பாஜக வெற்றி பெற்றால் மசூதியை இடித்து விட்டு அயோத்தி போல் புதிய இந்து கோவில்
பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றால் இஸ்லாமிய மசூதி ஒன்றை இந்து கோவிலாக மாற்றும் என அசாம் முதல் மந்திரி பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஜார்க்கண்டில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா பேசும்போது கூறியதாவது
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 300 இடங்களில் வெற்றி பெற்றது இதன் மூலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது இந்த முறை பாரதிய ஜனதா கட்சி 400 இடங்களை கைப்பற்றினால் மதுராவில் உள்ள கிருஷ்ணஜன்ம பூமியில் புதிதாக கோவில் எழுப்பப்படும்
இதே போல் வாரணாசியில் ஞான வாபி மசூதி இருக்கும் இடத்திலும் புதிதாக இந்து கோவில் கட்டப்படும்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்ஙப்பட்டு பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவுடன் சேர்க்கப்படும் என பேசி உள்ளார்
மசூதி இருக்கும் இடத்தில் இந்து கோவில் கட்டப்படும் என அசாம் முதல் மந்திரி பேசிய பேச்சு இந்தியா முழுவதும் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Leave a Reply