சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் அதிமுக பற்றி எந்த அளவு சிந்தனையில் உள்ளனர். புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் இளைஞர்களை சேர்த்து அவர்களுக்கு பதவி வழங்குவது பணிகளை மாவட்ட செயலாளர் துரிதமாக செய்து வர வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். அவர் மாவட்ட செயலாளர் அவர்களுக்கு வழங்கிய ஆலோசனை குறிப்பாக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமியின் காதுகளில் விழுந்ததா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது…
அதாவது ராமநாதபுரம் அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி தன்னை பரமக்குடி நகர் செயலாளர் போன்று நினைத்துக் கொண்டு அந்தப் பகுதியில் மட்டும் தான் நான் தீவிரமாக செயல்படுவேன் அங்கு மட்டும் தான் செய்தி தொடர்பாக பேசுவேன்…. பரமக்குடியில் மட்டும்தான் கட்சிப் பணிக்காக செலவு செய்வேன்… என்ற ரீதியில் செல்வது போல் சமீப காலமாக அவரது செயல் உள்ளது என்று பேச்சு தற்போது உருவாகி வருகிறது. ராமநாதபுரத்தில் இருந்து ஏதேனும் தகவல் கேட்க முயன்றால் அவரை சந்திப்பது அரிது அத்துடன் அவரது மொபைல் போனில் தொடர்பு கொண்டால் போனை எடுப்பது என்பது அரிதிலும் அரிது… இப்படி மக்கள் தொடர்பில் இருந்தும் செய்தியாளர்கள் தொடர்பில் இருந்தும் கட்சி கடை நிலை தொண்டரில் தொடர்பிலிருந்தும் சற்று விலகியே இருப்பதின் காரணம் என்ன என்று புரியவில்லை. இதுமட்டுமின்றி கட்சி தலைமை அறிவிக்கும் ஆர்ப்பாட்டம் போராட்டம் போன்றவைகளில் இராமநாதபுரம் தலைநகரில் நடக்கும்போது முதலில் பரமக்குடி நிகழ்ச்சியில் பங்கு பெற்றுவிட்டு தலைநகரில் நடக்கும் நிகழ்ச்சிக்கு மிகவும் காலதாமதமாக வந்து கலந்து கொண்டு உடனடியாக சென்று விடுவது… தொண்டர்கள் நிர்வாகிகளிடம் பொறுமையாக பேசி செல்லாமல் நடந்து கொண்டே சென்று காரில் ஏறி டாடா காண்பித்து விட்டு சென்று விடுகிறார். பொறுப்பாளர்கள் சில இடங்களில் திமுகவிற்கு சாதகமாக உள்ளனர் இது தெரிந்தும் கண்டும் காணாமல் மாவட்ட செயலாளர் இருப்பது உள் கட்சி துரோகம் செய்வது போல் தெரிகிறது. இந்நிலை நீடிக்கும் பட்சத்தில் அதிமுகவின் 2026 கனவு பகல் கனவாக தான் மாறிவிடும் என்பதில் ஐயமில்லை. சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலின் முக்கியத்துவம் கருதி கட்சிப் பொறுப்பாளர்கள் மாற்றம் நடைபெறும் என்று உறுதி அளித்து உள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் அதிமுகவின் கோட்டையாக உள்ள நிலையில் கோட்டையை சரித்து விடாமல் இருக்க ராமநாதபுரம் தொகுதியைச் சார்ந்த அதிமுக தொண்டருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கி கட்சி பணியை துரித படுத்த வேண்டும். அவ்வாறு மாற்றங்கள் ஏற்பட்டால் தான் ராமநாதபுரம் திருவாடனை முதுகுளத்தூர் ஆகிய மூன்று தொகுதிகள் 2026 நிச்சய வெற்றி வாய்ப்பு பெற வழி வகுக்க முடியும் என்று தற்போது கட்சி வட்டாரத்திற்கும் அரசியல் விமர்சர்கர்கள் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் பரவலாக பேசுகின்றனர்.
– போகர்
Leave a Reply