Save 20% off! Join our newsletter and get 20% off right away!

விருதுநகர்-கிராம பெண்களிடம்…காவலன் செயலி விழிப்புணர்வு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே, ஏ.நெடுங்குளம் பகுதியில், காரியாபட்டி காவல்
நிலைய சார்பு  ஆய்வாளர் பா. அசோக்குமார், நேரடியாக சென்று 100 நாள் வேலை செய்யும் பெண் பணி
யாளர்களிடம் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்
தினார்கள்.
மேலும், காவல்
துறையினரை, உதவிக்கு அழைக்கும் விதமாக அவசர அழைப்பு, புகார் அளித்தல், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, காவல் நிலையங்கள், அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
 உட்பட காவல்துறை தொடர்பான சுமார் 60 விதமான தகவல்களை பெரும் வகையில் உருவாக்
கப்பட்ட
காவல் உதவி செயலி குறித்தும் விழிப்புணர்வு ஏற்
படுத்தப்பட்டது.
இதில், 100 நாள் பணி
யாளர்களின் ஆன்ட்ராய்டு செல்போனில் காவலன் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
காவலன் செயலியில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் எண்களை பதிவு செய்வது, எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் செய்முறை விளக்கம் அளித்தனர்.
ஆர்வத்துடன் காவலன் உதவி செயலியை பதிவிறக்கம் செய்தவர்கள் தங்களது விவரங்களை பதிவிட்டவுடன் காவல்துறை ஹெல்ப்லைனுக்கு பட்டன் மூலம் அழைப்பு விடுத்து சோதனை செய்தனார். உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொலைபேசி வாயிலாக போன் வந்தது. அதில், உங்களுக்கு என்ன பிரச்சனை என்ன உதவி தேவைப்
படுகிறது என்று கேட்டவுடன் காவல் நிலையத்தில் இருந்து இந்த செயலி பதிவிறக்கம் செய்தார்கள். அதனை சோதனை செய்து பார்த்தேன். என்று விளக்கம் அளித்தனர்.

பெண்கள் மத்தியில் இந்த காவலன் உதவி செயலி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
– நா.ரவிசந்திரன்