Save 20% off! Join our newsletter and get 20% off right away!

உசிலம்பட்டி-அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த காவலர்கள்…கிராம மக்கள் போராட்டம்!

மதுரை அருகே, உசிலம்பட்டி அருகே,  அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த காவலர்கள் – முள் தடுப்புகள் அமைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உ.மாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ், குபேந்திரன் என்ற சகோதரர்கள் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர்.
காவலர்கள் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பு செய்து பாதைகள் அமைப்பதாக குற்றம் சாட்டிய கிராம மக்கள்.
கிராமத்தில் அரசு கட்டிடங்கள் கட்ட தேர்வு செய்துள்ள இடங்களை அதிகாரத்தை வைத்து ஆக்கிரமிப்பு செய்து வருவதாக கூறி, பாதைகளில் முள் தடுப்பு அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி டி.எஸ்.பி. செந்தில்குமார் தலை
மையிலான உத்தப்பநாயக்கணூர் காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் எடுப்பதோடு, அரசு கட்டிடங்கள் கட்டி தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

– நா.ரவிசந்திரன்