Save 20% off! Join our newsletter and get 20% off right away!

உசிலம்பட்டி;கூட்டணி நெருக்கடியால்..ஆதவ் அர்ஜூனாவை இடைநீக்கம் செய்தது நியாயமாக இருந்தாலும்.,தைரியமாக பேசிய ஆதவ் அர்ஜூனாவுக்கு குவியும் பாராட்டுக்கள் …

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் வளாகத்தில் பழமை வாய்ந்த குளம் மீட்கப்பட்ட இடத்தில் இன்று மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு நூற்றுக்
கணக்கான மரக்கன்றுகளை நட்டு வைத்த நடிகர் சௌந்திரராஜா, மகாகவி பாரதியார் திரு உருவ
படத்திற்கு, குழந்
தைகளுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சௌந்திரராஜா மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் பல்வேறு பகுதியில் மரக்
கன்றுகளை நட்டு வருகிறோம், இந்த ஊரணி முன்று தலை
முறைக்கு பின் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்திலும் மரகன்றுகளை நட்டு பராமரிக்க உள்ளோம், இன்று பாரதியார் பிறந்த தினத்தில்
இந்த நிகழ்வை எங்கள் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையுடன், தமிழக வெற்றிக் கழக தொண்டர்களும் இணைந்து நூற்றுக்
கணக்கான மரக்
கன்றுகளை நட்டு வைத்துள்ளோம்.
புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு
பேசிய ஆதவ் அர்ஜூனா – வை கூட்டணி நெருக்கடியால் திருமா அண்ணன் இடைநீக்கம் செய்துள்ளார். அவரை பொறுத்த அளவில் நியாயமாக இருந்தால்
கூட ,
நான் ஆதவ் அர்ஜூனா-வை பாராட்டுகிறேன். அவர் உண்மையை தைரியமாக பேசியதற்கு பாராட்டுவேன்.
தமிழக வெற்றி கழகம் என சொன்னதில் இருந்து எனது பங்களிப்பை அளித்து பிப்ரவரி மாதம் முதல் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறேன்.
இது நாள் வரை தம்பியாக இருந்தேன், ரசிகனா இருந்தேன், இப்போது தொண்டனாக தினமும் வேலை செய்து கொண்டு இருக்கிறேன். எல்லோரும் வேலை செய்ய வேண்டும்.,
ஏனென்றால், மாற்றம் வேண்டும் என நினைக்கும் ஏராளமான இளைஞர்கள், ஏராளமான மக்கள் ஒட்டு போடாமல் கூட இருந்தவர்கள் இந்த தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க உள்ளனர் அந்த நம்பிக்கை உள்ளது அதில் நானும் ஒருவன்.
உசிலம்பட்டி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட வாய்ப்
புண்டா என்ற கேள்விக்கு ஆளை விடுங்க அந்த மாதிரி கிடையாது, என் அண்ணன் விஜய்-யை முதல்வராக்க கடுமையாக உழைக்கலாம் என இருக்கிறேன். அதற்கு பின்னாடி வருவது சாமி  பார்த்துக் கொள்ளும், எங்கள் தளபதி அண்ணன் பார்த்துக் கொள்வார்.

– நா.ரவிச்சந்திரன்