Save 20% off! Join our newsletter and get 20% off right away!

உல்லாச அறையில் கிளுகிளு சம்பவம்!சபலத்தில் விழுந்த விஐபிகள்?- காரைக்குடி பயங்கரம்

காரைக்குடியில் மதுவிருந்து கொடுத்து இளம்பெண்ணை வைத்து முக்கிய பிரமுகர்களை மயக்கிய கும்பல் அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் அரசு டாக்டர் ஒருவர் சல்லாபத்தில் இந்த கும்பலிடம் சிக்கிக்கொண்டு ரூ.1லட்சம் பணத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரைக்குடி பகுதியில் லேனா மொபைல்ஸ் செல்போன் கடை நடத்தி வந்த ஒரு இளைஞன்  நாளடைவில் புரோமோட்டார்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் கீழ் ஒரு சென்ட் இடம் வாங்க வெறும் ரூ.3லட்சம் மட்டும் செலுத்தினால் போதும் என காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் மிகப்பெரிய பேனர்களை விளம்பரமாக வைத்து அதன் மூலம் அந்த இளைஞர் காரைக்குடி பகுதியில் முக்கிய தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டவர்களின் பழகத்தை ஏற்படுத்திக்கொண்டார். நாளடைவில் இந்த புரோமோட்டார்ஸ் மூலம் அந்த இளைஞருக்கு பணம் கொட்ட தொடங்கியது. ஆரம்பத்தில் மிகவும் நடுத்தர நிலையில் இருந்த இந்த இளைஞர் தற்போது 8ஆடம்பர சொகுசு கார்கள், பங்களாக்கள், விருந்தினர் மாளிகை(கெஸ்ட் கவுஸ்) உள்ளிட்டவைகளை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளார். இந்நிலையில் நகரில் உள்ள சில முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட இந்த இளைஞர் முதலில் அவர்களை காரைக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள தனது கெஸ்ட் கவுஸ்க்கு வர வைப்பது வழக்கம். பின்னர் அங்கு அந்த முக்கிய பிரமுகர்களுக்கு மதுவிருந்து வைப்பாராம். அதன் பின்னர் அந்த முக்கிய பிரமுகர்கள் மதுபோதையில் இருக்கும் போது அங்குள்ள அறையில் உள்ள ஒரு இளம்பெண்ணை அறிமுகம் செய்து விட்டு அந்த இளைஞர் அங்கிருந்து சென்றுவிடுவாராம். மதுபோதையில் உள்ள பிரமுகர்கள் அந்த இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருக்கும்போது வெளியே சென்ற இளைஞரின் ஆட்கள் 10பேர் கொண்ட கும்பல் அந்த அறையில் உள்ள அந்த முக்கிய பிரமுகர் மற்றும் அந்த இளம்பெண்ணை அறை நிர்வாண கோலத்தில் வீடியோ எடுத்து அந்த முக்கிய பிரமுகரை மிரட்டி அவரிடம் இருக்கும் பணம் மற்றும் தங்க பொருட்களை பறித்துக் கொண்டு விரட்டி விடுவது வழக்கம். இவ்வாறு பல முக்கிய பிரமுகர்கள் இந்த கும்பலிடம் சிக்கி பணம் மற்றும் நகையை இழந்து வந்தனர்.. பூதம் கெலம்புவது போல பல விபரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

இந்நிலையில் காரைக்குடி பகுதியில் பிரபலமான இளம் வயது  டாக்டர் ஒருவர் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்த புரோமோட்டார்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் அந்த இளைஞருடன்  டாக்டருக்கு பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக இருந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இளைஞர் டாக்டரை தனது கெஸ்ட் கவுஸ்சில் நடக்கும் மதுவிருந்தில் கலந்துகொள்ளும்படி அழைத்துள்ளார். இதை நம்பி சென்ற அந்த அரசு டாக்டர் அந்த இளைஞரின் கெஸ்ட் கவுசில் நடந்த மதுவிருந்தில் பங்கேற்ற நிலையில் மேல் இருந்த அறையில் இளம்பெண் ஒருவருடன் அந்த இளைஞர் அறிமுகம் செய்துவிட்டு அங்கிருந்து அந்த இளைஞர் புறப்பட்டு சென்றார். பின்னர் திடிரென அந்த இளைஞரின் ஆட்கள் அந்த அறைக்குள் புகுந்தனர். அங்கு சல்லாபத்தில் இருந்த அந்த  டாக்டர் மற்றும் அந்த இளம்பெண்ணை வீடியோ எடுத்து அந்த டாக்டரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அப்போது தனது கைவசம் உள்ள ரூ.1லட்சம் பணத்தை அந்த கும்பல் டாக்டரை அடித்து மிரட்டி பறித்துக்கொண்டு அங்கிருந்து அந்த டாக்டரை விரட்டி விட்டனர். பின்னர் பணத்தோடு போனால் போதும் என தப்பித்து பிழைத்து வந்த அந்த டாக்டர் வழக்கம் போல் தனது பணிகளை கவனித்து வந்த நிலையில் மறுபடியும் அந்த பணம் பறிக்கும் கும்பல் டாக்டரிடம் ரூ.1கோடி கொடுத்தால் விட்டு விடுவோம். இல்லையென்றால் இளம்பெண்ணுடன் நீங்கள் இருக்கும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளிவிடுவோம் என அந்த கும்பல் மிரட்டி உள்ளனர். இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த  டாக்டர் இதுகுறித்து காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காரைக்குடி தெற்கு காவல்நிலைய போலீசார் தலைமறைவாக உள்ள அந்த இளம்பெண் மற்றும் அந்த பணம் பறிக்கும் கும்பலை தேடி வந்த நிலையில் அவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு அதிர்ச்சி சம்பவங்கள் கிடைத்துள்ளது.  டாக்டரை போன்று காரைக்குடி பகுதியில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் இந்த பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்கி பணம் மற்றும் நகையை இழந்த சம்பவம் தற்போது அடுத்தடுத்த புகார்களாக வெளி வருகிறது. காரைக்குடி பகுதியில் இந்த சம்பவம் இப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது…இதில் மேலிட காவல் துறை அதிகாரிகளும் உள்ளதாக  அதனால் தான் மேற்படி குற்றம் சாட்டப்பட்டவர் பிடிபடாமல் தப்பித்துக் கொண்டிருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலமாக தெரிந்தது இதில் பல்வேறு முக்கிய பிரமுகர் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை சார்ந்த முக்கிய நபர்களும் இருப்பதாக நம்பப்படுகிறது இதை தெளிவு படுத்த வேண்டியது காவல்துறையின் கடமையாக உள்ளதால் அவர்கள் காலம் தாழ்த்துவது மக்களுக்கு மிகுந்த சந்தேகத்தை உருவாக்குகிறது ஒரு சிலரை தப்பிக்க வைப்பதற்காக இந்த விசாரணையை தாமதப்படுத்துகிறார்களோ என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பேசிக் கொண்டு உள்ளனர் ஆனால் இதை தெளிவு படுத்த வேண்டியது காவல் துறையின் கடமையும் முக்கியமும் ஆகும்…

– பகவதி முருகன்