அதிசயம்! ஆனால் உண்மை, நம்ப முடியாது நம்பித்தான் ஆகவேண்டும்! ஆளுங்கட்சி எம்பியும் எம்எல்ஏவும் விட்ட அறிக்கைதான் விஷயத்தின் சாரம்சம். ஆரணி திமுக எம்பியும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளருமான தரணிவேந்தன் தன்னை பார்க்க வரும் திமுக நிர்வாகிகள், தொண்டரகள் பொதுமக்கள் செலவு பண்ணி சால்வைகள் வாங்கி வர வேண்டாம் பார்க்கும்போது வணக்கம் வைத்தால் போதுமானது, நிகழ்ச்சி தகவல்களை தெரிவிக்க, குறைகளை சொல்ல வேண்டும் என்றாலும் ஒருபோன் பண்ணா போதும் அல்லது வாட்ஸ் அப்ல செய்தி அனுப்பினா போதும் பார்த்துக்கொள்கிறேன் நடவடிக்கை எடுக்கிறேன் நிகழ்ச்சிகளுக்கு வந்து விடுகிறேன் என்று அறிக்கை வாசிக்க, திமுகவினர் மட்டுமல்ல மாற்றுக்கட்சியினரும் திரும்பி பார்க்க ஆரம்பித்தனர். ஆடம்பரம் பந்தாவை விரும்பும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இந்த விஷயத்தில் தரணிவேந்தன் மரியாதை கொஞ்சம் உயர்ந்திருக்கிறது என்று சொல்லலாம்.
இன்னொருவர் வேலூர் மத்திய மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு திமுக எம்எல்ஏமான நந்தகுமார், இவரும் சால்வை வேண்டாம் வணக்கம் போதும் பார்க்கும்போது வணக்கம் வச்சா போதும் சால்வை மாதிரி வீண் செலவுகளை உங்களுக்கு வைக்க நான் விரும்பவில்லை. கட்சி அலுவலகம் வீடு, நிகழ்ச்சிகளில் எங்கு பார்த்தாலும் வணக்கம் வையிங்க அது போதும். அதுவே எனக்கு மகிழ்ச்சி என்று நந்தகுமார் ஒரு அறிக்கை வாசிக்க திமுகவினர் மத்தியில் இன்ப அதிர்ச்சி!
நந்தகுமார் எம்எல்ஏவும் தரணிவேந்தன் எம்பியும் விட்ட சால்வை வேண்டாம் வணக்கம் போதும் அறிக்கை மாவட்டங்களை கடந்து மாநிலம் முழுவதும் பரவி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
மேற்படி திமுக விஐபிகள் அறிக்கை விஷயத்தை அமுல்படுத்துகிறார்களோ இல்லையோ? அறிக்கை அனைவர் மத்தியிலும் பேசு பொருளாகி இன்ப அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது.
– ஆலவாயர்
Leave a Reply