விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் காந்தி ராஜாஜி படம் மதுவிலக்கை ஆதரித்ததால் காந்தி ராஜாஜியை ஏற்கிறோம் என்கிற திருமாவளவனின் கருத்து ஏற்றுக் கொள்வதாக இல்லை பல்வேறு முரண் உள்ளவர்களை மதுவிலக்கு கொள்கையில் ஆதரிக்கிறோம் என்று சொல்லுகிற திருமாவளவன் ராமதாசையும் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
இந்திய அரசு தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் தேர்தல் அரசியலுக்காக இல்லாமல் மக்களுக்காக சமூக இயக்கமாக நடத்தவும் தான் தயாராக உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை விசிக சார்பில் நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில்
மது ஒழிப்பிற்கான இனையதள பக்க கையெழுத்து இயக்கமாக Ban liquor and drugs.com பக்கத்தை தொடங்கி வைத்து நூறு நாட்களில் 50 லட்சம் கையெழுத்தினை பெறுவதற்காக இலக்காக நிர்ணயிக்கபட்டது. அதனை தொடர்ந்து மேடையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்
அகில இந்திய அளவில் அரசியலில் தாக்கதை ஏற்படுத்தும் மாநாடாக மது ஒழிப்பு மாநாடு அமைந்துள்ளதாகவும், மழை கொட்டும் என்று அஞ்சி நின்றபோது இயற்கை எப்போதும் நம் பக்கம் இருந்துள்ளது அது போல் இன்றும் மழை இல்லாமல் மாநாடு நடைபெற ஒத்துழைத்துள்ளதாகவும்,ஒற்றைக்கோரிக்கை கெளமத புத்தர் காலத்தில் இருந்து பேசப்பட்டு வருவதாகவும், திருமாவளவன் அய்யா வைகுண்டர் புத்தர் ஞானவம்சத்தில் இருந்து வந்ததால் மது விலக்கு குறித்து பேசவந்துள்ளதாக கூறினார்.
இந்த மாநாட்டில் ராஜாஜி, காந்தியின் வெட்டுருவம் மாநாட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது அரசியலுக்காக இல்லை மதுவிலக்கு, மதச்சார்பின்மை என்ற கொள்கைக்காக என்றும் இந்தியா முழுவதும் மதுவிலக்கு வேண்டும் எந்த மகானும் மதுவை ஆதரித்தது இல்லை மதுவை தொடாமல் ஒரு சமூகம் பின்பற்றி வருகிறது என்றால் இஸ்ஸாமிய சமூகம் தான்
உலகத்தில் தோன்றிய மகான்கள் யாரும் மதுவை ஆதரித்து பேசியதில்லை ஒழிக்க முடியாது என்றும் கூறவில்லை வடலூர் வள்ளலார் மதுவை அருந்த கூடாது என கூறினார். நாடார் சமூகம் கள்ளு குடிப்பது இயல்பான ஒன்று அப்படி பட்ட சமூகத்தில் வந்த வைகுண்டர் மது அருந்த கூடாது என கூறினார்.
அரசமைப்பு சட்டம் 47 மதுவிலக்கு கொண்டு வரவேண்டுமென நாடாளுமன்றத்தில் பேசியதாகவும்,
தேசத்தை சாதி வெறியிலிருந்து மதவெறியிலிருந்து இளைஞர்கள் நல்வழிபடுத்த வேண்டும், மதுவிற்கு அடிமையாகி இருந்தால் பெரியார், காரல்மார்க்ஸ் போன்றவர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள்
இளம் வயதில் போதைக்கு அடிமையானால் மனித வளம் பாழாகிவிடும் மனித வளம் ஆற்றல் மிக்கது மனித வளம் பாழாக கூடாது.
சட்டமன்ற தேர்தலுக்கு 18 மாதங்கள் இருக்கிற நிலையில் இப்போதே கூட்டணிக்கு அடித்தளம் போட்டுவிட்டதாக பேசினார்கள் இதன் மூலம் மது ஒழிப்பு மாநாட்டினை மடை மாற்றம் செய்து விட்டதாக குற்றஞ்சாட்டினார்.
சாதி ஒழிப்பு, மத பிரச்சனை ஒரு மாநிலத்தில் சுருக்கி பார்க்க முடியாது அது தேசிய பிரச்சனை அது போல தான் மதுவிலக்கு என்றும்
அயல்நாடுகளில் இருந்து போதை பொருட்கள் வந்து கிராமங்களில் எளிமையாக கிடைக்கிறது. போதை பொருட்கள் கொண்டு வந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் பெரிய கூட்டம் உள்ளது.
பள்ளி கூடம் கல்லூரிகளில் போதை பழக்கம் உள்ளது. இந்த போதையானது கிராமங்கள் வரை கிடைக்கிறது. திமுக மது ஒழிப்பு மாநாட்டிற்கு வருகிறது என்றால் மதுவிலக்கில் அவர்களுக்கும் உடன்பாடு இருக்கிறது. மதுவிலக்கை கொண்டு வரும்போது ஏற்படும் இழப்பீட்டினை சரி செய்ய ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என கலைஞர் கருனாநிதி 71 ல் கூறினார். ஆனால் காங்கிரஸ் நிதி ஒதுக்கவில்லை எம் ஜி ஆர் காலத்தில் டாஸ்மாக் கடைகள் ஏலம்விடப்பட்டன. அது ஜெயலலிதா காலத்திலும் தொடர்ந்ததால் முதலமைச்சர் ஸ்டாலின் காலத்திலும் அது தொடர்கிறது. மதுகடைகள் மூடமுடியாது என கூறவில்லை அதில் நிர்வாக சிக்கல் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.
மதுக்கடைகள் மூடப்பட்டால் மக்களுக்கு நலம் பயக்கும் இந்திய அரசு தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
தேர்தல் அரசியலுக்காக இல்லாமல் மக்களுக்காக சமூக இயக்கமாக நடத்தவும் தயாராக உள்ளேன்
திருமாவளவன் தினந்தோறும் பாட்டிலை திறக்கும் நபர் என்று கூறுகிறார்கள் தமிழிசைஅக்காவிற்கு அந்த பழக்கம் இல்லை என நம்புவதாகவும் அதே போல் தான் திருமாவளவனும் உள்ளதாக கூறினார். மதுவை ஆய்வு செய்யும் பணியில் இருந்த போது கூட ஒரு சொட்டு மது அருந்தியதில்லை பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட போது கூட மதுவை பருகியதில்லை.
காந்தியடிகளின் மதசார்பின்மையால் தான் கோட்சே காந்தியடிகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.ராஜாஜி மதுக்கடைகளை திறக்க மாட்டேன் என கூறியதால் தான் மாநாட்டில் அவருக்கு பேனர் வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டின் மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கையாக வைப்பது தீர்மானங்களை ஏற்று நிறைவேற்ற வேண்டும் தேர்தல் அரசியல் என்பது வேறு அது அப்போது பேசுவோம் குறிப்பிட்ட தேதிக்குள் இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வர ஸ்ரீமன் நாராயணன் கமிட்டி கூறியதை தான் நாங்களும் கூறுகிறோம் அதனை செய்ய பிரதமர் மோடி செய்ய வேண்டும். மதுவிலக்கு கொள்கையில் நல்ல நோக்கம் உள்ளது தேசிய கல்வி கொள்கையில் தீய நோக்கம் உள்ளது கொள்ளைபுறமாக மும்மொழியையும் சனாதானத்தை கொண்டு வர ஒன்றிய அரசு பார்ப்பதாகவும் மதுவிலக்கு மகளிர் குழு உருவாக்க உள்ளதாக கூறினார்.
மாநாட்டில் 25 ஆயிரம் இருக்கையில் போடப்பட்டிருந்தது அதே அளவு மாநாட்டை சுற்றிலும் தொண்டர்கள் சூழ்ந்து இரந்ததை காண முடிந்தது ஆனாலும் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலூர் ஷானவாஸ், வன்னியரசு, சிந்தனைச் செல்வன் போன்றவர்கள் பட்டுப்படாமல் இருந்தது அப்பட்டமாக தெரிந்தது ஆதவ் அர்ஜுனனின் கை ஓங்கி அவரின் கட்டுப்பாட்டிலே திருமாவளவன் இருப்பது வெளிப்படையாக தெரிந்தது.
தேர்தல் கூட்டணிக்காக அல்ல என பலமுறை எடுத்துரைத்தாலும் இது தேர்தலின் முன்னோட்டம் தான் என்பது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் வெளிப்படையாக தெரியும் எப்படியும் திமுக கூட்டணியில் அதிக சீட்டு கேட்டு பெறுவதில் சிறுத்தைகள் தயாராக உள்ளன மாறும் பட்சத்தில் வேறு கூட்டணி செல்லவும் தயங்கவில்லை என்பதை வெளிப்படுத்தி உள்ளது மாநாடு
அது எப்படி கல்வி தேசிய கொள்கையில் இடம் பெறலாம் அதனால் தான் நீட் தேர்வுகளுக்கு செய்ய முடியவில்லை என்பது கேள்வியாக இருந்து வரும் நிலையும் மதுவை தேசியக் கொள்கைக்கு மாற்றுவது எப்படி சாத்தியமாகும்.
– பா.ஜோதி நரசிம்மன்