உசிலம்பட்டி-
ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பு….
99 ஆவது ஆண்டு விஜய தசமி விழாவை முன்னிட்டு, உசிலம்பட்டியில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில், 99 -ஆவது ஆண்டு விஜய தசமி விழாவை முன்னிட்டு, ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் ,
ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சடையாண்டி தலைமையில் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்த ஊர்வலமான மேலப்புதூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து துவங்கி, மதுரை சாலை, கவணம்பட்டி சாலை,
தேனி சாலை என, முக்கிய சாலை வழியாக சென்று முருகன் கோவில் அருகில் நிறைவு செய்தனர்.
இதில்,
400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், உசிலம்பட்டி டி.எஸ்.பி. செந்தில்
குமார் தலைமையில் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நா.ரவிசந்திரன்
Leave a Reply