இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் விஷயம் திமுக தலைமையின் தீவிர பரிசீலனையில் இருக்க, அதை செயல்படுத்தியே தீருவது என்கிற முனைப்பில் மாநில இளைஞரணி செயலாளரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இருக்க, சென்னை மாவட்டங்களை விட பிற மாவட்டங்களில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் பதவியை அடைய திமுக சீனியர் ஜூனியர் நிர்வாகிகள் மத்தியில் பலத்த போட்டியும் அளவுகடந்த உற்சாகமும் தாண்டவமாடுகிறது இங்கே இராணிப்பேட்டை மாவட்டத்தை பார்க்கலாம். ஆற்காடு, இராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது இராணிப்பேட்டை மாவட்டம்.
நான்குமுறை மாவட்ட செயலாளர், நான்குமுறை எம்எல்ஏ, கூடுதலாக இப்ப அமைச்சர், ஒரு காலத்தில் தலைமையுடனான உறவில் செல்வசெழிப்போடு இருந்த அமைச்சர் காந்தி, லேட்டஸ்ட் நிலவரப்படி தலைமையின் அதிருப்தி பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார் என்கின்றனர் இராணிப்பேட்டை மாவட்ட திமுக உடன்பிறப்புகள். திகட்ட திகட்ட அதிகாரம் தேவைக்கு அதிகமாக பொருளாதாரம், ஒத்துழைக்காத உடல்நலம் தன்னுடைய மூத்த மகன் வினோத் காந்தியை அரசியல் வாரிசாக்கினார், சுற்றுச்சூழல் அணியில் மாநில பதவியும் வாங்கி கொடுத்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், அரக்கோணம் எம்பி சீட் என தன் மகனையே அமைச்சர் காந்தி முன்னிலைப்படுத்த, இராணிப்பேட்டை மாவட்ட திமுகவினர் மட்டுமல்ல, அறிவாலயமே இதை ரசிக்கவில்லை. அந்த வகையில் அமைச்சர் காந்திக்கு மனதிற்குள் மிகப்பெரிய விரக்தி அதனால இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் விஷயத்தில எப்படியாவது சக்சஸ் பண்ணிடனும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆசியோடு அணைக்கட்டு நந்தகுமார், தொழிலதிபர் சேகர் ரெட்டி மூலம் அமைச்சர் காந்தியை வளைத்து, மாவட்ட பொருளாளர் பதவியில் இருக்கும் ஏ.வி.சாரதிக்கு மாவட்ட செயலாளர் பதவி மீது தீராத காதல்! வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர், அரக்கோணம் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் ஆதரவாளர் ஏ.வி.சாரதியும் பெரிய பண முதலைதான், தாராள செலவாளி என்பதால் மாவட்டத்தில் கட்சியினர் மத்தியில் பெரிய அளவில் பேசப்படுகிறார். அடிக்கடி சென்னை போகும் சாரதி முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு வணக்கம் போட்டுக்கொண்டிருக்கிறார் எம்பி சீட் கேட்டு ஏமாந்தவர், மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க தீவிரமாக இருக்கிறார் அமைச்சர் காந்தியோ என் மகனுக்கு கிடைக்கலனா கூட பரவாயில்லை ஏ.வி.சாரதிக்கு கிடைத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். அடுத்தவர் ஆற்காடு எம்எல்ஏவும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாப்பிள்ளை சபரீசன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மூலம் மாவட்ட செயலாளர் பதவியை அடைய முயற்சி செய்கிறார் இளைஞரணி மாவட்ட செயலாளர் பதவியை அடைந்த அதே ரூட்! ஆனால் ஒரு பகுதி திமுகவினர் ஈஸ்வரப்பனின் நவீன அரசியலை எதிர்க்கின்றனர்.
சோளிங்கர் அரக்கோணம் இரண்டு தொகுதிகளையும சேர்த்து கிழக்கு மாவட்டமா அறிவிப்பாங்க என்று ஆருடம் சொல்லும் திமுகவினர் தலைமை செயற்குழு உறுப்பினர் சோளிங்கர் அசோகனை குறிப்பிடுகின்றனர் இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி நகரமன்ற தலைவர், நகராட்சி நிர்வாகத்தில் ஆயிரம் குளறுபடி நல்ல பெயரை தொலைச்சிட்டு தேடிக்கொண்டிருக்கிறார் அசோகன். நான் வன்னியர் சமுதாயம் அமைச்சர் காந்தியோட விசுவாசி என் மனைவி சுந்தராம்பாள் மாவட்ட கவுன்சிலர் மாவட்ட சேர்மனுக்கு முயற்சி பண்ணேன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரா இருந்தவன், இப்ப நெமிலி மத்திய ஒன்றிய செயலாளரா இருக்கேன் இது எல்லாம் எனக்கு காந்தி அண்ணன் கொடுத்த வாய்ப்பு அதேமாதிரி மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்க்கறதில என்ன தப்பு? என்று மீசையை தடவும் சயனபுரம்பெருமாள் திமுகவினரிடம் பயோடேட்டாவை சொல்லிக்கொண்டிருப்பதோடு அமைச்சர் காந்தியின் மகன் வினோத்காந்திக்கு வால் பிடித்துக்கொண்டிருக்கிறார் நம்பிக்கையோடு.
மாவட்டத்தை கிழக்கா பிரிங்க இல்லாட்டி மேற்கா பிரிங்க எனக்கு மாவட்ட செயலாளர் பதவி வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கும் சயனபுரம் வடிவேலு 2010க்கு அப்புறம் ஆரம்பித்த இவரின் அரசியல் படுவேகம் காட்டும் சயனபுரம் வடிவேலு நானும் சத்திரியன்தான் என்று சவுண்டு விடுகிறார். அமைச்சர் காந்தி, ஜெகத்ரட்சகன் எம்பி இருவர் தயவில் பொருளாதார முன்னேற்றம் கண்டவ சேர்மனாக இருப்பதால் நெமிலி யூனியனை ஒருவழி பண்ணிக்கொண்டிக்கிறார் இவரைச்சுற்றி நிறைய சர்ச்சைகள் உண்டு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ இரண்டு பதவி மீதும் வடிவேலுக்கு ஆசை! அரக்கோணம் எம்எல்ஏ சீட் என்றால் தன் மனைவி பவானிக்கு என்பதில் தீர்மானமாக இருக்கிறார் கொஞ்சம் சுயநல அரசியலோடு பயணம் செய்கிறவர் என்பதால் வடிவேலுக்கு திமுகவினர் மத்தியில் எதிர்ப்பும் உண்டு.
மேற்கு கிழக்காக பிரிப்பாங்க என்று சொல்லும் திமுகவினர் கிழக்கில் சோளிங்கர், அரக்கோணம் இரண்டு தொகுதிகளும் இடம் பெறலாம். அதற்கு இரண்டு சயனபுரங்களும் மல்லு கட்டுகிறார்கள். மேற்கில் ஆற்காடு இராணிப்பேட்டை தொகுதிகள், இதில ஏ.வி.சாரதியும் ஈஸ்வரப்பன் எம்எல்ஏவும் தீவிரமா இருக்காங்க நடுவுல வினோத்கர்ந்தியும் நிற்கிறார் இதுதான் இராணிப்பேட்டை மாவட்ட திமுகவினர் சொல்லும் விஷயங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
– வில்வன் வேம்பன் அரசன்
What’s your reaction?
Love1
Sad0
Happy1
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply