கள்ளக்கூட்டணி…சேலம் மாநகரை அதிரவைத்த போஸ்டர்…

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அதிமுக, பாஜக,  உள்ளிட்ட கட்சிகள் மாணவிகளுக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டம், சேலம் மாவட்டம் மாநகரப் பகுதிகளும் ,மாவட்ட புறநகர் பகுதிகளில், பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. குறிப்பாக அதிமுக பொதுச்செலாளர் எடப்பாடி  .பழனிச்சாமி அவர் இல்லம் செல்லும் வழிகளில் பல இடங்களில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.இதனை தமிழ்நாடு மாணவர் மன்றம் மாணவர் பிரிவு என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து அரசாங்கம் எங்களை படிக்க அனுப்புகிறது.
பொள்ளாச்சி புகழ் கள்ளக் கூட்டணியை மூடி பொண்ணுங்க படிப்பை நிறுத்த பாக்குது ஷிணீஸ்மீ நிவீக்ஷீறீs ணிபீuநீணீtவீஷீஸீ என்ற வாசகத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உருவத்தை அசுரன் போல் சித்தரித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவுக்கால் அடித்துக் கொள்வது போன்ற புகைப்படம் உள்ளது. இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் அதிமுக தரப்பில் இருந்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அதிமுகவினர்கள் இந்த போஸ்டரை கிழிக்கவோ இதற்கான எதிர்ப்புகளோ ஏதும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார்கள்.
– இரா.சீனிவாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *