சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த நகை வியாபாரி வைரவேல்,
தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை இரு தினங்களுக்கு முன் 4 வெவ்வேறு நபர்களிடம் விற்பனை செய்தார்.
இதற்கான பத்திரப்பதிவு காரைக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது.
இரு தரப்பினரும் கொடுக்கல், வாங்கல் முடித்து பத்திரப்பதிவும் முடிந்த நிலையில், பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை வழங்க,
சார் பதிவாளர் முத்துப்பாண்டி 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார்.
வைரவேலிடம் நிலம் வாங்கியோர் அவரிடம் இது குறித்து சொல்லவே, வைரவேல் பத்திர எழுத்தர் புவனப்பிரியாவிடம் இது குறித்து விசாரித்தார்.
லஞ்சப் பணம் பெறாமல் முத்துப்பாண்டி பத்திரங்களை வழங்க மாட்டார் என புவனப்பிரியா கூறினார்.
இதனிடையே வைரவேல் பத்திர எழுத்தர் புவனப் பிரியவிடம் பேரம் பேசினார் 60000 வரை கொடுக்க வேண்டும் என்று புவனப் பிரியா கூறினார். இதனால் தனக்கு பணம் வழங்க விருப்பம் இல்லாத வைரவேல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார் அதன் பேரில் போலீசார் மறைந்திருந்து இரசாயனம் தடவிய ரூபாயை கொடுத்தனர் இதனால் புவனப் பிரியா என்ற பத்திர எழுத்தர் கையும் களவுமாக சிக்கினார்…
சார்பதிவாளர் முத்துப்பாண்டி சொல்லித்தான் தான் வாங்கியதாக உண்மையை கூறினார்..
லஞ்ச ஒழிப்பு போலீஸணீறீரால் சார் பதிவாளரும் புவனப் பிரியாவும் கைது செய்யப்பட்டனர் இது அந்த காரைக்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது
எஸ்.பகவதிமுருகன்
Leave a Reply