தடம் மாற காத்திருக்கும் ஆதரவாளர்கள்
.
கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவில் தவிர்க்க முடியாத தலைவராக வலம் வந்தவர் தளவாய் சுந்தரம் அதிமுகவில் இவருக்கென்று தீவிர ஆதரவாளர்கள் உள்ளனர். வழக்கறிஞரான தளவாய் சுந்தரம் அதிமுக வழக்கறிஞர் அணியில் பொறுப்பில் இருந்து தன் அரசியல் பயணத்தை தொடங்கினார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெ ஜெயலலிதா இவரை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கினார். தொடர்ந்து இரண்டு முறை கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.2001 முதல் 2006 வரை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சராகவும் பணியாற்றினார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அவரது நிழலாகவும், அதிமுக அமைப்புச் செயலாளராகவும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆகவும் பணியாற்றினார் குமரி மாவட்ட அதிமுக தொண்டர்களோடு எப்பொழுதும் நெருக்கத்தில் இருப்பவர் பொருளாதார பின்புலம் இல்லாததெ தொண்டர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக விளங்குபவர் கல்வி, திருமணம், மற்றும் தொண்டர்களின் லாப, நஷ்டங்களில் உரிமையோடு கலந்துகொள்பவர்.இவரது பின்னால் தொண்டர்கள் படை எப்பொழதும் அணிவகுத்து இருக்கும் மேலும் அவ்வப்போது நலத்திட்ட உதவிகள், ஆர்ப்பாட்டங்கள்,ஆய்வு, மக்களை முகாமில் சந்தித்து குறைகளை கேட்பது என்று தினம் ஒரு நிகழ்ச்சி என எப்போதும் ஆக்டிவாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்.இவர் அமைச்சராக இருந்த பொழுது கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் ஏராளமான வசதிகள் செய்து உள்கட்டமைப்பு வசதிகளை செய்தாார். அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி முதல் மீனவர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று மணக்குடி பாலத்திற்கு லூர்தம்மாள் சைமன் பெயர் சூட்டியது வரை இவரது பங்களிப்பு மிக அதிகம்.மாவட்டத்தில் காங்கிரஸ் பாஜக, திமுக அசுர பலத்தில் இருக்கும்போது அதிமுகவை கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர்
நீக்கத்திற்கு காரணம் என்ன
அக்டோபர் ஆறாம் தேதி விஜயதசமியை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஈசாந்திமங்கலம் தொடங்கி பூதப்பாண்டி வரை ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு அணிவகுப்பு பேரணி நடத்தினர் இவ்விழாவை கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் என்ற முறையில் தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்.பேரணியை தொடங்கி வைத்த அவரது போட்டோவை அதிமுகவின் எதிரணியை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்த மீனவ சமூகத்தை சார்ந்த நசரேத் பசலியானுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்து அதிமுக நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டு, டெபாசிட் தொகையை இழந்தது. முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள்எம்.எல்.எ நாஞ்சில் முருகே சன், முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ஏ அசோகன், கிருஷ்ணதாஸ், என எதிர்தரப்பு கோஷ்டி அரசியல் உருவாகியது என பட்டியல் நீள்கிறது
எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை ஏன்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தை சார்ந்த தளவாய் சுந்தரம் கட்சியின் கொள்கை குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாகவும், கட்சியின் சட்டதிட்டங்களுக்கு மாறுபட்டு நடந்து கொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. எனவே அவர் வசித்து வரும் கட்சி அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளர் ஆகிய பொருப்புகளிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என கூறியுள்ளார்
நீக்கம் குறித்து ஒகே ரைட் தளவாய்சுந்தரம் பேட்டி
அதிமுக அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட தளவாய்சுந்தரம் கூறியதாவது
நான் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் என்ற முறையில் தோவாளை தாலுகாவில் உள்ள ஈசாந்திமங்கலம் பகுதியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தொடங்கிவைக்க அழைப்புவிடுத்தனர். இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தேன். இதனால் என் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லை. என்னை கட்சியில் இருந்து நீக்கினாலும் ஓகே ரைட் என சொல்லவேண்டியதுதான்.ஆர்.எஸ்.எஸ் பேரணியை தொடங்கிவைத்ததால் அதிமுகவின் பலம் குறையும் என எடப்பாடியார் என் மீது நடவடிக்கை எடுத்துள்ளார் என கூறினார்
பாஜகவில் ஐயக்கியமா. சந்தேகமே
தளவாய்சுந்தரத்தை தற்காலிகமாக அதிமுக அமைப்பு செயலாளர்மற்றும் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை தொடர்ந்து தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் ஹச்.ராஜா பாஜகவுக்கு வருக என கூறினார்..அது போல் முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி ஆகியோர் பகிரங்க அழைப்பு விடுத்தனர். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக குமரி மாவட்ட பாஜக தலைவர்களுடன் நல்ல நட்பு வட்டத்தில் உள்ளார். கடந்த காலங்களில் இரண்டு முறை தற்காலிகமாக கட்சியில் பெ பொருப்புகள் இல்லாமல் ஒதுங்கியே இருந்தார்..அந்த சூழ்நிலையிலும் மாற்று கட்சிக்கு செல்லாமல் அதிமுகவிலே நீடித்தார். எனவே எந்த சூழ்நிலையிலும் மாற்று கட்சிக்கு போக மாட்டாார். பாஜகவில் இணைவார் என்பது காணல் நீரே
மாவட்ட அதிமுக பிரமுகர் மணிகண்டன்
தளவாய்சுந்தரம் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பில் இதற்கு முன் பல முறை இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளாார். ஹிந்து அமைப்புகளும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் வலுவாக இருப்பதால் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் அனைத்து கட்சியினரும் பங்கேற்பது உண்டு. அது போலவே குமரி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்
சமீபத்தில் அனந்தபுரி நவராத்திரி பூஜைக்க, சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் சிலை ஊர்வலம் புறப்பட்டது. பின்னர் பூஜைகளுக்கு பிறகு நடந்த தேரோட்டத்தில் மத்திய அமைச்சர் நடிகசுரேஷ் கோபி,எம்.எல்.ஏ காந்தி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தளவாய் சுந்தரமும் பங்கேற்றார். பவுர்ணமி தினத்தன்று கடல் ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகளோடு தளவாய்சுந்தரமும் பங்கேற்கிறார். மேலும், கிறிஸ்தவ, முஸ்லிம் அமைப்புகள் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தொகுதிஎம்.எல்.ஏ என்ற முறையில் தாவாய் சுந்தரம் பங்கேற்று வருகிறார். எனவே மக்கள் பிரிதிநிதியான எம்.எல்.ஏ ஆர்.எஸ்.எஸ்.பேரணியில் கொடி அசைத்து தொடங்கிவைத்தார் என தற்காலிகமாக பதவியில் இருந்து நீக்கியது தவறு என கட்சி தலைமை உணரும். கட்சி விசாரனை முடிந்து மீண்டும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக வெற்றி உலா வருவார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி அம்மா, வழியில் புரட்சி தமிழர் எடப்பாடியார் கரத்தை வலுப்படுத்தி வரும் 2026 ல். அதிமுக ஆட்சி மலர பாடுபடுவோம் என்றார்
– மனோகரன்
Leave a Reply