Save 20% off! Join our newsletter and get 20% off right away!

தலைவர், செயல் அலுவலர் மீதுகவுன்சிலர்கள் காவல்துறையில் புகார்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 11 திமுக கவுன்சிலர்களும்,  சுயேட்சை கவுன்சிலர்கள் 4 பேரும், அதிமுக 2 பேரும், ஒரு பாமக கவுன்சிலர் என 18 பேர் உள்ளனர். இந்த பேரூராட்சியின் தலைவராக திமுகவை சேர்ந்த லெட்சுமி என்பவர் இருந்து வருகின்றார்.

இந்த நிலையில் பரமத்தி வேலூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் லதா, இந்திராணி, சுகந்தி, தங்கம், ராமசாமி, மணிகண்டன், கணேசமூர்த்தி, துரைசெந்தில் ஆகியோர் நாமக்கல் எஸ்.பி அலுவலகத்திற்கு வந்து எஸ்.பி ராஜேஷ்கண்ணனிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் …. பரமத்தி வேலூர் பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 23 ம் தேதி கவுன்சிலராகிய லதா, தங்கம், இந்திராணி, சுகந்தி ஆகியோர் வார்டு பிரச்சினைகள் குறித்தும், பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீர் இரும்பு பைப்கள் 4 காணவில்லை குறித்தும் செயல் அலுவலர் சோமசுந்தரம், தலைவர் லெட்சுமியிடம் கேட்ட போது உரிய பதில் அளிக்காததால் செயல் அலுவலகத்தை விட்டு வெளியே சென்று விட்டோம், மீண்டும் செயல் அலுவலரிடம் அனுமதி கேட்டு அலுவலகத்திற்கு உள்ளே செல்லும் போது பாமக கவுன்சிலர் சுகந்தியின் கணவர் ஜெய்கணேஷ்ம் வந்திருந்தார். அப்போது செயல் அலுவலர் சோமசுந்தரம், தலைவர் லெட்சுமி, தலைவரின் கணவர் முரளி ஆகியோர் தரக்குறைவாக பேசி வெளியே போங்க என கூறி அவமானப்படுத்தியதாகவும் மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக செயல் அலுவலர் சோமசுந்தரம், தலைவர் லெட்சுமி, தலைவரின் கணவர் முரளி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகூறி மனு அளித்தனர்.

இதுகுறித்து கவுன்சிலர் இந்திராணி கூறுகையில்…

செயல் அலுவலர் சோமசுந்தரத்திடம் வளர்ச்சி பணி, காணாமல் போன இரும்பு குடிநீர் குழாய் குறித்து கேட்ட போது செயல் அலுவலர், தலைவர் ஆகியோர் சரியான பதில் அளிக்க வில்லை மேலும் பாமக கவுன்சிலர் கணவரை வெளியே போ என பேசினர் மேலும் எங்களையும் அவமானபடுத்தினர், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நாளிதழ் செய்தியாளர் பூபதி என்பவர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து கேட்ட போது தலைவர் லெட்சுமி வெளியே போ என மிரட்டி பரமத்தி காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பாமக கவுன்சிலர் சுகந்தியின் கணவர் ஜெய்கணேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என தெரிவித்தார்.

இந்த நிலையில் பரமத்தி வேலூர் பேரூராட்சி அலுவலகத்தில் நாளிதழ் செய்தியாளர் பூபதியும், பாமக கவுன்சிலர் சுகந்தியின் கணவர் ஜெய்கணேஷ் ஆகிய இருவரும் குடிநீர் குழாய் குறித்து கேட்டபோது தலைவர் லெட்சுமி இருவரையும் வெளியே போங்க என மிரட்டல் தோனியில் பேசும்போது இருத்தரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் லெட்சுமி, செயல் அலுவலர் சோமசுந்தரம் ஆகிய இருவரும்
பணி நிமித்தமாக பேசிகொண்டிருந்த போது அத்துமீறி நுழைந்து குடிநீர் குழாய் காணாமல் போனது குறித்து கேட்டபோது உரிய விளக்கம் அளித்தும் செய்தியாளர் பூபதி குடி போதையில் மிரட்டி அபாசவார்த்தைகளால் பேசியதாகவும், ஜெய்கணேஷ் என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி ஜெய்கணேஷ் மற்றும் செய்தியாளர் பூபதி மீது பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து பரமத்தி வேலூர் பேரூராட்சி தலைவர் லெட்சுமியிடம் கேட்ட போது … தலைவர் அவமானம் படுத்தியதாக கூறி கவுன்சிலர்கள் உங்கள் மீது எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளதார் என கேட்டபோது போலீசார் விசாரிப்பாங்க அங்க நான் சொல்வதாகவும் மேலும் வீடியோ குறித்து கேட்டபோது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் என கூறினார்.

– கௌரி சங்கர்