விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட தாயில் பட்டி ஊராட்சி இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம்தான் மேல போதை நாச்சியார் புறம் இங்கு 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இங்கு வசிக்கும் மக்கள் எல்லாமே சொந்த வீடுகளில் வசித்து வருகிறார்கள். இங்கு உள்ள மக்கள் எண்பது சதவீதம் பட்டாசு தொழில் சாலைகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் மீத உள்ள நபர்கள் 100 நாள் வேலை மட்டும் கட்டிட வேலைகளுக்கு செல்பவர்கள். இந்த கிராமத்தைச் சுற்றி சில பகுதிகளில் பட்டாசு தொழிற்சாலை அமைந்துள்ளது இங்கே வேளாண்மைகள் சில நடந்து வருகிறது. இந்த கிராம மக்களின் நீண்ட நாள் பிரச்சனைகளை தொகுதி எம்எல்ஏ மற்றும் எம்பி இவர்களிடம் பலமுறை தெரிவித்து எந்த ஒரு பயனும் இல்லை என அப்பகுதி மக்கள் கண்ணீர் வடித்து வருகிறார்கள். மேல கோதை நாச்சியார்புரம் இந்த கிராமம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட கிராமமாகும். வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் மேல கோதை நாச்சியாபுரம் இங்குள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டி. இந்தத் தொட்டியானது 7 /5 /84 திரு வா பாலகிருஷ்ணன் சிவகாசி எம்எல்ஏவால் திறந்து வைக்கப்பட்டது .அவருடன் திரு பெ. தங்கப்பன் பி எஸ் சி கோட்ட வளர்ச்சி அலுவலர் சிவகாசி இவரும் உடன் இருந்தார் .இந்த தொட்டி கட்டி முடித்து 40 ஆண்டுகள் ஆகியும் எந்த ஒரு பராமரிப்பு பணிகள் கூட நடக்கவில்லை தண்ணீர் தொட்டியில் இருக்கும் தண்ணீரில் நிறங்கள் பச்சையாக காணப்படுகிறது. இந்தத் தண்ணீரை 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.இந்த தண்ணீரை தான் பயன்படுத்த வேண்டிய கட்டாயமாக உள்ளது இதை தான் இத்தனை ஆண்டு காலமாக. பயன்படுத்தி வருகிறார்கள் இந்த தண்ணீரை பயன்படுத்தினால் மக்களுக்கு வரும் நோய் என்னவென்று தெரியாமல் பயன்படுத்தி வருகிறார்கள் அசுத்தமான தண்ணீரை உட்கொள்வதால் பல நீர் பரவும் நோய்கள் ஏற்படுகின்றன இது இறுதியில் குறிப்பிடத்தக்க உயிர்களை இழக்க வழிவகிக்கிறது டைப் ஆயிடும் காலரா. மற்றும் வயிற்றுப்போக்கு சால்மோ பல நோய்கள் தண்ணீரால் பரவும் நோய்களாகும் இந்த தண்ணீரால் பரவும் நோய்காலராவை பற்றி சில வரிகளில் நாம் காணலாம். நீர் மூலம் பரவும் நோயாகும் இது பொதுவாக கிராமப்புற சமூகங்களில் ஏற்படுகிறது அங்கு மக்கள் எப்போதும் சரியான சுகாதாரத்தை அணுகுவதில்லை காலரா ஒரு தீங்கு விளைவிக்கும் நோயாகும் இது சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மரணத்தை விளைவிக்கும் காலரா மாசுபட்ட தண்ணீரால் பரவுகிறது. இது கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நீர் இழப்பு காரணமாகிறது குறிப்பாக மோசமான சுகாதாரம் உள்ள பகுதிகளில் மற்றும் சிறந்த நீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீரை பயன்படுத்துகிறது இது பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது அதாவது கழுவுதல் குளித்தல் சுத்தம் செய்தல் போன்றவை காலரா மிகவும் தொற்று நோயாக இருப்பதால் மிக எளிதாக ஒரு வெடிப்பை ஏற்படுத்தலாம் மற்றும் நோய் தொற்று ஏற்பட சில மணி நேரங்களில் கூட மரணத்தை ஏற்படுத்தும். சில நேரினால் பரவும் நோய்கள் சில வாரங்களுக்குள் தானாகவே குணமாகலாம் ஆனால் காலரா போன்ற நோய்கள் சிகிச்சை அளிக்கப்பட விட்டால் உயிரிழப்பை ஏற்படுத்தும் இந்த தண்ணீர் தொட்டியில் பல ஆண்டுகளாக பருகி வந்த தண்ணீரை குடித்ததனால் மக்களுக்கு நோய்கள் எதுவும் வந்து இருக்கலாம் என தெரிகிறது ஆகையால் அங்குள்ள மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என இதன் வாயிலாக தெரிவிக்கிறேன். இது மட்டுமல்ல அந்தப் பகுதியில் சரியான திருவிளக்கு மற்றும் சுடுகாடு வசதி இல்லை என தெரிவித்தனர் ஆகையால் இந்த கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவார்களா. இந்த கிராமத்தைப் பற்றி சாத்தூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ரகுராமன் அவர்களிடம் பேசிய போது. எனக்கு எதுவும் தெரியாது அந்த பகுதி மக்களும் என்னிடம் மனு அளிக்கவில்லை ஆகையால் நீங்களும் வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள் என தெரிவித்தார். பொதுவாகவே எம்எல்ஏ ரகுராமன் அவர்கள் எனக்கு யாரும் தகவல் சொல்லவில்லை அதனால் எனக்கு தெரியாது என இரண்டு வரிகளில் மட்டுமே முடித்து விடுவார். இவர் சாத்தூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பொம்மையை போன்று தான் காட்சியளிக்கிறார். வெம்பக்கோட்டை யூனியன் மேலாளர் அவர்களுடன் தொடர்பு கொண்ட போது. அவர் தொலைபேசியை எடுக்கவில்லை பலமுறை அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போது புதிதாக நம்பர் வந்திருப்பதால் அவர் போனை எடுக்க மறுத்துவிட்டார்
– கருப்புசாமி
Leave a Reply