தமிழக வெற்றிக்கழக மாநாட்டை,தடுக்க தி.மு.க. சதி…?புதுச்சேரியிலிருந்து அமலாகிறது?

தமிழக வெற்றிக்கழக மாநாட்டை தடுக்க தி.மு.க. சதி
மிகுந்த பரப்புடன், ஆவலுடன் தமிழக மக்கள் மட்டுமல்லாமல் புதுவை மக்களும், அரசியல் நோக்கர்களும், கட்சி தாவ நினைக்கும் முன்னால், இன்னாள் சட்டமன்ற உறப்பினர்களும், சில முன்னாள் அமைச்சர்களும் இந்த மாநாட்டில் இணைய உள்ளார்கள். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தக்கூடாது. நடிகர் விஜயை மக்கள் வெறுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்ப முதல் திமுக அரசும், மாவட்ட காவல்துறையும், மாவட்ட ஆட்சியரும் ஏக்கப்பட்ட கெடுபிடிகளை விதித்தும் மாநாட்டிற்று வருவோரை தடுக்கும் நோக்கோடு பல சட்டத்திட்டங்களை விதித்தார்கள். தமிழக வெற்றிக்கழகத்தின் நிறுவனர் நடிகர் விஜய் அவர்கள் அனைத்து சதி வேலையையும் முறியடித்து மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்த பொது செயலாள் புஸ்சி ஆனந்த் தலைமையில் கமிட்டி அமைத்து அனைத்து வேலைகளும் போர்காள அடிப்படையில் வேலைகளும் நடைபெற்று வருகிறது. மேலும் மிக பெரிய மிக பிரமாண்டமான மக்களை கூட்ட வேண்டும் என்ற நோக்கோடு இரவை பகலாக்கும் 5000 ஐமாஸ் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றனர். டிக்கட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆண், பெண் இருபாலரும் அமரும் வகையில் ஒரு லட்சம் இருக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மாநாட்டிற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏறக்குறைய 5 லட்சம் பேர்கள் கூடுவார்கள் என்று உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் எப்படியாவது மாநாட்டை சீர்குலைக்க வேண்டும். மாநாட்டில் கலவரத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கோடு தமிழக அரசு செயல்படுகிறது.

மேலும் இது சம்மந்தமாக மாநாட்டை ஒழுங்குப்படுத்த காவல்துறையினர் போகக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாநாட்டிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் புதுவை மாநிலத்தில் இருந்து போலி மதுபானங்களை ரூ. 2 கோடிக்குமேலாக மாநாட்டில் விற்பனை செய்வதற்காக திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு புதுவையில் உள்ள பிரபல மதுபான வியாபாரியும், அரசியல் திமுக பிரமுகருமான ஒருவர் மும்மரமாக வேலை பார்த்து வருகிறார். போலி மதுபானங்களை இறக்கி அதனால் உயிர் இழப்பை ஏற்படுத்தி கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தோடு விழுப்புரம் மாவட்டத்தில் சமீபத்தில் இலக்கா பிடுங்கப்பட்டு பீஸ் போன அமைச்சரை நியமித்துள்ளனர். புதுவையில் கொரோனா பல முறைகேடுகளை செய்த கைது செய்யப்படுவார் என்று இருந்த நிலையில் தப்பித்துவிட்டார். அந்த மதுபான ஆலை வியாபாரி வாங்கிய ஸ்பிரிட்டுக்கு இதுவரை சி பார்ம் கொடுக்கவில்லை. இதுநாள் அரசுக்கு கமர்சியல் டாக்ஸ் நிர்வாகத்திற்கு ஏற்படுத்திய அந்த வியாபாரி இங்குள்ள ஒரு திமுக பிரமுகரோடு சேர்ந்துகொண்டு இந்த வேலையில் இறங்கியுள்ளார். சமீபத்தில் மத்திய புலனாய்வு துறை அவர் மகனை கைது செய்தது. மேலும் புதுச்சேரியின் எல்லையில் உள்ள அனைத்து மது கடைகளிலும் போலி மதுபானங்கள் இறக்கப்பட்டுள்ளன. இவை யாவும் புதுவை மாநிலத்தில் இருந்து ராதாபுரம், செம்மேடு, வளவனூர் வழியாக கோலியனூர் கூட்ரோட்டில் பதுக்கி வகைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் எல்லைபுறமான மதகடிப்பட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் போலி மதுபானங்கள் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மடுகரை வழியாக, சிறுவந்தாடு, வளவனூர் வழியாகவும் கொண்டு செல்ல ஏற்பாடு நடக்கிறது. மொத்தத்தில் எப்படியாவது மாநாட்டை நடத்திவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் மேலும் பல வன்முறை திட்டங்களை தீட்டி சதி வேலையில் ஈடுபட்டுவருகிறார்கள். இது சம்மந்தமாக தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தை போனில் தொடர்புகொண்ட போது எதையும் நாங்கள் சந்திக்க தயாராக உள்ளோம். 2026-ல் தமிழகத்தில் மிக பெரிய மாற்றம் ஏற்படுத்தும் எங்கள் மாநாடு

-ஆர்.கோபால்