கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செம்பியன்மாதேவி கிராமத்தைச் சேர்ந்த 15 குடும்பத்தினர் நாட்டு மாடு மேய்ச்சல் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை வனப்பகுதி ஒட்டி உள்ள பகுதியில் பட்டி அமைத்து வளர்த்து வருகின்றனர் பல தலைமுறைகளாக இத்தொழிலை செய்து வரும் இவர்கள், வெயில் மழை என பாராமலும், மழை காலத்தில் குடை ரெயின் கோட் என எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மழையில் நனைந்தவாரு மாடுகளை மேய்த்து வருகின்றனர் 6 மாதங்கள் சுற்றியுள்ள பகுதிகளில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு பட்டியில் கொண்டு வந்து அடைப்பார். பின்னர் 6 மாதங்கள் கும்பகோணம், சிதம்பரம், தஞ்சாவூர் என இதர மாவட்டங்களுக்கு மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்று வருவர். வனத்துறையிடம் குறிப்பிட்ட தொகை செலுத்தி பாஸ் பெற்று வனப்பகுதியில் மாடுகளை மேய்த்து வந்தனர். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக வனத்துறையினர் பாஸ் ஏதும் வழங்காமல் பணம் மட்டும் பெற்று வந்தனர் இதனை தொடர்ந்து வனத்துறை ஒட்டி உள்ள பகுதியில் மாடுகளைப் பட்டியில் அடைக்கும் பகுதி தனி நபருக்கு சொந்தமானது எனவும், வனத்துறைக்கு சொந்தமானது ஏனவும் வழக்கு நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளாக நடைபெற்று நிலுவையில் இருந்து வருகிறது இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக மாடுகளை பட்டி அமைத்து வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாடுகள் பட்டி அமைத்துள்ள பகுதிக்கு உளுந்தூர்பேட்டை வனத்துறையினர் சென்றனர். அங்கு மாடுகளைப் பட்டி அமைக்க கூடாது வனப்பகுதியில் உள்ள மரக்கன்றுகளை மாடுகள் மேய்ந்து பாதிப்பு ஏற்பட்டதாக கூறி மாடு மேய்ப்பவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது வனத்துறை அதிகாரி ஒருவர் ஒரு பட்டிக்கு 50,000 என 5 பட்டிக்கும் 2.5 லட்சம் அபதாரத்தை கட்டிவிட்டு மாடுகள் மேய்த்துக் கொள்ளுங்கள் என கூறிய போது
இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வனத்துறையினர் பட்டி அமைக்கப்பட்டுள்ள பகுதியில் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு ஆங்காங்கே பள்ளங்களை வெட்டி மாடுகள் படுக்காதவாறு செய்தனர். அப்போது மண் வெட்டும் போது படுத்திருந்த மாடுகளின் மீது ஜேசிபி இயந்திரங்களால் படுகாயம் ஏற்பட்டதால் மாடு வளர்ப்போர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர் மாட்டு சாணங்களை டிப்பர் லாரிகளில் வனத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். வனத்துறையினரின் இத்தகைய செயலால் மாடு வளர்ப்போர் கடும் அதிருப்தியடைந்தனர். அதனைத் தொடர்ந்து மாடு வளர்க்கும் செம்பியன்மாதேவி கிராமத்தைச் சேர்ந்த மன்னார் 55, அவரது மகன் மணிகண்டன் 32 ஆகிய இருவரை பிடித்துச் சென்று எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வனத்துறையினர் வனத்துறைக்குட்பட்ட பகுதியில் மரக்கன்றுகளை மேய்ச்சலிட்டு, பாதிப்பு ஏற்படுத்தியதாகவும், தகராறில் ஈடுபட்டதாகவும் மாடு மேய்ப்பவர்கள் மீது புகார் அளித்துள்ளனர் இது குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரணை செய்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அதே நேரத்தில் மாடுமேய்பவர்கள் வனத்துறையினர் தங்களை தரங்குறைவாக பேசியதாகவும், தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகவும், மாடுகளுக்கு காயங்களை ஏற்படுத்தியதாகவும் போலீசாரிடம் புகார் அளித்தனர். ஆனால் அவர்களின் புகார்களை போலீசார் ஏற்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவத்தை அறிந்த தமிழ்நாடு மேச்சல் சமூக கூட்டமைப்பு மாநில தலைவர் ராஜீவ்காந்தி தலைமையில் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர் அங்கு வனத்துறையினரின் இச்செயலை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும். அத்துமீறி நடந்து கொண்ட வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பாவி மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும். மாட்டு சாணத்தை அள்ளி சென்றதற்காக இழப்பீடாக ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும் வனஉரிமைச் சட்டம் 2006 வழங்கி உள்ள மேய்ச்சல் உரிமையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு நிர்வாகிகள் புகார் அளித்தனர். மாடு மேய்ப்பவர்களிடம் வனத்துறையினர் அத்துமீறிய சம்பவத்தால் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
– இரா.நந்தகோபால கிருஷ்ணன்
Leave a Reply