மதுரை வில்லாபுரத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தினமும் ஸ்பீக்களில் பாடல் ஒளிபரப்ப போலீசார் தடை வித்ததை கண்டித்து பொதுமக்கள் அருப்புக்
கோட்டை சாலையில் சாலை மறியல் செய்ய வந்தனர் .
அதனைத் தொடர்ந்து, பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்த கீரை துறை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
காவல் நிலையத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சேர்ந்து முற்றுகையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, அவனியாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் லிங்கபாண்டியன், கீரைத்துறை காவல்
நிலைய ஆய்வாளர் கோட்டைச்சாமி மற்றும் தெற்கு வாசல் சரக உதவி ஆணையர் ரமேஷ் பொது
மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விதி முறைக்கு உட்பட்டு பாடல்களை ஒளிபரப்ப வேண்டும் என, கூறினர்.
அதனைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தைக்கு பின், பெண்கள் சமாதானம் அடைந்து கிளம்பினர்.
– நா.ரவிச்சந்திரன்
Leave a Reply