இலக்கு எம்எல்ஏ சீட்டு..
ஏழாச்சேரி கார்த்திகேயன்
கனவு பலிக்குமா…?முதல்ல பணத்தை சம்பாதிக்கணும் அப்புறம் மற்றதெல்லாம் தானா தேடி வரும் அதற்கு சமீபத்திய உதாரணமா திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யார் சட்டமன்ற தொகுதி வெம்பாக்கம் ஒன்றியம் சின்னஏழாச்சேரி கிராமம் கார்த்திகேயன் பிரதர்ஸ் வளர்ச்சியை சொல்லலாம். அப்பா கலைமணி ஒன்றிய கவுன்சிலர், அம்மா நாகம்மாள் ஏழாச்சேரி கிராம பஞ்சாயத்து தலைவர், கார்த்திகேயன், முத்து, சங்கர் மூவரும் பிரதர்ஸ் இதில கார்த்திகேயன் 2012ல் விஏஒ வேலைக்கு போனவர் 2022ல் விருப்ப ஒய்வில் எழுதி கொடுத்திட்டு வெளியில வந்திட்டார் அரசுப் பணியில் இருந்த இடைப்பட்ட காலத்தில் தன்னுடைய பொருளாதாரத்தை திருப்திகரமா என்பதைவிட போதும் போதும் என்கிற அளவிற்கு வளர்த்துக்கொண்டார். ஏழாச்சேரி, குண்டியான்தண்டலம், பாவூர், சோதியம்பாக்கம், அரசாணிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பஞ்சமர் தரிசு நிலம் அதிகம் குறைந்த விலையில் பினாமி பெயர்களில் வாங்கி அதை மாற்றி அதிக விலைக்கு சென்னை பணக்காரர்களுக்கு விற்று பணம் பார்த்தவர், சகட்டு மேனிக்கு குவிந்த பணத்தில், நாலு கிரஷர் பிளாண்டை (அனைத்தும் லேட்டஸ்ட் மிஷின்கள்) உருவாக்கிவிட்டார். அருகாமையில் இருக்கும் கிரஷர்காரர்களிடம் கெத்து காட்ட ஆரம்பித்தார்.
சொத்தை சம்பாதிப்பது பெரியதாய் தெரியவில்லை அதை காப்பாற்றுவது பெரிய விஷயமாய் கார்த்திகேயனுக்கு மனதில் பட, பாதுகாப்புக்கு ஆளுங்கட்சியான திமுகவில் ஞானஸ்தானம் எடுத்துக்கொண்டார் கார்த்திகேயன். வடக்கு மாவட்டத்தில் அயலக அணியில் மாவட்ட துணை தலைவர் பதவி இந்த விசிட்டிங் கார்டை பாக்கெட்டில் வச்சிகிட்டு, திமுக நிகழ்ச்சிகளுக்கு தாராளமாக செலவு செய்து தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள, அதற்கு முழு உறுதுணையாய் வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சங்கர் இருக்க, அவர் மூலம் வடக்கு மாவட்ட செயலாளரும், ஆரணி திமுக எம்பியுமான தரணிவேந்தனின் நிழலை பின் தொடர ஆரம்பித்தார்.
அரசு நிகழ்ச்சி அரசியல் நிகழ்ச்சி எதுவானாலும் முன்னாடி வந்து நிற்கிறார் தாராளாமாகவும் ஏராளமாகவும் செலவு செய்கிறார். அடுத்து எம்எல்ஏ சீட்டு வாங்கிடனும் எத்தனை கோடி செலவானாலும் எப்படியாவது ஜெயிச்சிடனும்னு வேகம் காட்டுகிறார் ஆனால் சீனியர் திமுக நிர்வாகிகள் மட்டுமல்ல பெரும்பான்மை தொண்டர்கள் கூட கார்த்திகேயன் செயல்பாடுகளை ரசிக்கவில்லை. அதைப்பற்றி கார்த்திகேயன் கவலைப்படவில்லை பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்கிற நம்பிக்கையில் தைரியமாக வலம் வருகிறார்.
பணம் இருக்கறவங்க செலவு பண்றவங்க எல்லாம் எம்எல்ஏ சீட் கனவு கண்டா… திமுகவில் காலம் காலமாக உழைச்சவன் கதி? கார்த்திகேயனின் பழைய மற்றும் புதிய வாழ்க்கை குறித்த நதி மூலம் ரிஷி மூலம் பார்த்துக்கொண்ருக்கிறார்கள் லோக்கல் திமுகவினர். அரசியலில் எதுவும் நடக்கலாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
– ஆலவாயர்
Leave a Reply