#சோதனைகள் மனிதனின் மன வளத்தை அதிகரிக்கும்.
#வெற்றிகள் அவனது தலைகனத்தை அதிகரிக்கும்._
#தோல்விகள் அவனை அடையாளம் காட்டும்.._
#சிந்தனைகள் மட்டுமே அவனுக்கு நல்வழி காட்டும்..!_
#சிந்தித்து #செயலாற்றுங்கள்.!

நமது புராணங்களில் சிவராத்திரியை பற்றி பல கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

முதல் கதை.
ஒரு யுக முடிவில் மகாப்பிரளயம் ஏற்பட சகல ஜீவராசிகளும் சிவனிடம் ஒடுங்கின. அண்ட ங்கள் அனைத்தும் சிறிது அசைவு கூடக் கிடையாது. அப்படியே சகலமும் ஸ்தம்பித்து நின்றன.
உயிர்களிடம் பேரன்பு கொண்ட அன்னை பார்வதி அசையாநின்ற அண்டங்கள் அசை யவும், மீண்டும் உயிர்கள் இயங்கவும் வேண்டி நான்கு ஜாமங்களிலும் சிவனை க் குறித்துத் தவம் செய்தாள். அம்பிகையின் தவத்துக்கு இறங்கி சிவபெருமான் தன்னிடம் ஒடுங்கி யிருந்த சகல உலகங்களையும் மீண்டும் படைத்து உயிர்களையும் படைத்தருளினார்.
சுயநலம் எண்ணம் உள்ளவர்களுக்கும் அவர்கள் முகத்தைத் தவிர வேறு எந்த முகமும் அவர்களுக்கு தெரியாது. அவரிடம் போய் உன் பிரச்சனையைப் சொன்னால்? எந்த விடிவும் உங்கள் வாழ்வில் ஏற்படாது, நம்நலத்தை பார்க்கக்கூடிய #இறைவனைத் தவிர உலகில் வேறு எவரும் நம் பிரச்சினையை தீர்ப்பவர் இல்லை
பார்வதி தேவி சிவபெருமானைப் பார்த்து, “பிரபோ. அடியேன் உங்களைப் போற்றிப் பலனடைந்த இந்த நாள் “சிவராத்திரி’ என்ற பெயர் பெற்று விளங்கி, நிறைவில் முக்தி அடைய வேண்டும்” என்று வேண்டு கிறார். சிவபெருமானும் அப்படியே நடக்க ட்டும் என்று வரம் அருளுகிறார். அந்தத் திருநாளே மகா சிவராத்திரி நாளாகும்.

முதல் திருமுறை


திருமருகலும் – திருச்செங்காட்டங்குடியும்
வினாவுரை


பண் – நட்டபாடை


அங்கமும் வேதமும் ஓதுநாவர்
அந்தணர் நாளும் அடிபரவ
மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கய லார்புனற் செல்வமல்கு
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.


நெய்தவழ் மூவெரி காவலோம்பும்
நேர்புரி நூன்மறை யாளரேத்த
மைதவழ் மாட மலிந்தவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செய்தவ நான்மறை யோர்களேத்துஞ்
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கைதவழ் கூரெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.


தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர்
தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ
மால்புகை போய்விம்மு மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேல்புல்கு தண்வயல் சோலைசூழ்ந்த
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கால்புல்கு பைங்கழ லார்க்கஆடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.


நாமரு கேள்வியர் வேள்வியோவா
நான்மறை யோர்வழி பாடுசெய்ய
மாமரு வும்மணிக் கோயில்மேய
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
தேமரு பூம்பொழிற் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காமரு சீர்மகிழ்ந் தெல்லியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.


பாடல் முழவும் விழவும்ஓவாப்
பன்மறை யோரவர் தாம்பரவ
மாட நெடுங்கொடி விண்தடவும்
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காடக மேயிட மாகஆடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.


புனையழ லோம்புகை அந்தணாளர்
பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப
மனைகெழு மாட மலிந்தவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கனைவளர் கூரெரி ஏந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.

60 * இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.


பூண்டங்கு மார்பின் இலங்கைவேந்தன்
பொன்னெடுந் தோள்வரை யாலடர்த்து
மாண்டங்கு நூன்மறை யோர்பரவ
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேண்டங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காண்டங்கு தோள்பெயர்த் தெல்லியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.


சோழநாட்டிலுள்ள தலங்கள் .
திருமருகலில் சுவாமிபெயர் – மாணிக்கவண்ணர்; தேவியார் – வண்டுவார்குழலி
திருச்செங்காட்டங்குடியில் சுவாமிபெயர் – கணபதீசுவரர்,
தேவியார் – திருகு குழல்நாயகி

நேபாள் பசுபதி நாதர் கோவில்.
நேபாள் தலைநகர் காட்மாண்டுவில் ஊரின் நடுவில் இருக்கும் பிரமாண்ட ஆலயம்.
பிரமாண்டம் என்றால் நம்ம ஊர் மாதிரி உள் பிரகாரம், வெளி பிரகாரம்என்று இருக்காது. மூலவர் இருப்பார். அவர் இருக்கும் கருவறை மேல் இரண்டு அடுக்கு கோபுரம் ( மாதிரி ) இருக்கும். பகோடா பாணி கட்டிட கலை என்பார்கள். அப்புறம் சின்ன சின்னதாக 518 ஆலயங்கள் உள்ள வளாகம்.
பாகுமதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோவில்.
கோவில் வளாக சுவரை ஒட்டியபடியே ஆற்றின் கரை. கரையில் மயானம். தகனமேடை. கோவில் உள்ளே இருந்து மனித உடல்கள் எரியூட்டுவதை நாம் காண முடியும்.
எப்பொழுதும் நிறைந்த கூட்டம் உள்ள ஆலயம். மாலை நேரங்களில் கருவறை உள்ளே வரை சென்று சாமி தரிசனம் செய்யலாம். மாலையில் ஆரத்தியும் உண்டு.
நிறைய இந்து புராணங்களில் இந்த ஆலயத்தின் சிறப்பு கூறப் பட்டுள்ளது.
ஸ்கந்த புராணத்தின் படி மிகவும் புனிதமான சிவ க்ஷேத்திரங்களில் ஒன்று ( சிவனின் உறைவிடங்கள் ) என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது.
தேவாரத்தின் பாடல் பெற்ற தலம்.
பக்தர்களின் அனைத்து பிரார்த்தனைகளையும் நிறைவேற்றும் மூலவர் என்று சிவபுராணம் கூறுகிறது இந்தியாவில் உள்ள காசி விஸ்வநாதரில் உள்ள சிவனின் தலையாக இந்தக் கோயில் வணங்கப்படுகிறது
பாரம்பரியமாக, சிருங்கேரியில் உள்ள ஸ்ரீ சங்கராச்சாரிய தட்சிணாம்னாய பீடத்தால் கல்வி கற்ற கர்நாடகாவைச் சேர்ந்த வேத திராவிட பிராமண அறிஞர்கள் முக்கிய கோயில் அர்ச்சகர்கள் ஆவர் .
வாழ்வில் ஒரு முறையாவது தரிசனம் செய்ய வேண்டிய ஆலயம்.
“ஹர ஹர மஹாதேவ் “

இன்னொரு கதை
பாற்கடலைக் கடைந்த போது முதலில் விஷம் தான் வெளிப்பட்டது இதைக் கண்ட தேவர்கள் அமுதம் கிடைக்கும் என்று கஷ்டப்பட்டுக் கடைந்தால் விஷ மல்லவா வருகிறது என்று பயந்து ஓடி சிவனிடம் சரணடைந்தார்கள்.
சிவபெருமானும் “நஞ்சைக் கண்டு அஞ்சாதீர்’ என்று அபயமளித்து அந்த நஞ்சினை த்தான் உண்டு தேவர்களைக் காத்தார். தேவர்களும், சிவன் அருந்திய விஷத்தால் அவர் பாதிப்புக் கு ஆளாகி விடக்கூடாதே என்ற எண்ணத்தில் இரவு முழுவதும் பூசித் தார்கள். தேவர்களைக் காக்க சிவபெருமா ன் விஷம் உண்ட அந்தத் தியாகத் திருநாளே மகா சிவராத்திரி நாளாகும் என்றும் கூறுவர்.
#ஆரூாில் அந்திக் காப்பு :
நமது சிவாலயங்களில் ஆறு கால பூசை உண்டெனினும் அவற்றுள் அந்திக்கால பூசையே சிறப்புடையது. இப்பூசை திருவாரூாில் சிறப்பாகப் போற்றப்படுகிறது.அதனை அப்பா் புக்க திருத்தாண்டகத்துள் ஒன்பதாம் பாடலில் குறித்துள்ளாா்.
பொன் தீ மணிவிளக்கைப் பூதம் பற்றிவர புலியூா்ச் சிற்றம்பலம் எழுந்தருளும் பெருமான் மணியாரூாில் நின்று அந்தி வழிபாட்டை ஏற்றுச் செல்கிறாா் என்று நயம்பட உரைத்துள்ளாா்.
“மணியாரூா் நின்றந்தி கொள்ளக் கொள்ளப் பொன்தீ மணிவிளக்குப் பூதம் பற்றப் புலியூா்ச் சிற்றம்பலமே புக்காா் தாமே”.

மற்றொரு கதை:
கயிலாயத்தில் அன்னை பார்வதிக்கு ஒரு நாள் ஏதோ விளையாட்டு புத்தி. பின்பக்க மாக வந்து சிவனின் கண்களைப் பொத்தி னார். அவ்வளவுதான். சகல புவனங்களும் ஒளியிழந்து இருள் சூழ்ந்தது.
அம்பிகை திடுக்கிட்டுத் தன் பிழையை உணர் ந்து சிவனைப் பிரிந்து பூலோகம் வருகிறார். தன் பிழைக்குப் பிராயச்சித்தமாக காஞ்சிபுர ம் கம்ப நதிக்கரையில் மணலால் சிவலிங்கம் உண்டாக்கி பூஜை செய்கிறார்.
திடீரென்று கம்பாநதியில் வெள்ளம் வர, மண ல் லிங்கம் கரைந்து விடுமே என்று அஞ்சி அப்படியே சிவலிங்கத்தை ஆரத் தழுவிக் கொள்கிறாள். அன்னையின் தவத்தை மெச் சிய சிவன் ஏகாம்பரநாத ராக அம்பிகையை (இங்கே காமாட்சி என்று பெயர்) மாமரத்தடியி ல் மணம் புரிந்து கொள்கிறார். அந்தத் திருநா ளே சங்கரனைக் கொண்டாடும் சிவராத்திரி என்பார்கள்.

இன்னொரு கதையிலும் பார்வதி தேவி இப்படி சிவபெருமானின் கண்களை விளை யாட்டாக மூடுகிறார். எங்கிலும் இருள் சூழ்ந்த து. உயிர்கள் அனைத்தும் வாட்டமுறுகின்றன.
ஒளி இல்லாவிட்டால் உயிர்கள் பிழைப்ப தும் தழைப்பதும் எப்படி? தேவி தன் கைகளை கண்களிலிருந்து அகற்றுகிறார். சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து பேரொளி. ஆனால் அது நெருப்பைக் கக்கும் ஒளியல்லவா? தேவி அதைக் குளிர் ஒளியாக மாற் றி உயிர்களை உய்விக்க சிவனை வேண் டுகிறார். சிவனும் அப்படியே அருள் பாலிக்கிறார். இந்த நாளே சிவராத்திரித் திருநாளாகும் என்பர்.
#திருவிசைப்பா

மண்ணோடு விண்ணளவும்
மனிதரொடு வானவர்க்கும்
கண்ஆவாய், கண்ஆகாது
ஒழிதலும்நான் மிகக்கலங்கி
அண்ணாஓ என்றுஅண்ணாந்து
அலமந்து விளித்தாலும்
நண்ணாயால் திருத்தில்லை
நடம்பயிலும் நம்பானே.
#பொழிப்புரை

திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பானே! மண்ணுலகிலிருந்து விண்ணுலகம் வரையிலும் மனிதர்களோடு தேவர்கள் வரையிலும் எல்லோருக்கும் நீ பற்றுக்கோடு ஆவாய். அவ்வாறாகவும் அடியேனுக்கு மாத்திரம் பற்றுக்கோடு ஆகாமல் அடியேனைப் புறக்கணித்தலால் அடியேன் மிகவும் கலங்கி, `பெருமை பொருந்திய தலைவனே` என்று மேல்நோக்கி மனம் சுழன்று அழைத் தாலும் நீ அடியேனை நெருங்கி நிற்கின்றாய் அல்லை; இதன் காரணம் தான் யாதோ?

அவனருளால் அவன் தாழ் வணங்கி….

ஓம் நமசிவாய… திருச்சிற்றம்பலம்….
– மணிகண்டன்