கொண்டவர். தன்னை அரசியலில் வளர்த்துவிட்டு அரசியலில் தகுதியான அடையாளம் காட்டிய அரசியல் குரு அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தீட்டிய மரத்தில் கூர் பார்த்தவர், எதிர்அரசியலால் பொன்முடியை கலங்க வைத்தவர் பேரூராட்சி தலைவர், எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் அமைச்சர் பதவிகளால் திமுகவினரே பொறாமைப்படும் அளவுக்கு கோடிகளை பார்த்தவர், தமிழ்நாட்டை தாண்டி ஆந்திராவரை பொருளாதார அந்தஸ்தை விரிவுபடுத்தியவர் மாவட்ட செயலாளர் அமைச்சர் இரண்டு பதவிகளையும் காலி பண்ண பல பைல்களை உருவாக்கி அறிவாலயத்திற்கு குருநாதர் பொன்முடி தரப்பில் அனுப்பி வைக்க பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தயவோடு இதுநாள்வரை பதவிகளை காப்பாற்றிக் கொண்டவர், கடந்த ஒரு மாத காலமாக மிகுந்த கவலையில், இருக்கற இடம் தெரியாமல் அமைதியாக இருக்கிறார் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்! கவலைக்கும் அமைதிக்கும் காரணம் பாதி பதவி பறிபோய் விட்டது மீறி பதவி எப்பொழுது வேண்டுமானாலும் பறிபோகலாம் என்பதுதான் இன்றைய நிலை.
விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் செஞ்சி, திண்டிவனம், மைலம் மூன்று தொகுதிகளை கொண்ட வடக்கு மாவட்ட செயலாளராக கடந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்தபோது, மைலம் தொகுதியில் நின்ற டாக்டர் மாசிலாமணியை ராஜதந்திரமாக தோற்கடித்தது முதல் மாவட்டத்தில் வன்னியர் சமுதாயத்தில் வளராமல் பார்த்துக்கொண்டது. பழைய திமுகவினரை ஓரங்கட்டியது. துதிபாடிகளாக புதிய நிர்வாகிகளை உருவாக்கி கட்சிப் பதவிகளையும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையும் பணமாக்கிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், செஞ்சி தொகுதியை மகன் மொக்தியார் அலியிடமும், திண்டிவனம் தொகுதியை மருமகனும் உதவியாருமான ரிஸ்வானிடமும் ஒப்படைத்த மஸ்தான் பணம் சம்பாதித்ததோடு நிறைய அவப்பெயரையும் சம்பாதித்தார். இவருடைய ஆதரவாளர் மரூர் ராஜா பெரிய சாராய வியாபாரி ராஜாவின் மனைவி ரம்யா திண்டிவனம் நகராட்சியில கவுன்சிலர்! மரக்காணம் சாராய சாவுகள் அமைச்சர் மஸ்தானுக்கு மட்டுமல்ல திமுக ஆட்சிக்கே மிகப்பெரிய அவப்பெயரை உண்டாக்கியது.
மேல்மலையனூர் யூனியன் சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் வல்லம் யூனியன் சேர்மன் அமுதா ரவிக்குமார் இரண்டு குடும்பத்திற்கும் அதிகமான பதவிகளை அள்ளி கொடுத்துவிட்டார் அது என்ன காரணமோ தெரியல, ஆரணி எம்பி சீட் இல்லாட்டி மைலம் எம்எல்ஏ சீட் வேண்டும் என்று மருத்துவர் அணியை சேர்ந்த திண்டிவனம் டாக்டர் சேகர் கோடிகளால் கோரிக்கை வைத்து பின்னாடியே சுற்றிக்கொண்டு இருந்தார். எம்எல்ஏ சீட்டும் இல்லை எம்பி சீட்டும் இல்லை கோடிகள் என்னாச்சு என்று கேட்க, ஒரு பகுதியை மட்டும் திருப்பி கொடுத்திருக்கிறார் அமைச்சர் மஸ்தான். கள்ளக்குறிச்சி சாராய சாவுகள் விஸ்வரூபம் எடுக்க, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வர வன்னியர் ஓட்டு தொகுதியில் அதிகம் வன்னியரை வேட்பாளரா நிறுத்தணும் வன்னியரை மாவட்ட செயலாளரா நியமிக்கணும் என்கிற சூழல் உருவாக மறைந்த புகழேந்தியின் மாவட்ட செயலாளர் சீட்ல தன் மகன் கௌதம சிகாமணியை உட்கார வைத்த பொன்முடி, மஸ்தான் பதவிகளை பறிக்க தீவிரமாக வேலை பார்க்க, வேற வழியில்லை மஸ்தானின் இரண்டு பதவிகளையும் பறிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தயாராக, குறுக்கே புகுந்த அமைச்சர் எ.வ.வேலு காப்பாற்ற பெரியஅளவில் முயற்சி எடுத்தும் பலனில்லை. மாவட்ட செயலாளர் ஒரு வன்னியரை போட்டே ஆகணும் இல்லாட்டி டாக்டர் ராமதாஸ் பஞ்சாயத்தை கூட்டுவார் என்று எச்சரிக்க, டாக்டர் சேகரை மாவட்ட செயலாளராக்கி விஷயத்தை சிம்பிளா முடிச்சிட்டாங்க.
வடக்கு மாவட்ட செயலாளர் ஆயிட்டாரே தவிர டாக்டர் சேகரால் வாய்விட்டு சிரிக்க முடியல நிர்வாகிகள் தொண்டர்கள் யாரும் வரல கண்டுக்கல விஷயத்தை மஸ்தானிடம் சொல்லி புலம்ப அவங்க வராட்டி என்ன? அவங்களை தேடி நீங்க போங்கன்னு சொல்லிட்டார். மாவட்ட செயலாளரா இருக்கறதால மைலம் தொகுதி நமக்குத்தான் என்று உள்ளூர சந்தோஷப்பட, அதெப்படி நாங்களும் மைலத்திலதான் நிற்போம் என்று மதிமுகவிலிருந்து வந்த டாக்டர் மாசிலாமணியும், தேமுதிகவில் இருந்து வந்த சிவா (எ) சிவலிங்கமும் இப்பவே மீசையை முறுக்க, லேசான பதட்டத்தை பார்க்க முடியாது. அதெல்லாம் இருக்கட்டும் தமிழ்நாட்ல இளைஞரணி நிர்வாகிகள் லிஸ்ட்ல நான் மூன்றாவது இடத்தில இருக்கேன் ஏற்கனவே ஒன்றுபட்ட மாவட்ட செயலாளரா இருந்திருக்கேன். அதனால செஞ்சி தொகுதி எனக்குத்தான் என்று இளைஞரணி டீமோடு சுற்றிக்கொண்டு இருக்கிறார் ஆனந்த கண்ணன்.
லேட்டஸ்ட் நிலவரப்படி செஞ்சிக்கு வெளியே சங்கராபரணி ஆற்றோரம் இருக்கற அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார் முக்கியமானவங்க மட்டும் வந்து பார்க்கறாங்க. டாக்டர் சேகர் மாவட்ட செயலாளர் பதவி இல்லாமல் இருந்தப்பவே நிம்மதியா இருந்தார். கட்சியினர் பெருசா கண்டுக்கல, நிகழ்ச்சிகளில் டாக்டர் சேகர் படம் போடாதீங்க முக்கியத்துவம் கொடுக்காதீங்க என்று சிக்னல் கொடுக்கிறார். வருவாய் மொத்தமும் அமைச்சர் மஸ்தானே பார்த்துக்கொள்வதால் நிகழ்ச்சி செலவுகளை எப்படி சமாளிப்பது என்று டாக்டர் சேகர் முழிக்கிறார் இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவினரின் மைண்ட் வாய்ஸ் இதுதான்!
– வில்வன் வேம்பன் அரசன்
Leave a Reply